கத்தோவித்சே
கத்தோவித்சே (Katowice,இடாய்ச்சு மொழி: Kattowitz) அலுவல்முறையாக மியாஸ்தோ கத்தோவித்சே(Miasto Katowice) தெற்குப் போலந்திலுள்ள ஓர் நகராகும். 2017 இல் இதன் மக்கள்தொகை 297,197 ஆகும்.[1] 2.2 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிலேசிய பெருநகரத்தின் மையமாக இது விளங்குகின்றது.
கத்தோவித்சே | |
---|---|
ஆள்கூறுகள்: 50°15′30″N 19°01′39″E / 50.25833°N 19.02750°E | |
நாடு | போலந்து |
மாநிலம் (வொல்வொடெஷிப்) | சிலேசியன் |
மாவட்டம் | நகர மாவட்டம் |
நிறுவல் | 16ஆம் நூற்றாண்டு - 1598 முதல் அலுவல்முறையான தகவல் |
நகர உரிமைகள் | 1865 |
அரசு | |
• நகரத்தந்தை | மார்சின் கிருபா |
பரப்பளவு | |
• நகரம் | 164.67 km2 (63.58 sq mi) |
• மாநகரம் | 5,400 km2 (2,100 sq mi) |
உயர் புள்ளி | 352 m (1,155 ft) |
தாழ் புள்ளி | 266 m (873 ft) |
மக்கள்தொகை (30.06.2017) | |
• நகரம் | 2,97,197[1] |
• நகர்ப்புறம் | 27,10,397 |
• பெருநகர் | 52,94,000[2] |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 40-001 முதல் 40-999 வரை |
இடக் குறியீடு | +48 32 |
வாகனப் பதிவு | SK |
இணையதளம் | www |
18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதியில் மிகுந்த நிலக்கரி இருப்பு இருப்பது அறியப்பட்டதிலிருந்தே கத்தோவித்சே ஓர் சிற்றூராக உருவாகி வளர்ந்துள்ளது. 1742இல் முதல் சிலேசியப் போரின்போது கத்தோவித்சே உள்ளிட்ட மேல் சிலேசியா புருசியாவிற்கு மாற்றப்பட்டது. கடந்த பல நூற்றாண்டுகளாக போலந்து மக்கள் மட்டுமே வசித்தவந்த இப்பகுதியில், புருசியாவுடன் இணைந்த பிறகு தொடர்ந்து, 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல செருமானிய, புருசிய கைவினைஞர்கள், வணிகர்கள், கலைஞர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். அதேநேரத்தில் சிலேசியாவில் பல யூதர்களும் குடியேறினர். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கடும் தொழில்முனைப்பு உள்ளூர் ஆலைகளையும் பண்ணைகளையும் உருமாறி எஃகாலைகளும் சுரங்கங்களும் வார்ப்பாலைகளும் கைவினை வார்ப்பாலைகளும் தோன்றலாயின. விரைவிலேயே வணிக நிறுவனங்கள் நிலைபெற்று நகரமும் வளரத் தொடங்கிற்று. [3] கத்தோவித்சே தொடர்வண்டி பிணையத்திலும் இணைக்கப்பெற்று, முதல் தொடர்வண்டி 1847இல் கத்தோவித்சேயில் நுழைந்தது.[4]
கத்தோவித்சேயில் வளர்ந்தோங்கிய எஃகு தொழிலுக்கு முதலாம் உலகப் போர் நன்மையளிப்பதாக இருந்தது.[5] செருமனியின் தோல்வியையும் சிலேசிய எழுச்சிகளையும் தொடர்ந்து மேல் சிலேசியாவையும் கத்தோவித்சேயையும் இரண்டாம் போலந்து குடியரசு கையகப்படுத்தியது.[6] போலந்திற்கு ஆதரவாக ஜெனீவா உடன்படிக்கையும் சிலேசிய சிறுபான்மையினரும் இருந்தனர். மே 3, 1921இல் போலிய படைத்துறை கத்தோவித்சேக்குள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்தனர். கத்தோவித்சே தன்னாட்சி பெற்ற சிலேசிய வொல்வொடெசிப்பின் (1920–39) தலைநகரமானது. கருத்து வாக்கெடுப்பிற்குப் பிறகு செருமானியர் பலர் வெளியேறத்தொடங்கினர். இருப்பினும் இரண்டாம் உலகப் போர் முடிவுறும் வரை கணிசமான செருமானியர் இங்கு வாழ்ந்து வந்தனர். 1939இல், வேர்மாக்ட் நகரை கைப்பற்றி கத்தோவித்சேயும் சிலேசிய மாகாணமும் நாட்சி ஜெர்மனியில் இணைக்கப்பட்டன. 1945இல் சனவரி 27 அன்று இந்த நகரம் முடிவாக நேசநாடுகளால் விடுவிக்கப்பட்டது.[7]
மேற்சான்றுகள்
தொகு- ↑ இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 (in pl) Ludność. Stan i struktura ludności oraz ruch naturalny w przekroju terytorialnym w 2017 r. Stanu w dniu 30 VI 2017 r.. Warszawa: Główny Urząd Statystyczny. 2017 இம் மூலத்தில் இருந்து 2014-10-15 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20141015142423/http://demografia.stat.gov.pl/bazademografia/Tables.aspx.
- ↑ "Study on Urban Functions (Project 1.4.3)" பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம் – European Observation Network for Territorial Development and Cohesion, 2007
- ↑ "Katowice, Poland - A City Guide - Cracow Life". Archived from the original on 16 March 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.
- ↑ "Local history - Information about the town - Katowice - Virtual Shtetl". Archived from the original on 16 March 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.
- ↑ o.o., StayPoland Sp. z. "History of Katowice". Archived from the original on 16 March 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.
- ↑ "History". Archived from the original on 16 March 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.
- ↑ "Liberation Memorial Katowice - Katowice - TracesOfWar.com". Archived from the original on 16 March 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.