கருப்பு கருஞ்சிவப்பு மாங்குயில்
கருப்பு கருஞ்சிவப்பு மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. கான்சங்குனியசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு கான்சங்குனியசு (வார்டுலா ராம்சே, 1881) |
கருப்பு கருஞ்சிவப்பு மாங்குயில் (Black-and-crimson oriole)(ஓரியோலசு கான்சங்குனியசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.
இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இங்கு அதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகளாகும் .
வகைப்பாட்டியல்
தொகுகருப்பு-கருஞ்சிவப்பு மாங்குயில் முதலில் லெப்டோப்டெரிக்சு (அர்டமெல்லாவின் ஒத்த பெயர்) பேரினத்தில் விவரிக்கப்பட்டது. கரும் மாங்குயில், அரக்கு மாங்குயில் மற்றும் வெள்ளி மாங்குயில்களுடன், இது சிவப்பு மற்றும் கருப்பு மாங்குயில் உயிரினக் கிளைக்குச் சொந்தமானது.[2] கருப்பு கருஞ்சிவப்பு மாங்குயிலின் பிற பெயர்களில் கருப்பு-சிவப்பு மாங்குயில் மற்றும் கருஞ்சிவப்பு-மார்பு மாங்குயில் ஆகியவை அடங்கும்.
துணையினங்கள்
தொகுமூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[3]
- ஓ. கா. மலேயனசு - இராபின்சன் & குளோசு, 1923: மலாய் தீபகற்பம்
- ஓ. கா. கான்சங்குனியசு- (இராம்சே, 1881)சுமாத்திரா
- ஓ. கா. வல்னெராட்டசு - சார்ப்பி, 1887: வடக்கு போர்னியோ
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. (2016). "Oriolus consanguineus". IUCN Red List of Threatened Species 2016: e.T103692733A104068632. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103692733A104068632.en. https://www.iucnredlist.org/species/103692733/104068632. பார்த்த நாள்: 23 July 2023.
- ↑ Jønsson, KA; Rauri C. K. Bowie; Robert G. Moyle; Martin Irestedt; Les Christidis; Janette A. Norman; Jon Fjeldsa (2010). "Phylogeny and biogeography of Oriolidae (Aves: Passeriformes)". Ecography 33: 232–241. doi:10.1111/j.1600-0587.2010.06167.x. http://www.nrm.se/download/18.25ba04a21296cc434f980005871/J%25C3%25B6nsson%2Bet%2Bal%2BOriolidae.pdf. பார்த்த நாள்: 2023-12-01.
- ↑ "IOC World Bird List 7.1". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.7.1. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref.
வெளி இணைப்புகள்
தொகு- ADW இல் படம் பரணிடப்பட்டது 2 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்</link>