கருந்தலை மாங்குயில்
கருந்தலை மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஓரியோலசு
|
இனம்: | ஓ. சாந்தோர்னசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு சாந்தோர்னசு (லின்னேயஸ், 1758 |
கருந்தலை மாங்குயில் (ⓘ) அல்லது கருந்தலை மாம்பழக் குருவி அ்ல்லது (தென்னிலங்கையில்) மாம்பழத்தி (Black-hooded Oriole) எனப்படுவது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தெற்காசியாவின் இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் இருந்து இந்தோனேசியாவரை காணப்படுகிறது. இலங்கையில் இருக்கும் இதன் துணையினம் ஓரியோலசு சாந்தோர்னசு சிலோனென்சிசு எனப்படுகிறது.
விளக்கம்
தொகுஇப்பறவை மைனாவின் பருமனுள்ளது. இது மரங்களில் வாழக்கூடிய பறவையாகும். இதன் இறக்கை, வால் ஒரங்களில் கரிய நிறத்துடன் இருக்கும். இளச்சிவப்பு அலகும், குருதிபோன்ற சிவந்த கண்களையும் உடையது. ஆல், அத்தி, அரசு போன்றவற்றின் பழங்களையும் பூச்சிகளையும் விரும்பி உண்ணக்கூடியது.
துணை இனங்கள்
தொகுகருந்தலை மாங்குயில் சிற்றினத்தில் ஐந்து துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[2]
- ஓ. சா. சாந்தோர்னசு. (லின்னேயஸ், 1758): வடஇந்தியாவிலிருந்து வடக்கு மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோசீனா வரை காணப்படுகிறது
- தென்னிந்திய கருந்தலை மாங்குயில் ஓ. சா. மதராசபடாணசு. பிராங்க்ளின், 1831: முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் காணப்படுகிறது.
- ஓ. சா. செலோனென்சிசு. போனபார்டே, 1850: முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. இலங்கையில் காணப்படுகிறது.
- ஓ. சா. ருபேனி. அப்துல்லாலி, 1977: அந்தமான் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஓ. சா. தனகே. குரோடா, 1925: வடகிழக்கு போர்னியோவில் காணப்பட்டது
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Oriolus xanthornus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Orioles, drongos & fantails". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.