கண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்
க.தே.ம.தோ தேயிலை அருங்காட்சியகம் (KDHP Tea Museum) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தின், மூணாறில் அமைந்துள்ளது ஒரு தொழில் மற்றும் வரலாறு அருங்காட்சியகம் ஆகும். டாடா தேயிலை அருங்காட்சியகம் என்பது இதன் அலுவல்ரீதியான பெயர், ஆனால் இது அமைந்துள்ள நள்ளுதண்ணி எஸ்டேட் என்றும் , [1] அல்லது கண்ணன் தேவன் மலைத் தோட்ட (கே.டி.எச்.பி) தேயிலை அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது.[2]
நிறுவப்பட்டது | 1 ஏப்ரல் 2005 |
---|---|
அமைவிடம் | இந்தியா, கேரளம், இடுக்கி மாவட்டம், மூணார் |
ஆள்கூற்று | 10°05′44″N 77°03′03″E / 10.095544°N 77.050717°E |
வகை | தேநீர் அருங்காட்சியகம் museum, தொழில் மற்றும் வரலாறு அருங்காட்சியகம் |
வரலாறு மற்றும் காணத்தக்க இடங்கள்
தொகுஇந்தத் தேயிலைத் தோட்டமானது கண்ணன் தேவன் மலைத் தோட்ட (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. (KDHP) - இந்தத் தோட்டம் 1880 களில் இருந்து உள்ளது. இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 1 அன்று திறக்கப்பட்டது.[3] தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் கேரளத்தின் மலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த அம்சங்களை தேயிலை அருங்காட்சியகம் பாதுகாக்கிறது. டாடா டீ நிறுவனமானது ஒளிப்படங்கள் மற்றும் எந்திரங்களை உள்ளடக்கிய இந்த அருங்காட்சியகத்தைத் திறந்தது, இது இடுகியின் வளர்ச்சியியல் தேயிலைத் தொழிலில் ஏற்படுத்திய திருப்புமுனையை சித்தரிக்கிறது.. நல்லதண்ணி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கேரளத்தில் ஒரு முக்கிய தேயிலை தோட்ட மையமாக மாற்றிய அதன் முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்துகிறது, மேலும் இங்கு 1905 முதல் தொடக்க நிலை தேயிலை உருளை முதல் முழு தானியங்கி தேயிலை தொழிற்சாலை வரையிலான கருவிகளையும், தேயிலை பதப்படுத்துதலின் பல்வேறு கட்டங்களையும், தேயிலைத் தரப் பரிசோதனைக்கான பல்வேறு சில்லகான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. மற்றும் கேரள கருப்பு தேயிலை வகைகளின் உற்பத்தி ஆகியவற்றைப் பார்வையாளர்களும், தேயிலை பிரியர்களும் அறியலாம். தோட்டத்தின் மின் உற்பத்தி ஆலை 1920 களிலிருந்து இருந்து வருகிறது; குண்டலா பள்ளத்தாக்கு தொடருந்து பாதையில் தொடருந்து என்ஜின் சக்கரம் 1924 வாக்கில் மூணாருக்கும் டாப் ஸ்டேஷனுக்கும் இடையில் நிறுத்தப்பட்டது. அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவில் பாரம்பரிய பங்களா தளபாடங்கள் மற்றும் கேரளத்தின் காலனித்துவ பகுதியின் அலுவலக உபகரணங்கள் உள்ளன. மேலும் இங்கு பல்வேறு வகையான தேயிலைகளில் தேநீர் வகைகளைச் சுவைப்பது மற்றொரு ஈர்க்க்கூடிய அம்சமாகும்.[1] பெரியகனல் தேயிலைத் தோட்டத்தில் 2ஆம் நூற்றாண்டின் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இது அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [4]
வசதிகள்
தொகுஇந்த அருங்காட்சியகம் மூனாறு நகரத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் (2.49 mi) தொலைவில் உள்ள நள்ளுதண்ணி தோட்டத்தில் அமைந்துள்ளது . அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஆலுவா (112 கிலோமீட்டர்கள் (69.59 mi)); கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் 72 கிலோமீட்டர்கள் (44.74 mi) தொலைவில் உள்ளது.[1] கேரள மாநிலப் போக்குவரத்துக் கழகமானது வெவ்வேறு இடங்களிலிருந்து மூணாறு நகரத்திற்கு பேருந்துகளை சேவையை வழங்குகிறது.[5] இந்த அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை (அல்லது மாலை 5 மணி வரை) திறந்திருக்கும். இது திங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மூடப்படும். முகவரி: டாடா தேயிலை அருங்காட்சியகம், நள்ளுதண்ணி எஸ்டேட், மூணார்.[4] கே.எல் -685 612, இடுகி மாவட்டம், கேரளா.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Tea Museum, Munnar". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
- ↑ "Tata Tea Museum (Kannan Devan Tea Museum)". tripadvisor. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
- ↑ "Company Profile". kdhptea.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
- ↑ 4.0 4.1 "TATA Tea Museum". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
- ↑ "KSRTC Bus Time" (in German). munnarinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)