கலிபோர்னியம்(III) ஆக்சைடு

வேதிச் சேர்மம்

கலிபோர்னியம்(III) ஆக்சைடு (Californium(III) oxide) Cf2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[1] ஓர் இருமக் கனிமச் சேர்மமாக கலிபோர்னியம்(III) ஆக்சைடு வகைப்படுத்தப்படுகிறது. கலிபோர்னியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் கலிபோர்னியத்தின் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது திண்ம சேர்மமாகும். இக்கண்டுபிடிப்பு 1958 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

கலிபோர்னியம்(III) ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் செசுகியுவாக்சைடு, இருகலிபோர்னியம் மூவாக்சைடு
இனங்காட்டிகள்
12050-91-8
InChI
  • InChI=1S/2Cf.3O/q2*+3;3*-2
    Key: BZGNRENQZZWCKH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cf+3].[Cf+3].[O-2].[O-2].[O-2]
பண்புகள்
Cf2O3
வாய்ப்பாட்டு எடை 550.00 g·mol−1
தோற்றம் பசுமஞ்சள் திண்மம்
அடர்த்தி கி/செ.மி3
உருகுநிலை 1,750 °C (3,180 °F; 2,020 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு orthorhombic
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் radioactive
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

1400 பாகை செல்சியசு வெப்பநிலையில் அயனைட்டை காற்றில் எரிப்பதன் மூலம் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். பெர்க்கிலியம்(III) ஆக்சைடை β- சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.

இயற்பியல் பண்புகள்

தொகு

கலிஃபோர்னியம்(III) ஆக்சைடு மஞ்சள்-பச்சை திடப்பொருளாக உருவாகிறது. இதன் உருகுநிலை 1750 பாகை செல்சியசு ஆகும்.[2] a = 1083.9 ± 0.4 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை மதிப்புடன் உடல்மைய கனசதுரப் படிகத் திட்டத்தில் இது படிகமாகிறது. உடலை மைய கனசதுர படிகத்திற்கும் ஒற்றைச் சாய்வு கட்டமைப்புக்கும் இடையே உள்ள நிலை மாறுதல் வெப்பநிலை சுமார் 1400 ° செல்சியசு ஆகும்.[3][4]

தண்ணீரில் கலிபோர்னியம்(III) ஆக்சைடு கரையும்..[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Morss, Lester R.; Fuger, J.; Goffart, J.; Edelstein, N.; Shalimoff, G. V. (1 January 1987). "Enthalpy of formation and magnetic susceptibility of californium sesquioxide, Cf2O3" (in en). Journal of the Less Common Metals 127: 251–257. doi:10.1016/0022-5088(87)90385-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508887903857. பார்த்த நாள்: 10 April 2023. 
  2. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2826. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  3. Copeland, J. C.; Cunningham, B. B. (1 March 1969). "Crystallography of the compounds of californium—II crystal structure and lattice parameters of californium oxychloride and californium sesquioxide" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 31 (3): 733–740. doi:10.1016/0022-1902(69)80020-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190269800205. பார்த்த நாள்: 10 April 2023. 
  4. Green, J. L.; Cunningham, B. B. (1 September 1967). "Crystallography of the compounds of californium. I. Crystal structure and lattice parameters of californium sesquioxide and californium trichloride" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 3 (9): 343–349. doi:10.1016/0020-1650(67)80040-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1650. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0020165067800400. பார்த்த நாள்: 10 April 2023. 
  5. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010). The Aqueous Chemistry of the Elements (in ஆங்கிலம்). Oxford University Press. p. 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-539335-4. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியம்(III)_ஆக்சைடு&oldid=3739429" இலிருந்து மீள்விக்கப்பட்டது