கண்ணனூர் ஊராட்சி (திருச்சிராப்பள்ளி)


கண்ணனூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள துறையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 12 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6233 ஆகும். இவர்களில் பெண்கள் 3125 பேரும் ஆண்கள் 3108 பேரும் உள்ளனர்.

கண்ணனூர்
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி பெரம்பலூர்
மக்களவை உறுப்பினர்

அருண் நேரு

சட்டமன்றத் தொகுதி துறையூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஸ்டாலின் குமார் (திமுக)

மக்கள் தொகை 6,233
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அடிப்படை வசதிகள்

தொகு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 689
சிறு மின்விசைக் குழாய்கள் 8
கைக்குழாய்கள் 28
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3
உள்ளாட்சிக் கட்டடங்கள் 46
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 16
ஊரணிகள் அல்லது குளங்கள் 5
விளையாட்டு மையங்கள்
சந்தைகள் 2
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 58
ஊராட்சிச் சாலைகள் 2
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11

அமைவிடம்

தொகு

கொல்லிமலையில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் அய்யாற்றின் கிழக்கு கரையில் கண்ணனூர் அமைந்துள்ளது. திருச்சி மாவட்ட எல்லைப்பரப்பின் வடக்கு பகுதியில், திருச்சியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் துறையூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் மாநில நெடுஞ்சாலை எண் 161 இல் உள்ளது.

வரலாறு

தொகு

வள்ளுவப்பாடி நாடு என்பது கண்ணனூர் என்னும் ஊரை மையமாகக் கொண்ட நாட்டுப்பகுதி எனத் தெரியவருகிறது. இப்பகுதியில் இக்காலத்திலும் வள்ளுவன் குடியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவதாக மு. அருணாசலம் தெரிவிக்கிறார்.[7]

பொருளாதாரம்

தொகு

வேளாண்மைத் தொழில் இங்கு முதன்மையாக திகழ்கிறது. அய்யாற்றின் நீர் வளம் இங்கு ஆதாரமாக உள்ளது. நெசவுத்தொழில், மண்பாண்டத்தொழில், புட்டுத்தொழில் (பிட்டு) முதலான தொழில்களும் இங்குள்ள மக்கள் செய்து வருகின்றனர் .

சிற்றூர்கள்

தொகு

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:

  1. வடக்குவெளி சமத்துவபுரம்
  2. சின்னசேலம்பட்டி
  3. கொத்தம்பட்டி
  4. கண்ணனூர்
  5. மருக்கலாம்பட்டி
  6. நல்லியம்பட்டி
  7. பெத்துப்பட்டி

கல்வி நிறுவனங்கள்

தொகு

கல்லூரிகள்

தொகு

இமயம் கல்வி நிறுவனங்களின் சார்பில் கலை அறிவியல் கல்லூரி ,பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி , பல்தொழில் நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகள்

தொகு
  1. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி
  2. அரசு உயர்நிலைப் பள்ளி
  3. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
  4. அரசு ஆதிதிராவிட நலத் தொடக்கப்பள்ளி
  5. கலையரசி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி
  6. ஆதவன் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி

நூல் நிலையம்

தொகு

1. கிராமப்புற நூலகம்

வங்கிகள்

தொகு

1. கரூர் வைசியா வங்கி]

2.இந்தியன் ஓவர்ஸ்சீசு வங்கி

3.அஞ்சல் நிலையம்

4.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம்

மருத்துவமனை

தொகு

1.அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2.அரசு கால்நடை மருத்துவமனை

கோவில்கள்

தொகு
 
கண்ணணூர்

1.செல்லாண்டியம்மன் கோவில்

2.அங்காளம்மன் கோவில்

3.மகாலட்சுமி அம்மன் கோவில்

4.பகவதி அம்மன் கோவில்

5.ஆகாச கருப்புசாமி கோவில்

6.முருகன் கோவில்

7.பாப்பாத்தி அம்மன் கோவில்

வாரச்சந்தை

தொகு

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை கண்ணணூரில் கூடுகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமமக்கள் இச்சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "துறையூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "Kannanur, Thuraiyur History". பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  8. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.