கரசங்கால் (Karasangal) என்பது தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரசங்கால் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமமாகும். இது சென்னை நகரத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. இது காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற கோயில் நகரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், வண்டலூர் மற்றும் தாம்பரத்தின் அருகிலும் உள்ளது. இந்த கிராமத்தில் போக்குவரத்து சாலைகள் மூலம் மட்டுமே உள்ளது. படப்பையை நோக்கி நகரும் அனைத்துப் பேருந்துகளும் கரசங்காலைக் கடந்து செல்லும்.

கரசங்கால்
கிராமம்
கரசங்கால் is located in சென்னை
கரசங்கால்
கரசங்கால்
சென்னையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°53′45″N 80°02′37″E / 12.895746°N 80.043606°E / 12.895746; 80.043606
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
பெருநகர் பகுதிசென்னை
வட்டம்திருப்பெரும்புதூர்
அரசு
 • நிர்வாகம்செ.பெ.வ.கு
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல்601301
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிதிருப்பெரும்புதூர்
திட்டமிடல் முகமைசெ.பெ.வ.கு

2011 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 3,858 ஆகும்.[1] மணிமங்கலம் மற்றும் கரசாங்கால் கிராமங்களில் சின்னத்திரை தொலைக்காட்சி படப்பிடிப்பு இடங்கள் பிரபலமாக உள்ளன. கரசங்கால் மல்லேசுவர் கோவில் சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்றது, அச்சமயம் 10,008 விளக்குகள் கோவில் உள்ளே ஏற்றி, இரவு முழுவதும் பூசை செய்யப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "District Census Hand Book - Village Release". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2020-12-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரசங்கால்&oldid=3731957" இலிருந்து மீள்விக்கப்பட்டது