கருணாகரன் பாபு
கருணாகரன் பாபு (Karunakaran Babu) ஓர் இந்திய நீதிபதி ஆவார். தற்போது கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றுகிறார். கேரள உயர் நீதிமன்றம் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொச்சியில் உள்ளது. கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு முன்பு திருவனந்தபுரத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக கருணாகரன் பாபு பணியாற்றினார். [1] [2] [3] [4] [5] [6] [7]
நீதிபதி க. பாபு K. Babu | |
---|---|
கேரள உயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 பிப்ரவரி 2021 | |
பரிந்துரைப்பு | எசு. ஏ. பாப்டே |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 மே 1964 அய்யூர், கொல்லம் |
முன்னாள் கல்லூரி | திருவனந்தபுரம் அரசு சட்ட்டக் கல்லூரி |
இணையத்தளம் | High Court of Kerala |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகருணாகர பாபு தேவண்ணூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கேரளப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
தொழில்
தொகு20.03.1994 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்த பாபு, கொட்டாரக்கரை மற்றும் கொல்லத்தில் பயிற்சியைத் தொடங்கினார். பயிற்சிக் காலத்தில் நடைமுறையில் முக்கியமாக சிவில் சட்டத்திலும், பல்வேறு சட்டப் பிரிவுகளிலும் கவனம் செலுத்தினார். 2009 ஆம் ஆண்டு கேரள நீதித்துறை சேவையில் மாவட்ட & அமர்வு நீதிபதியாக சேர்ந்தார். தலச்சேரி, பத்தனம்திட்டா மற்றும் கோட்டயத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். எர்ணாகுளத்தில் சிறப்பு நீதிபதியாகவும், சபரிமலையில் சிறப்பு ஆணையர், துணை நீதித்துறை பதிவாளர், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், முதன்மை மாவட்ட நீதிபதி என பல்வேறு பதவிகளில் இருந்தார். திருவனந்தபுரம் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய போது, சிறீ பத்மநாப சுவாமி கோவில் குழுவின் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட்ட்டார். 25.2.2021 அன்று உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் [1] .
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Official". பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2022 – via Official website High Court of Kerala.
- ↑ "Appointment Notification" (PDF). doj.gov.in. 22 Feb 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2022 – via Department of Justice, Government of India.
- ↑ "Appointment Notification". pib.gov.in. 22 Feb 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2022 – via Official website Press Information Bureau.
- ↑ "Four appointed as HC judges". thehindu.com. 22 Feb 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2022 – via The Hindu News.
- ↑ "Four New Judges Take Office In Kerala High Court; Working Strength Now 40". livelaw.in. 25 Feb 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2022 – via Live Law News.
- ↑ "Kerala HC to get four more judges". newindianexpress.com. 18 Aug 2020. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2022 – via New Indian Express News.
- ↑ "Kerala HC gets four new judges". timesofindia.indiatimes.com. 23 Feb 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2022 – via Times of India News.