கத்தூரி எலி

Olfactores

கத்தூரி எலி (ஆங்கிலப் பெயர்: Muskrat, உயிரியல் பெயர்: Ondatra zibethicus) என்பது ஒரு கொறிணி ஆகும். இது தன் எல்லைகளைக் குறிக்கக் கத்தூரி மணத்தைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவே இது கத்தூரி எலி என்று அழைக்கப்படுகிறது.

கத்தூரி எலி
Muskrat Foraging.JPG
நீரூற்றின் அருகில் ஒரு கத்தூரி எலி, ஆனன்டகா குகை மாநிலப் பூங்கா, மிசோரி.
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: Cricetidae
துணைக்குடும்பம்: Arvicolinae
Tribe: கத்தூரி எலி
ஜான் எட்வர்ட் கிரே, 1825
பேரினம்: கத்தூரி எலி
லிங், 1795
இனம்: O. zibethicus
இருசொற் பெயரீடு
Ondatra zibethicus
(லின்னேயஸ், 1766)
Verbreitungsgebiet Bisamratten.jpg
கத்தூரி எலியின் வாழ்விடங்கள்:      வாழ்விடங்கள்      அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள் தென் அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள் இதில் காட்டப்படவில்லை

சொற்பிறப்புதொகு

இது தட்டையான வாலைக் கொன்டுள்ளது. இதன் காரணமாக இது கத்தூரி-நீரெலி என்று அழைக்கப்பட்டது. பின்னர் எலியைப் போன்றிருப்பதால் இது கத்தூரி எலி என்று அழைக்கப்படுகிறது.

விளக்கம்தொகு

வளர்ந்த எலி 40-70 செ.மீ. (16-28 அங்குலம்) நீளம் இருக்கும். இந்த நீளத்தில் பாதியளவிற்கு வால் தான் இருக்கும். இதன் எடை 0.6-2 கிலோகிராம் (1.3-4.4 பவுண்ட்) இருக்கும். இவற்றின் நீளமான வால்கள் செதில்களால் மூடப்பட்டுள்ளன, உரோமத்தால் அல்ல. இவைகளால் நீரின் அடியில் 12-17 நிமிடங்களுக்கு நீந்த முடியும். இவைகளால் காதின் உள்ளே நீர் புகாமல் இருக்க நீரின் அடியில் இருக்கும் போது காதை மூடிக்கொள்ள முடியும். இவற்றின் பின்னங்கால்களின் விரல்கள் இடையே பாதியளவிற்குச் சவ்வுகள் உள்ளன. இவை வால்களின் மூலம் உந்தி நீந்துகின்றன.

 
கத்தூரி எலி மண்டையோடு

உசாத்துணைதொகு

  1. Linzey, A.V. (2008). "Ondatra zibethicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Database entry includes a brief justification of why this species is of least concern.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தூரி_எலி&oldid=3238077" இருந்து மீள்விக்கப்பட்டது