கமால் கமலேஸ்வரன்

கந்தையா கமலேசுவரன் (Kandiah Kamalesvaran, பிறப்பு: நவம்பர் 13, 1934) உலகப் புகழ்பெற்ற ஆத்திரேலிய இசைஞர். கமால் (Kamahl) என்று மேற்கத்திய இசை உலகில் போற்றப்படுபவர்.

கமால்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கந்தையா கமலேஸ்வரன்
பிறப்புநவம்பர் 13, 1934 (1934-11-13) (அகவை 89)
மலேசியா மலேசியா
பிறப்பிடம்ஆத்திரேலியா அடிலெய்ட், ஆஸ்திரேலியா
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
வெளியீட்டு நிறுவனங்கள்பிலிப்ஸ்
ஈஎம்ஐ
மேர்க்குரி ரெக்கோர்ட்ஸ்
ஃபெஸ்டிவல் ரெக்கோர்ட்ஸ்
டீனோ ரெக்கோர்ட்ஸ்
ரீடர்ஸ் டைஜஸ்ட்
இணையதளம்kamaahl.com

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவரது இயற்பெயர் கந்தையா கமலேஸ்வரன். மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்தவர். இலங்கைத் தமிழர்களான கந்தையா மயில்வாகனம், இளையதங்கம் ஆகியோரின் ஆறு பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்து, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் என்ற இடத்தில் வளர்ந்தார்.[1] தந்தை கோலாலம்பூர் இசைப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கமால் மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு உயர் கல்வி பெறுவதற்காக வந்தார்.[2] தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்ட்டில் மன்னர் கல்லூரியில் (பெம்புரோக் பள்ளி) தமது படிப்பைத் தொடர்ந்தார். அப்போது கமாலுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது. இனவெறி தாண்டவமாடிய காலம். வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை தீவிரமாக அமுலில் இருந்த காலம் அது. கமால் கறுப்பு நிறம் கொண்டவர். இந்தச் சூழலில் கமால் தமது படிப்பை மேற்கொண்டார். பல இடர்களுக்கு மத்தியில் 1955 ஆம் ஆண்டு கமால் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டார்.[1]

ரூபேட் மேர்டொக்கின் நட்பு

தொகு

அடிலெய்ட்டில் பெரும் செல்வந்தராக விளங்கிய ரூபேட் மேர்டொக் (Rupert Murdock) அவர்களின் நட்புக்குரியவரானார். 1968 ஆம் ஆண்டு தொடங்கிய இந்நட்புறவு, கமாலுக்குத் துன்பங்கள் வந்தபோதெல்லாம் பேருதவியாக இருந்தது. 1962 ஆம் ஆண்டு கமால் அடிலெய்டில் இருந்து சிட்னிக்குப் புலம்பெயர்ந்தார். 1966 இல் அவுஸ்திரேலியாவின் நிரந்தரக் குடிமகனானார்.

மேற்கத்திய இசையில் புகழ்

தொகு

ரூபேட் மேர்டொக்கின் உதவியால் மேற்கத்திய இசையில் புகழ் பெற்றார். தனது முதலாவது ஆல்பமான A Voice to Remember சிட்னியில் 1967 இல் வெளியிட்டார். 1972 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக இசை விழாவில் கமால் பங்கு கொண்டார். மேற்கத்திய இசைத்துறையில் சுமார் 50 ஆண்டு காலம் கோலோச்சி நூற்றுக்கணக்கான ஆல்பங்களை பலநாடுகளிலும் வெளியிட்டார். சமீபத்திய ஆல்பமான Imagine the World in Unison 2005 இல் வெளியிடப்பட்டது.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Thompson, Peter (15 August 2005). "Kamahl". Talking Heads. ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC). Archived from the original on 22 May 2006. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  2. "Item details for: D596, 1953/5561". National Archive of Australia. 3 July 2018. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கமால்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமால்_கமலேஸ்வரன்&oldid=4043572" இலிருந்து மீள்விக்கப்பட்டது