கதைப்பாடல்


நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
கும்மிப் பாடல்
சோபனப் பாடல்
நழுங்குப் பாடல்
வாழ்த்துப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

கதை ஒன்றை பாடலாக பாடுகின்ற மரபிலமைந்த பாடல்கள் கதைப்பாடல்கள் எனப்படும். கதைப் பாடல் என்பது நாட்டாறியல் பாடல்களில் ஒருவகையாகும். இவை பாடல்களால் ஒரு கதையினை கூறுபவையாக அமைந்துள்ளன. [1]

வகைகள் தொகு

 1. புராணம் இதிகாசம் சார்ந்த தெய்வ கதைப் பாடல்கள்
 2. வரலாற்றுக் கதைப் பாடல்கள்
 3. சமூகக் கதைப் பாடல்கள் [2]

நா. வானமாமலை கதைபாடலை நான்கு வகையாக குறிப்பிட்டு, நாலாவதாக கிராம தேவதைகளின் கதைப்பாடல்கள் என்பதையும் இணைத்துக் கொள்கிறார்.

வரலாறு கதைப்பாடல் தொகு

கொள்ளையர் கதைப்பாடல் என்பது கதைப்பாடல்களில் கொள்ளையர்களை கதைதலைவனாக கொண்ட பாடல்கள். இவை மக்களுக்கு வீரமான கொள்ளையர்கள் கதையை விவரித்தன. பெரிய பண்ணையார்கள், செல்வந்தர்களிடம் கொள்ளைடித்து மக்களுக்கு நன்மை செய்த மனிதர்களை இப்பாடல்கள் புகழ்ந்தன.

 • ஜம்புலிங்கம் கதைப்பாடல்
 • சந்தனத்தேவன் கதைப்பாடல்
 • காசித்தேவன் கதைப்பாடல்
 • கவட்டைவில் கருவாயன் கதைப்பாடல்
 • கதிர்வேல் படையாச்சி கதைப்பாடல்
 • சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கர் கதைப்பாடல்
 • மணிக்குறவன் கதைப்பாடல் [3]
 • ஆத்துக்காட்டுத் தங்கையா கதைப்பாடல்
 • சன்னாசித் தேவர் கதைப்பாடல்
 • குமரி லட்சுமணத் தேவர் கதைப்பாடல்
 • சீவலப்பேரிப் பாண்டி கதைப்பாடல்
 • மலையூர் மம்பட்டியான் கதைப்பாடல்
 • அருவாவேலு கதைப்பாடல்
 • கொடுக்கூர் ஆறுமுகம் கதைப்பாடல்
 • தீச்சட்டி கோவிந்தன் கதைப்பாடல்
 • மருதுபாண்டியர்கள் கதைப்பாடல்
 • வாளுக்குவேலி அம்பலகாரர் கதைப்பாடல்

கொலைச் சிந்து தொகு

நாட்டார் கதைப்பாடல்களில் கொடுரமான கொலைகளுக்காக எழுதப்பட்ட பாடல்களை கொலைச் சிந்து வகையில் சேர்க்கின்றனர். தகாதப் புணர்ச்சி, கள்ளக் காதல், குடும்ப வன்முறை போன்ற காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகள் கதைகளமாக கொள்ளப்படுகின்றன

சில கதைப்பாடல்கள் தொகு

 1. அண்ணமார் சாமி கதை
 2. இரணியாசுரன் கதை
 3. ஐவர் ராசாக்கள் கதை
 4. கள்ளழகர் கதை
 5. காத்தவராயன் கதை
 6. கெளதல் மாடன் கதை
 7. கோவிலன்-கர்ணகி கதை
 8. சதமுக இராவணன் கதை
 9. வாளுக்குவேலி அம்பலகாரர் கதை

திரைப்படங்கள் தொகு

 • மம்பட்டியான்
 • மலையூர் மம்பட்டியான்[4]
 • சீவலப்பேரி பாண்டி
 • கரிமேடு கருவாயன்[4]

சின்னத்திரை தொகு

"தென்பாண்டிச் சிங்கம்" (வாளுக்குவேலி தொடர்)

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

 1. "நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-03.
 2. [http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611312.htm 3.2 நாட்டுப்புற இலக்கியம்- தமிழாய்வு தளம்]
 3. "இன்றைய சினிமா நாளை மறக்கப்படலாம்; ஆனால் எழுத்து காலம் கடந்தும் வாழும்!-எழுத்தாளர் கே. ஜீவபாரதி நேர்காணல்! நக்கீரன்". Archived from the original on 2010-01-08. பார்க்கப்பட்ட நாள் 2016-07-03.
 4. 4.0 4.1 http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/kolaiccintu.htm

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதைப்பாடல்&oldid=3717061" இலிருந்து மீள்விக்கப்பட்டது