2019 திசம்பர் 26 கதிரவ மறைப்பு

சூரிய கிரகணம்

வலய கதிரவ மறைப்பு (annular solar eclipse) ஒன்று 2019 திசம்பர் 26 இல் நிகழ்ந்தது. புவிக்கும் கதிரவனுக்கும் இடையே நிலா வரும் போது கதிரவ மறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ புவியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் கதிரவனுடையதை விடக் குறைவாக இருக்கும் போது வலய மறைப்பு ஏற்படுகிறது. இதன்போது, கதிரவனின் பெரும்பாலான கதிர்கள் புவிக்கு வருவது தடுக்கப்பட்டு சூரியன் வட்டவலயமாகத் தோன்றுகிறது. வலய மறைப்பு புவியின் ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தை சுற்றியுள்ள பகுதியில் தெரியும்.[1]

திசம்பர் 26, 2019-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புவலய மறைப்பு
காம்மா0.4135
அளவு0.9701
அதியுயர் மறைப்பு
காலம்220 வி (3 நி 40 வி)
ஆள் கூறுகள்1°00′N 102°18′E / 1°N 102.3°E / 1; 102.3
பட்டையின் அதியுயர் அகலம்118 km (73 mi)
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு5:18:53
மேற்கோள்கள்
சாரோசு132 (46 of 71)
அட்டவணை # (SE5000)9552

இந்த வலய மறைப்பு சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், பாக்கித்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வடக்கு மரியானா தீவுகள், குவாம் ஆகிய பகுதிகளில் தென்பட்டது. இவ்வலய மறைப்பின் பாதையில் கோழிக்கோடு, கோயம்புத்தூர், யாழ்ப்பாணம், திருக்கோணமலை, பத்தாம், சிங்கப்பூர், சிங்காவாங் ஆகிய நகரங்களிலும் தெரிந்தன. தோகா, மதுரை, பெக்கான்பாரு, துமாய், ஜொகூர் பாரு, கூச்சிங் ஆகிய நகரங்கள் மறைப்பின் வழியை குறுகிய இடைவெளியில் இழந்தன.

விண்வெளி வானிலை நிலைமைகளை இயக்குவதில் சூரிய குறுக்க்க் காந்தப்புலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இக்காந்தப்புலங்களின் நேரடி அவதானிப்புகள் சவாலானவை. கோட்பாட்டு மாதிரிகளை அவதானிப்புகள் மூலம் அறிய இத்தகைய கதிரவ மறைப்பு நிகழ்வுகள் அறிவியலாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. இந்த வருடாந்திர கிரகணத்திற்கான காந்தப்புல அமைப்பு தரவு-கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளின் கலவையைப் பயன்படுத்தி கணிக்கப்படுகிறது. கணிப்பு முடிவுகள் இங்கு காணலாம்.[2]

தோற்றும் முறை

தொகு
 
Animated path

இது 2019 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும். 2019 ஆண்டு கிரகணத்தின் மைய பாதை சவுதி அரேபிய தீபகற்பம், தென்னிந்தியா, சுமத்ரா, போர்னியோ, பிலிப்பைன்ஸ் மற்றும் குவாம் வழியாக செல்கிறது. ஒரு பகுதி கிரகணம் மத்திய பாதையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் தெரியும். இது கிழக்கு ஐரோப்பா, ஆசியாவின் பெரும்பகுதி, வடக்கு / மேற்கு ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவின் கிழக்கு, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சிறிய பகுதிகளை உள்ளடக்கும்.[1][3]

வளைய மறைப்பின் வழித்தடம்

தொகு

இந்த கதிரவ மறைப்பின் வளையத் தடம் பின்வரும் நகரங்களில் காணக்கூடியதாக இருந்தது:[3]

காட்சியகம்

தொகு

தொடர்பான மறைப்புகள்

தொகு

சாரோசு 132

தொகு

2019 திசம்பர் 26 மறைப்பு சாரோசு தொடர் 132 இன் 46-ஆவது நிகழ்வாகும். இத்தொடரின் நிகழ்வுகள் 18 ஆண்டுகள் 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறுகின்றன. இத்தொடரில் மொத்தம் 71 மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடரின் முதலாவது நிகழ்வு 1208 ஆகத்து 13 இல் பகுதி மறைப்பாக இடம்பெற்றது. இத்தொடரில் 1569 மார்ச் 17 முதல் 2146 மார்ச் 12 வரை வளைய மறைப்புகளும், 2164 மார்ச் 23 முதல் 2183 ஏப்ரல் 3 வரை கலப்பு மறைப்புகளும் நிகழ்கின்றன. 2200 ஏப்ரல் 14 முதல் 2308 சூன் 19 வரை முழுமையான கதிரவ மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடரின் கடைசி நிகழ்வு (இல. 71) 2470 செப்டம்பர் 25 இல் பகுதி மறைப்பாக நிகழும். இத்தொடரின் மிக நீண்ட மறைப்பு வளைய மறைப்பாக 6 நிமிடங்கள் 56 செக்கன்களுக்கு 1641 மே 9 இல் நிகழ்ந்தது. மிக நீண்ட முழுமையான மறைப்பு 2290 சூன் 8 இல் 2 நிமிடங்கள் 14 செக்கன்களுக்கு நீடிக்கும். இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "EclipseWise - Eclipses During 2019". eclipsewise.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
  2. "CESSI Prediction of 2019 December 26 Solar Eclipse 2019". CESSI,IISER Kolkata. 24 December 2019.
  3. 3.0 3.1 "Annular Solar Eclipse on December 26, 2019". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
  4. "Annular solar eclipse on December 26: Here are the places in India that can witness it". The Indian Express. 22 October 2019. https://indianexpress.com/article/technology/science/annular-solar-eclipse-on-december-26-here-are-the-places-in-india-that-can-witness-it-6081977/.