கரோலின்ஸ்கா மையம்

கரோலின்ஸ்கா மையம் (Karolinska Institutet) சுவீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1810 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இம்மையமானது, உப்சாலா பல்கலைக்கழகம் (1477) மற்றும் லுண்ட் பல்கலைக்கழகத்தினை (1666) அடுத்து மூன்றாவதாக சுவீடனில் உருவாக்கப்பட்ட பழமையான மருத்துவ மையம் ஆகும். 2010ஆம் ஆண்டு, 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. சோல்னா மற்றும் ஹுட்டிங்கேவில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையானது கரோலின்ஸ்கா மையத்துடன் இணைந்த ஆய்வு மற்றும் கற்பித்தலை முதன்மையாகக் கொண்ட மருத்துவ வளாகம் ஆகும். சுவீடனில் நடக்கும் முப்பது சதவிகித (30%) மருத்துவப்பயிற்சியும், நாற்பது சதவிகித (40%) மருத்துவ ஆய்வும் இங்குதான் நடைபெறுகிறது[2]. இந்த ஆய்வு மையம் அமைக்கும் குழுமம், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்களை தேர்ந்தெடுக்கிறது. உலக அளவில் கரோலின்ஸ்கா மையம் பதினாறாவது சிறந்த மருத்துவப் பல்கலைக்கழகமாக உள்ளது[3].

கரோலின்ஸ்கா மையம்
Karolinska Institutet
குறிக்கோளுரைAtt förbättra människors hälsa (மனித உடல் நலத்தை மேம்படுத்துதல்)
வகைமருத்துவ பல்கலைக்கழகம், (பொது)
உருவாக்கம்1810 (1810)
நிதிக் கொடை576,1 மில்லியன் யூரோ (2010)
நிதிநிலை6.67 பில்லியன் குரோனார்[1]
தலைமை ஆசிரியர்உல்லே பீட்டர் ஓட்டர்சன்
நிருவாகப் பணியாளர்
4,820 (2016)[1]
மாணவர்கள்5,973 (2016)[1]
2,267 (2016)[1]
அமைவிடம்சோல்னா, ஸ்டாக்ஹோம், சுவீடன் சுவீடன்
59°20′56″N 18°01′36″E / 59.34889°N 18.02667°E / 59.34889; 18.02667ஆள்கூறுகள்: 59°20′56″N 18°01′36″E / 59.34889°N 18.02667°E / 59.34889; 18.02667
வளாகம்சோல்னா
Colors    
இணையதளம்www.ki.se
கரோலின்ஸ்கா மையத்தின் கொடி
கரோலின்ஸ்கா மையம், சோல்னா
கரோலின்ஸ்கா மருத்துவமனை, சோல்னா
கரோலின்ஸ்கா அரங்கம், சோல்னா வளாகம்
பெர்சீலியுஸ் ஆய்வகம், சோல்னா வளாகம்
கரோலின்ஸ்கா மைய நூலகம் மற்றும் பெர்சீலியுஸ் ஆய்வகம், சோல்னா வளாகம்
பழையத் தோட்டம் (முற்றம்), சோல்னா வளாகம்
பூர்வீக கரோலின் மையக் கட்டிடங்கள், ஸ்டாக்ஹோம்
கரோலின்ஸ்கா மருத்துவமனை, ஹுட்டிங்கே வளாகம்
நோவம் ஆய்வுப் பூங்கா, ஹுட்டிங்கே வளாகம்

ஆய்வுத்துறைகள் மற்றும் பிரிவுகள்தொகு

சோல்னா வளாகம்தொகு

 1. செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் (CMB)
 2. சுற்றுசூழல் மருத்துவம் (IMM)
 3. கற்றல், தகவலியல், நிருவாகம் மற்றும் நெறிமுறைகள் (LIME)
 4. மருத்துவ உயிர்வேதியியல் மற்றும் உயிர்இயற்பியல் (MBB)
 • உயிர்இயற்பியல்
 • உயிர்வேதியியல்
 • உடலிரசாயனவியல் - I
 • உடலிரசாயனவியல் - II
 • இரசாயன உயிரியல்
 • திசுக்கூழ் உயிரியல்
 • மருத்துவ அழற்சி ஆய்வு
 • மூலக்கூற்று உயிர்நரம்பியல்
 • மூலக்கூற்று கட்டமைப்பு உயிரியல்
 • கட்டமைப்பு மரபணுத்தொகுதி கூட்டமைப்பு
 • இரத்தநாள உயிரியல்
5. மருத்துவ நோய்ப்பரவு இயல் மற்றும் உயிரியல் புள்ளிவிவரம் (MEB)
6. நுண்ணுயிரியல், கட்டி மற்றும் செல் உயிரியல் (MTC)
 • புற்று மற்றும் கழலை உயிரியல்
 • புற்று மற்றும் உயிரிமருத்துவ சூழலியல்
 • நோய்எதிர்ப்பியல்
 • நோய்த் தொற்று
7. நரம்பு அறிவியல்
8. உடலியல் மற்றும் மருந்தியல் (FyFa)
9. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்

கரோலின்ஸ்கா மருத்துவமனை வளாகம்தொகு

 1. பிணி சார்ந்த நரம்பு அறிவியல்
 2. பிணி சார்ந்த அறிவியல், இடையீடு மற்றும் தொழில்நுட்பம் (CLINTEC)
 3. மருத்துவம், சோல்னா
 4. மூலக்கூறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
 5. கழலையியல்-நோயியல்
 6. பொதுநல அறிவியல்

ஹுட்டிங்கே வளாகம்தொகு

 1. உயிர்அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து] (BioNut)
 2. அறுவை சிகிச்சை மற்றும் நடத்தை, ஹுட்டிங்கே
 3. பல் மருத்துவம் (Dentmed)
 4. ஆய்வு மருத்துவம்
 5. மருத்துவம், ஹுட்டிங்கே
 6. உயிர்நரம்பியல், பராமரிப்பு அறிவியல் மற்றும் சமூகம் (NVS)

கரோலின்ஸ்கா மையத்துடன் இணைந்த புகழ் பெற்றவர்கள்தொகு

 • குஸ்தப் ரெட்சியுஸ் (Gustaf Retzius, 1842–1919), உடற்கூறு வல்லுநர், 1877-1890 - கரோலின்ஸ்கா பேராசிரியர்.
 • கார்ல் ஒஸ்கார் மெதின் (Karl Oskar Medin, 1847–1928), குழந்தை மருத்துவ வல்லுநர் - இவருடைய இளம்பிள்ளை வாதம் (போலியோ) குறித்த பணிகள் புகழ் பெற்றவை. 1883-1914 - கரோலின்ஸ்கா பேராசிரியர்.
 • பெஹர் எட்மன் (Pehr Edman, 1916–1977) - வேதியியல் வல்லுநர் (மருத்துவ முனைவர், 1946) - எட்மன் படிச்சிதைவு (இவ்வினையானது புரதக்கூற்றில் உள்ள அமினோ அமிலங்களை வரிசைமுறைப்படுத்த உதவுகிறது) முறையை உருவாக்கியவர்.
 • லார்ஸ் லெக்செல் (Lars Leksell, 1907–1986), மருத்துவர், கதிரியக்க அறுவை சிகிச்சை முறை மற்றும் காமா கத்தியை (Gamma Knife) உருவாக்கியவர்.
 • யோறான் லில்யெஸ்ட்ராண்ட் (Göran Liljestrand, 1886–1968), உடற்செயலியல் மற்றும் மருந்தியல் வல்லுநர்
 • சுவென் இவார் செல்டிங்கெர் (Sven Ivar Seldinger, 1921–1998), கதிரியலர், செல்டிங்கெர் உத்தியை (Seldinger technique - குருதிக்குழல்கள் மற்றும் உள்ளீடற்ற உறுப்புகளை பாதுகாப்பாக அணுகும் மருத்துவ முறை) உருவாக்கியவர்.

சில படங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 "KI in brief". மூல முகவரியிலிருந்து 2019-01-09 அன்று பரணிடப்பட்டது.
 2. "Research at Karolinska Institutet".
 3. "QS World University Rankings by Subject 2014 - Medicine". QS World University Rankings. பார்த்த நாள் 08 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்ஸ்கா_மையம்&oldid=3264602" இருந்து மீள்விக்கப்பட்டது