கதிரி பாபு ராவ்

இந்திய அரசியல்வாதி

கதிரி பாபு ராவ் (Kadiri Babu Rao) ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கனிகிரி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1980 களின் நடுப்பகுதியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 2020 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.

கதிரி பாபு ராவ்
2016 இல் கதிரி பாபு ராவ்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
முன்னையவர்உக்ர நரசிம்ம ரெட்டி முக்கு
பின்னவர்புர்ரா மதுசூதன் யாதவ்
தொகுதிகனிகிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி
முன்னாள் கல்லூரிநிசாம் கல்லூரி
வேலைஅரசியல்வாதி

ராவ், ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், சீலம்வாரிப்பள்ளி கிராமத்தில் வைர வியாபாரியான கதிரி வெங்கட நரசையாவுக்கு பிறந்தார். இவரது குடும்பம் ஐதராபாத்திற்கு குடிபெயர்வதற்கு முன்பு சீலம்வாரிப்பள்ளி அருகே கல்வி பயின்றார். 1981 இல் ஐதராபாத்து நிசாம் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

1980 களில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். மேலும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார். [1] இவர் 2004 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் கனிகிரி தொகுதியில் போட்டியிட விரும்பினார். இருப்பினும் தெலுங்கு தேசம் இவரை தர்சி சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு ஆதரவு பெற்ற சுயேச்சைப் போட்டியாளரிடம் தோற்றார்.[2] [3]

பின்னர் 2009 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் கனிகிரியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸின் கனிகிரி வேட்பாளரான முக்கு உக்ர நரசிம்ம ரெட்டி, தாக்கல் செய்த உறுதிச் சான்றில் இவரது கையொப்பம் விடுபட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, அந்த வேட்புமனுவை இந்தியத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. [4]

பின்னர் 2014 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு கனிகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [3] பின்னர் 2019 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் கனிகிரியில் போட்டியிட முயன்றார். [5] ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என். சந்திரபாபு நாயுடு இவரை தர்சி தொகுதியில் நிறுத்தினார். [6] [5] ஆனால் தேர்தலில் மேடிசெட்டி வேணுகோபாலிடம் தோற்றார். [6] [7]

இவரது 2019 தோல்விக்குப் பிறகு, ராவ், நாயுடுவின் முடிவில் அதிருப்தி அடைந்தார், அரசியல் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி, மார்ச் 2020 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்

பிற பணிகள்

தொகு

பிரகாசம் மாவட்டத்தில் கதிரி பாபுராவ் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை நடத்துவதற்காக கதிரி பாபு ராவ் கல்வி சங்கத்தை நிறுவினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Apparasu, Srinivasa Rao (11 March 2020). "Senior Andhra Pradesh leaders quit TDP for Jagan's party before civic polls" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2022.
  2. "Kanigiri TDP candidate's nomination rejected" (in ஆங்கிலம்). 7 April 2009. பார்க்கப்பட்ட நாள் 7 December 2022.
  3. 3.0 3.1 Samdani MN (11 March 2020). "TDP suffers jolt as Satish Reddy, Kadiri quit party" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2022.
  4. "Kanigiri TDP candidate's nomination rejected". பார்க்கப்பட்ட நாள் 7 December 2022."Kanigiri TDP candidate's nomination rejected". The Times of India. 7 April 2009. Retrieved 7 December 2022.
  5. 5.0 5.1 Talari, Yadedya (19 March 2019). "TDP candidate Kadiri Baburao may contest as independent from Kanigiri" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2022.
  6. 6.0 6.1 "TDP, Jana Sena leaders join YSRCP" (in en-IN). 10 March 2020. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-jana-sena-leaders-join-ysrcp/article31034086.ece. 
  7. "TDP winning Darsi Nagar Panchayat surprises YSRCP" (in ஆங்கிலம்). 18 November 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரி_பாபு_ராவ்&oldid=3820375" இலிருந்து மீள்விக்கப்பட்டது