கமலா பாலகிருஷ்ணன்

கமலா பாலகிருஷ்ணன் (Kamala Balakrishnan)(ஜனவரி 16, 1930 - ஆகஸ்ட் 7, 2018) ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் நோயெதிர்ப்பு நிபுணர் இவர் இந்திய ஆயுதப்படைகளில் லெப்டினன்ட் கர்னலாகவும், அமெரிக்கன் ஹிஸ்டோகாம்பாட்டிபிலிட்டி மற்றும் இம்யூனோஜெனெடிக்ஸ் (ஆஷி) சமூக தலைவராகவும் , ஓஹியோவின் சின்சினாட்டியில் உள்ள பால் ஹாக்ஸ்வொர்த் இரத்த மையத்தில் மாற்று நோயெதிர்ப்பு பிரிவு இயக்குநராகவும் இருந்தார்.

கமலா பாலகிருஷ்ணன்
கமலா பாலகிருஷ்ணன்
பிறப்புஜனவரி 16, 1930
இறப்புஆகஸ்ட் 7, 2018
ஹவுஸ்டன், டெக்சாசு
பணிஇராணுவ அதிகாரி, மருத்துவ ஆராய்ச்சியாளர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கமலா பாலகிருஷ்ணன் 1930இல் பிறந்தார். இவர் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் புனேவில் உள்ள இராணுவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவ நோயியலில் பட்டய படிப்பினை முடித்தார். 1967 மற்றும் 1968ஆம் ஆண்டுகளில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்புத் துறையில் மேலதிக ஆய்வுகளைத் தொடர்ந்தார்.[1]

தொழில்

தொகு

கமலா பாலகிருஷ்ணன் லெப்டினன்ட் கர்னல் மற்றும் இந்திய ஆயுதப்படைகளில் மூத்த மருத்துவ அதிகாரியாக இருந்தார்.[2] இந்தியாவின் முதல் ஹிஸ்டோகாம்பாட்டிபிலிட்டி ஆய்வகத்தைப் புதுதில்லியில் நிறுவினார். இவருக்கு 1971ஆம் ஆண்டில் சகுந்தலா தேவி அமீர் சந்த் விருதும், 1973ஆம் ஆண்டில் கர்னல் அமீர் சந்த் விருதும் வழங்கப்பட்டன. இவை இரண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் விருதாகும்.[1] 1980களில், பெங்களூரு மருத்துவ சேவைகள் அறக்கட்டளையின் பணிகளை ஆதரித்தார். ஆய்வகம் அமைத்தல் மற்றும் இரத்த வங்கிகளுக்கான பணியாளர்கள் பயிற்சி குறித்து ஆலோசனை வழங்கினார். [3]

அமெரிக்காவில், கமலா பாலகிருஷ்ணன் 1996 முதல் 1997 வரை அமெரிக்கன் ஹிஸ்டோகாம்பாட்டிபிலிட்டி மற்றும் இம்யூனோஜெனெடிக்ஸ் சமூகத்தின் தலைவராக இருந்தார்.[4] 1981 முதல் 2001 வரை, ஓஹியோவின் சின்சினாட்டியில் உள்ள பால் ஹாக்ஸ்வொர்த் இரத்த மையத்தில் மாற்று நோயெதிர்ப்பு பிரிவு இயக்குநராக பணியாற்றினார்.[5] இவர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் மாற்று மருந்து பேராசிரியராக இருந்தார். தி நியூ இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி இதழ்,[6] லூபஸ்,[7] நெஃப்ரான், [8] இடமாற்றம்,[9] உள்ளிட்ட கல்வி ஆராய்ச்சி இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். நோயெதிர்ப்பு விசாரணைகள், [10] அறுவை சிகிச்சை ஆராய்ச்சி இதழ்,[11] மற்றும் மனித நோயெதிர்ப்பு . [12] டிரான்ஸ்ஃபுஷன் நோய்த்தடைக்காப்பியல் மற்றும் மருத்துவம் (1995) என்ற பாடப்புத்தகத்திற்கும் இவர் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பாலகிருஷ்ணன் சக இராணுவ அதிகாரியான வத்ரண்யன் பாலகிருஷ்ணனை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் டெக்சாஸின் ஹியூஸ்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2018இல் இறந்தார். [5] சின்சினாட்டி மருத்துவப் பள்ளி/பல்கலைக்கழக மருத்துவமனை பொது தொடர்பு புகைப்பட சேகரிப்பில் சின்சினாட்டியில் உள்ள சுகாதார பணியாளர்களின் வரலாறு குறித்த ஹென்றி ஆர். விங்க்லர் மையத்தில் பாலகிருஷ்ணனின் புகைப்படங்கள் கண்காட்சியில் உள்ளன. [13]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Chattopadhyay, Anjana (2018). Women Scientists in India: Lives, Struggles, and Achievements (PDF). National Book Trust of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-8144-0.
  2. Directorate of Printing, Government of India. Gazette of India, 1957, No. 200.
  3. Bangalore Medical Services Trust, Annual Report, April 2017 to March 2018 பரணிடப்பட்டது 2020-10-15 at the வந்தவழி இயந்திரம், page 31, 33.
  4. "ASHI Presidents". American Society for Histocompatibility and Immunogenetics. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 "In Memoriam - Dr. Kamala Balakrishnan". American Society for Histocompatibility and Immunogenetics. August 8, 2018. Archived from the original on 2020-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
  6. Welch, Thomas R.; Beischel, Linda; Balakrishnan, Kamala; Quinlan, Monica; West, Clark D. (1986-06-05). "Major-Histocompatibility-Complex Extended Haplotypes in Membranoproliferative Glomerulonephritis" (in en). New England Journal of Medicine 314 (23): 1476–1481. doi:10.1056/NEJM198606053142303. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. http://www.nejm.org/doi/abs/10.1056/NEJM198606053142303. 
  7. Adams, Louis E.; Balakrishnan, Kamala; Roberts, Stephen M.; Belcher, Rick; Mongey, Anne-Barbara; Thomas, T. J.; Hess, Evelyn V. (2016-07-02). "Genetic, Immunologic and Biotransformation Studies of Patients on Procainamide" (in en). Lupus 2 (2): 89–98. doi:10.1177/096120339300200205. https://journals.sagepub.com/doi/10.1177/096120339300200205. 
  8. Sridhar, Nagaraja R.; Munda, Rino; Balakrishnan, Kamala; First, Roy (1992). "Evaluation of Flowcytometric Crossmatching in Renal Allograft Recipients" (in en). Nephron 62 (3): 262–266. doi:10.1159/000187056. பன்னாட்டுத் தர தொடர் எண்:1660-8151. https://www.karger.com/Article/FullText/187056. 
  9. McGill, Manley; Balakrishnan, Kamala; Meier, Terry; Mayhaus, Charles; Whitacre, Lynn; Greenwalt, Tibor (1986). "Blood product irradiation recommendations" (in en). Transfusion 26 (6): 542–543. doi:10.1046/j.1537-2995.1986.26687043623.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1537-2995. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1046/j.1537-2995.1986.26687043623.x. 
  10. Balakrishnan, Kamala; Adams, Louis E. (1995-01-01). "The Role of the Lymphocyte in an Immune Response". Immunological Investigations 24 (1–2): 233–244. doi:10.3109/08820139509062775. பன்னாட்டுத் தர தொடர் எண்:0882-0139. https://doi.org/10.3109/08820139509062775. 
  11. Johnson, Christopher P.; Munda, Rino; Balakrishnan, Kamala; Alexander, J.Wesley (June 1984). "Donor-specific blood transfusions with stored and fresh blood in a rat heart allograft model" (in en). Journal of Surgical Research 36 (6): 532–534. doi:10.1016/0022-4804(84)90138-0. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022480484901380. 
  12. Adams, Louis E; Balakrishnan, Kamala; Malik, Shahid; Mongey, Anne-Barbara; Whitacre, Lynn; Hess, Evelyn V (March 1998). "Genetic and Immunologic Studies of Patients on Procainamide" (in en). Human Immunology 59 (3): 158–168. doi:10.1016/S0198-8859(98)00005-6. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0198885998000056. 
  13. "Finding aid for the University of Cincinnati College of Medicine/University Hospital Public Relations Photographic Collection". OhioLink. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_பாலகிருஷ்ணன்&oldid=4053722" இலிருந்து மீள்விக்கப்பட்டது