கலைக்கோட்டு முனிவர்

கலைக்கோட்டு முனிவர் அல்லது ரிஷ்ய சிருங்கர் (Ṛṣyaśṛṅga: சமக்கிருதம்: ऋष्यशृंग) பிறக்கும் போதே தலையில் மான் கொம்புகளுடன் பிறந்தவர். விபாண்டக முனிவருக்கும், தேவ லோக நடனப் பெண் ஊர்வசிக்கும் பிறந்தவர் ரிஷ்ய சிருங்கர் ஆவார். தந்தை மூலம் வேத சாத்திரங்கள் மற்றும் யோகம் பயின்றவர். காட்டில் பெண்கள் சகவாசம் அறியாது வளர்க்கப்பட்டவர்.[1]

நடனப் பெண்களால் ஈர்க்கப்பட்ட கலைகோட்டு முனிவர் அங்க நாட்டில் கால் பதித்தல்

புராண வரலாறு

தொகு

அங்க நாட்டில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து மழைபெய்யாமல் போனதால் மக்கள் பஞ்சத்தாலும், வறட்சியாலும், பட்டினியாலும் வாடினர். கலைக்கோட்டு முனிவர், அங்கநாட்டில் கால் வைத்தால், நாட்டில் மழை பொழியும் என்று அரசகுரு யோசனை கூறினார். அங்க நாட்டு மன்னர் ரோமபாதர், தன் மகள் சாந்தாவையும் அவள் தோழியரையும் கலைக்கோட்டு முனிவரை அங்கநாட்டிற்கு வரவழைக்க அனுப்பி வைத்தார்.

கலைக்கோட்டு முனிவரின் தந்தை கானகத்தில் இல்லாத நேரம் பார்த்து, பெண்கள் வாசம் அறியாத கலைக்கோட்டு முனிவரை அணுகி பல நாட்கள் பேசிப் பழகினர். சில நாட்கள் கழித்து, கலைக்கோட்டு முனிவரை ஒரு படகில் அமர்த்தி, அங்க நாட்டிற்கு வரவழைத்தனர். முனிவர் அங்கநாட்டில் காலடி எடுத்து வைத்ததும் பெரு மழை பெய்தது.

கலைக்கோட்டு முனிவரை நகரத்திற்கு வரவேற்ற அரசன், முனிவரின் தலைமையில் ஒரு மாபெரும் யாகம் நடத்தினார். யாகத்தின் முடிவில் அரசன், தன் மகள் சாந்தாவை கலைக்கோட்டு முனிவருக்கு மணமுடித்து வைத்தார். முனிவரின் வருகையால் அங்க நாட்டில் தொடர்ந்து மழை பெய்து செழித்தது.[2]

புத்திர வேள்வி

தொகு

தசரதனின் வேண்டுகோளுக்கு ஏற்ப, கலைக்கோட்டு முனிவர், தசரதனுக்கு புத்திரகாமேஷ்டி வேள்வி செய்தார். வேள்வியின் மூலம் கோசலைக்கு இராமரும், சுமித்திரைக்கு இலக்குவன் மற்றும் சத்துருக்கனும், கைகேயிக்கு பரதனும் பிறந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.valmikiramayan.net/bala/sarga9/bala_9_prose.htm
  2. Canto IX. Rishyasring. Page 016

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைக்கோட்டு_முனிவர்&oldid=3238800" இலிருந்து மீள்விக்கப்பட்டது