கனிஷ்கா சிங்
கனிஷ்கா சிங் (Kanishka Singh)(பிறப்பு 1978) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவருமான இராகுல் காந்தியின் அரசியல் உதவியாளர் ஆவார்.[2]
கனிஷ்கா சிங் | |
---|---|
ராகுல்காந்தி அரசியல் உதவியாளர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1978 (அகவை 45–46)[1] புது தில்லி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | புது தில்லி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசிங் முன்னாள் இந்திய வெளியுறவு அதிகாரி, முன்னாள் வெளியுறவு செயலாளர் மற்றும் ராஜஸ்தானின் முன்னாள் ஆளுநர் எஸ். கே. சிங் மற்றும் மஞ்சு ஆகியோரின் மகனாவார். இவர் தில்லி தூய சுதிவன் கல்லூரியில் படித்த கணினி பொறியாளர் ஆவார்.[3][4] இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளியில் வணிகமேலான்மையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரது மூத்த சகோதரர் ஷஷாங்க் சிங், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிகமேலான்மையில் முதுநிலை படிப்பினை முடித்து மும்பையில் பணிபுரிகிறார்.[5]
தொழில்
தொகுகனிஷ்கா சிங் வால் தெருவில் முதலீட்டு வங்கியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[6] இவர் ராகுல் காந்தியுடன் இணைய முடிவு செய்வதற்கு முன்பு நியூயார்க்கில் வணிக வங்கி நிறுவனமான லசார்டு பிரிரெசு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[7] இவர் உலக வங்கியிலும் பணியாற்றியுள்ளார்.
அரசியல்
தொகுதில்லி முதல்வர் சீலா தீக்சித்தின் தேர்தல் பிரச்சாரத்தின் பின்னணியிலிருந்த அணியின் பகுதியாக 2003-ல் அரசியலில் சிங் நுழைந்தார்.
அவுட்லுக் பத்திரிகைக்குப் எழுதிய ஒரு கட்டுரைக்கு பிறகு, இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.[8][9][10] 2004ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதிலிருந்து ராகுல் காந்திக்குத் தொடர்ந்து துணையாக இருந்து வருகிறார். இவரது பங்களிப்புகளில், அமேதியிலிருந்து மேல்முறையீடுகள் மற்றும் குறைகளை விரைவாக நிறைவேற்றி செயலாக்குவதற்கான தனிப்பயனாக்கப்பட்ட கோரிக்கை மேலாண்மை அமைப்பு மென்பொருளை உருவாக்கினார். சோனியா காந்தியின் தேர்தலுக்காக, சரைனி சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.[3] ராகுல் காந்தியுடன் இவரது முக்கியப் பங்கின் காரணமாக, கனிஷ்கா சிங்கும் 2012ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் 31வது இடத்தைப் பிடித்துள்ளார்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Austerity express: With 'waiting list' stamp, Rahul confirms berth". Indian Express. 2009-09-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ "Cong MP quits party, attacks Rahul 'coterie'". Sify.com. 2008-05-16. Archived from the original on 2009-11-14. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ 3.0 3.1 "Candidate Sonia". Indian Express. 2006-05-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ [1] பரணிடப்பட்டது 18 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Other States / Rajasthan News : Rahul in Jaipur to attend wedding". தி இந்து. 2009-02-20. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ "The latest face of the Gandhi dynasty comes to claim his own | World news". The Guardian. 2007-05-09. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ "Cong's F1 driver & his team - Economic Times". Economictimes.indiatimes.com. 2009-05-17. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ Singh, Kanishka (12 April 2004). "Why Sonia Is Like John Kerry". https://www.outlookindia.com/magazine/story/why-sonia-is-like-john-kerry/223548.
- ↑ "Rahul treks to hideaway in Himalayas : Latest Headlines, News - India Today". Indiatoday.intoday.in. 2009-10-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ "Rahul Gandhi, the organisation man - Economic Times". Economictimes.indiatimes.com. 2009-05-18. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ "The most powerful Indians in 2012: No. 31-40". Indian Express. 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.