கருமுதுகுக் கடற்காக்கை

பறவை இனம்
கருமுதுகுக் கடற்காக்கை
Larus fuscus graellsii
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இலாரசு
இனம்:
இ. பசுகசு
இருசொற் பெயரீடு
இலாரசு பசுகசு
லின்னேயஸ், 1758

கருமுதுகுக் கடற்காக்கை (Lesser black-backed gull) என்பது ஐரோப்பாவின் அத்திலாந்திக் கடற்கரையில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு பெரிய கடல் புறா ஆகும். இது பிரித்தானித் தீவுகளில் இருந்து தெற்கே மேற்கு ஆபிரிக்காவிற்கு குளிர்காலத்தில் வலசை போகிறது. இது வட அமெரிக்காவில் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது, கிழக்கு கடற்கரையில் பொதுவாக காணப்படுகிறது. முன்பு ஒரு குளிர்காலத்தில் மட்டும் காணப்பட்டது. இப்போது பல பறவைகள் ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. குளிர்காலங்களில் இவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மேற்குக் கடற்கரையில் கூட, இந்த இனம் கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் காணப்படுகிறது, ஒவ்வொரு குளிர்காலத்திலும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இப்பறவை பதிவாகியுள்ளது. இவை சால்டன் கடல் பகுதியில் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் காணப்பட்டன. இந்த இனத்தின் வாழிட எல்லை பல பகுதிகளில் சரிந்தது பற்றி இப்போது தீவிர கவலை உள்ளது. இந்த இனம் இப்போது பறவைகள் பாதுகாப்பிற்கான ராயல் சங்கத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. [2] ஏனெனில் ஐரோப்பாவில் வாழும் இப்பறவைகளில் ஐக்கிய இராச்சியத்தில் 40 விழுக்காட்டைக் கொண்டுள்ளது. மேலும் இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பத்துக்கும் குறைவான தளங்களில் காணப்படுகின்றன. [3]

வகைபிரித்தல்

தொகு

சிசுடமா நேச்சரேவின் 1758 10வது பதிப்பில் கரோலஸ் லின்னேயஸ் முதலில் விவரித்த பல இனங்களில் கருமுதுகுக் கடற்காக்கையும் ஒன்றாகும். மேலும் இது இன்னும் இதன் அசல் பெயரான லாரஸ் ஃபஸ்கஸ் என்பதைக் கொண்டுள்ளது. [4] இதன் அறிவியல் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது. லாரஸ் என்பது ஒரு குட்டி அல்லது பெரிய கடற்பறவையைக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது, மேலும் ஃபஸ்கஸ் என்றால் கருப்பு அல்லது பழுப்பு என்று பொருளாகும். [5]

துணை இனங்கள்

தொகு

இதில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து துணையினங்கள் உள்ளன அவை:

விளக்கம்

தொகு

கருமுதுகு கடற்காக்கை வீட்டு வாத்து அளவு இருக்கும். இந்த குழு வடக்கு அரைக்கோளத்தைச் சுற்றி ஒரு வலயச் சிறப்பினப் பரவலைக் கொண்டுள்ளது. கருமுதுகுக் கடற்காக்கை 51–64 cm (20–25 அங்) நீளமும், 124–150 cm (49–59 அங்) இறக்கை அகலமும், 452–1,100 g (0.996–2.425 lb) எடையும் கொண்டிருக்கும். பரிந்துரைக்கப்பட்ட இனம் மற்ற இரண்டு கிளையினங்களைக் காட்டிலும் சற்றே சிறியதாக இருக்கும். ஆண் பறவைகளின் சராசரி எடை 824 g (1.817 lb) ஆகும். பெண் பறவைகளின் எடையானது ஆண் பறவைகளின் எடையைவிடக் குறைவாக 708 g (1.561 lb) என்ற அளவில் இருக்கும். அலகு 4.2 முதல் 5.8 cm (1.7 முதல் 2.3 அங்) நீளமும், கணுக்கால் 5.2 முதல் 6.9 cm (2.0 முதல் 2.7 அங்) நீளம் இருக்கும். முதிர்ந்த பறவைகளுக்கு கருப்பு அல்லது அடர் சாம்பல் நிற இறக்கைகளும் (இனத்தைப் பொறுத்து), பின்புறமும் இருக்கும். அலகு மஞ்சள் நிறமாகவும் அதில் சிவப்பு புள்ளியுடன் இருக்கும். [6]

இனப்பெருக்கம்

தொகு

இந்த இனம் கடற்கரைகள் மற்றும் ஏரிகளை ஒட்டிய பகுதிகளில் கூட்டமாக இனப்பெருக்கம் செய்கிறது. தரையில் அல்லது செங்குத்துப்பாறை மீது வரிசையாக கூடுகளை உருவாக்குகிறது. பொதுவாக மூன்று முட்டைகள் இடும். சில நகரங்களில், இந்த இனங்கள் பெரும்பாலும் ஹெர்ரிங் குல்களுடன் இணைந்து நகர்ப்புற சூழலில் கூடு கட்டுகின்றன.

 
வைஸ்பேடன் அருங்காட்சியகத்தில் உள்ள முட்டைகள் சேகரிப்பு

உணவு

தொகு

இவை ஒரு அனைத்துண்ணி ஆகும். இவை மீன்கள், பூச்சிகள், ஓடுடைய கணுக்காலிகள், புழுக்கள், நட்சத்திரமீன்கள், மொல்லுடலிகள், விதைகள், பழங்கள், சிறிய பாலூட்டிகள், முட்டை, சிறிய பறவைகள், குஞ்சுகள், இறைச்சிக் கழிவுகள், கழிவுப்பொருள், அழுகும் பிணம் போன்றவற்றை உண்கின்றன.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2019). "Larus fuscus". IUCN Red List of Threatened Species 2019: e.T22694373A155594163. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22694373A155594163.en. https://www.iucnredlist.org/species/22694373/155594163. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Endangered Birds | Red, Amber and Green Explained".
  3. "Lesser Black Backed Gull Facts | Larus Fuscus".
  4. Linnaeus, C. (1758). Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I. Editio decima, reformata (in லத்தின்). Vol. 1. Holmiae [Stockholm]: (Laurentii Salvii). p. 136.
  5. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm.
  6. RSPB Handbook of British Birds (2014).

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Larus fuscus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுதுகுக்_கடற்காக்கை&oldid=3834956" இலிருந்து மீள்விக்கப்பட்டது