கதிரவ மறைப்பு சூன் 21, 2020
வலய கதிரவ மறைப்பு (annular solar eclipse) ஒன்று 2020 சூன் 21 இல் நிகழ்ந்தது. புவிக்கும் கதிரவனுக்கும் இடையே நிலா வரும் போது கதிரவ மறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ புவியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் கதிரவனுடையதை விடக் குறைவாக இருக்கும் போது வலய மறைப்பு ஏற்படுகிறது. இதன்போது, கதிரவனின் பெரும்பாலான கதிர்கள் புவிக்கு வருவது தடுக்கப்பட்டு சூரியன் வட்டவலயமாகத் தோன்றுகிறது. வலய மறைப்பு புவியின் ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தை சுற்றியுள்ள பகுதியில் தெரியும்.[1]
சூன் 21, 2020-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | வலய மறைப்பு |
காம்மா | 0.1209 |
அளவு | 0.994 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 38 வி (0 நி 38 வி) |
ஆள் கூறுகள் | 30°30′N 79°42′E / 30.5°N 79.7°E |
பட்டையின் அதியுயர் அகலம் | 21 km (13 mi) |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 6:41:15 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 137 (36 of 70) |
அட்டவணை # (SE5000) | 9553 |
இந்த கதிரவ மறைப்பு 2019 சூலை 2 மறைப்பிற்குப் பின்னர் ஒரு சந்திர ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்டுள்ளது.
இந்த வலய மறைப்பின் பாதை கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், எத்தியோப்பியா, எரித்திரியா,, சீபூத்தீ உட்பட்ட மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்கா; யெமன், ஓமான் உட்பட்ட தெற்கு அராபியத் தீபகற்பம்; தெற்கு சவூதி அரேபியா; தெற்கு பாக்கித்தான், வடக்கு இந்தியா, நேபாளம், திபெத்து உட்பட தெற்காசியாவின் சில பகுதிகள், இமயமலை; தெற்கு சீனா, தைவான் உட்பட்ட கிழக்காசியா, குவாம் உட்பட்ட மைக்குரோனீசியா ஆகியவற்றூடாக சென்றது.[2] பகுதி மறைப்பு ஆப்பிரிக்காவின் ஏனைய பகுதிகள், தென்கிழக்கு ஐரோப்பா, ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள் (வடக்கு சைபீரியா, சாவகம் தவிர்த்து), நியூ கினி, வடக்கு ஆத்திரேலியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. ஐரோப்பாவில் பகுதி மறைப்பு பெருஜியா, லிவீவ், யாரோசிலாவ் ஆகியவற்றில் தென்பட்டது.[2]
ஓமான், மற்றும் இந்தியாவில் து திசம்பர் 26, 2019 வலய மறைப்பிற்குப் பின்னர் 6 மாதத்திற்குப் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது வலய மறைப்பாகும்.[3]
படிமங்கள்
தொகுகாட்சியகம்
தொகு-
பகுதி மறைப்பு: சனா, 5:09 UTC
-
பகுதி மறைப்பு குயிம்ரி, ஆர்மீனியா, 5:45 UTC
-
பகுதி மறைப்பு: கொழும்பு, 5:48 UTC
-
பகுதி மறைப்பு: லாகூர், 6:49 UTC
-
பகுதி மறைப்பு: காட்மாண்டு, 6:51 UTC
-
பகுதி மறைப்பு: பக்கூர், பிலிப்பீன்சு, 7:31 UTC
-
பகுதி மறைப்பு: கொல்கத்தா, 7:41 UTC
-
பகுதி மறைப்பு: பெய்ஜிங், 7:50 UTC
-
பகுதி மறைப்பு: சினான் நகரம், 7:56 UTC
-
பகுதி மறைப்பு: டொங்பிங், சீனா, 7:56 UTC
-
பகுதி மறைப்பு: கண்டாரா, பிலிப்பீன்சு, 8:01 UTC
-
பகுதி மறைப்பு: தாய்வான், 8:05 UTC
-
பகுதி மறைப்பு: யோ டொங், ஆங்காங், 8:08 UTC
-
பகுதி மறைப்பு: பங்கை பினாங்கு, இந்தோனீசியா, 8:10 UTC
-
சியாமென், சீனா, 8:11 UTC
-
பகுதி மறைப்பு: புக்குவோக்கா, 8:12 UTC
-
பகுதி மறைப்பு: சியாய், தாய்வான், 8:13 UTC
தொடர்பான மறைப்புகள்
தொகுசாரோசு 137
தொகு2020 சூன் 21 மறைப்பு சாரோசு தொடர் 137 இன் ஒரு நிகழ்வாகும். இத்தொடரின் நிகழ்வுகள் 18 ஆண்டுகள் 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறுகின்றன. இத்தொடரில் மொத்தம் 70 மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடரின் முதலாவது நிகழ்வு 1389 மே 25 இல் பகுதி மறைப்பாக இடம்பெற்றது. இத்தொடரில் 1533 ஆகத்து 20 முதல் 1695 திசம்பர் 6 வரை முழுமையான மறைப்புகளும், 1713 திசம்பர் 17 முதல் 1804 பெப்ரவரி 11 வரை கலப்பு மறைப்புகளும் நிகழ்கின்றன. 1822 பெப்ரவரி 21 முதல் 1876 மார்ச் 25 வரை முதல் தொகுதி வலய மறைப்புகளும், 1894 ஏப்ரல் 6 முதல் 1930 ஏப்ரல் 28 வரை இரண்டாவது தொகுதி கலப்பு மறைப்புகளும் இடம்பெறுகின்றன. 1948 மே 9 முதல் 2507 ஏப்ரல் 13 வரை இரண்டாவது தொகுதி வலய மறைப்புகள் இடம்பெறுகின்றன. இத்தொடரின் கடைசி நிகழ்வு (இல. 70) 2633 சூன் 28 இல் பகுதி மறைப்பாக நிகழும். இத்தொடரின் மிக நீண்ட முழுமையான மறைப்பு 2 நிமிடங்கள் 55 செக்கன்களுக்கு 1569 செப்டம்பர் 10 நிகழ்ந்தது. இத்தொடரின் மிக நீண்ட வலய மறைப்பு 2435 பெப்ரவரி 28 இல் 7 நிமிடங்கள் 5 செக்கன்களுக்கு நிகழும்[4]
1901-2100 வரையான காலப்பகுதியில் இத்தொடரின் 30-40 நிகழ்வுகள் : | ||
---|---|---|
30 | 31 | 32 |
ஏப்ரல் 17, 1912 |
ஏப்ரல் 28, 1930 |
மே 9, 1948 |
33 | 34 | 35 |
மே 20, 1966 |
மே 30, 1984 |
சூன் 10, 2002 |
36 | 37 | 38 |
சூன் 21, 2020 |
சூலை 2, 2038 |
சூலை 12, 2056 |
39 | 40 | |
சூலை 24, 2074 |
ஆகத்து 3, 2092 |
குறிப்புகள்
தொகு- ↑ "EclipseWise - Eclipses During 2019". eclipsewise.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
- ↑ 2.0 2.1 "Annular Solar Eclipse on June 21, 2020". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
- ↑ World Atlas of Solar Eclipse Paths
- ↑ Saros Series Catalog of Solar Eclipses நாசா Eclipse Web Site.
உசாத்துணைகள்
தொகு- solar-eclipse.de: The annular solar eclipse of 06/21/2020
- Earth visibility chart and eclipse statistics Eclipse Predictions by Fred Espenak, நாசா/GSFC