கவி கங்காதரேசுவரர் கோயில்

கவி கங்காதரேசுவரர் கோயில் (Gavi Gangadhareshwara Temple) மேலும் கவிபுரம் குகைக் கோயில் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் இந்தியக் குகைவரைக் கோயில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முன்புறத்தில் உள்ள மர்மமான வட்டக் கல்களுக்கும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் சூரியனின் கதிர்கள் சன்னதியில் ஒளிவீசுவதற்கும் பிரபலமானது. இது 16ஆம் நூற்றாண்டில் நகரத்தின் நிறுவனராக இருந்த கெம்பெ கவுடா என்பவரால் கட்டப்பட்டது. [1]

கவி கங்காதரேசுவரர் கோயில்
பெங்களூரில் உள்ள கவி கங்காதரேசுவர கோயிலுக்கு வெளியே சிவபெருமானின் திரிசூலம்.
கவி கங்காதரேசுவரர் கோயில் is located in Bengaluru
கவி கங்காதரேசுவரர் கோயில்
பெங்களூருவில் கோயில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:பெங்களூர்
அமைவு:கவிபுரம்
ஆள்கூறுகள்:12°56′53.5″N 77°33′46.8″E / 12.948194°N 77.563000°E / 12.948194; 77.563000
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்தியக் குகைவரைக் கோயில் கட்டிடக் கலை

கோயில்

தொகு

பெங்களூர் நகரத்தில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த குகைக் கோயில் அதிகளவில் பார்வையிடப்பட்ட கோயிலாகும். கௌதம முனிவராலும், பாரத்துவாசர் முனிவராலும் வேத காலத்தில் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் பெங்களூருவின் நிறுவனர் கெம்பே கவுடா அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. கோயில் கவி கங்காதரேசுவரர் என்பது ஒரு கட்டடக்கலையின் அற்புதமாகும். பெங்களூரில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றான இக்கோயிலிலுள்ள, அக்னிமூர்த்தி சிலைக்கு இரண்டு தலைகளும், ஏழு கைகளும் மூன்று கால்களும் உள்ளன. இந்த தெய்வத்தை வணங்குபவர்கள் கண் குறைபாடு நீங்கும் என நம்புகிறார்கள். இந்த கோயில் நான்கு ஒற்றைத் தூண்களுக்காகவும் அறியப்படுகிறது. இது சிவனின் ஆயுதங்களான தமாரம் (உடுக்கை), திரிசூலம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கவிபுரத்தில் இயற்கையான குகையில் கட்டப்பட்ட இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு ஒரு ஒற்றைக் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கோயிலின் முற்றத்தில் பல ஒற்றைக் சிற்பங்கள் உள்ளன. கோயிலின் முக்கிய இடங்கள் சூரியன் மற்றும் சந்திரனின் மாபெரும் வட்டுக்கு துணைபுரியும் இரண்டு கிரானைட் தூண்கள் ஆகும். மேற்புறத்தில் ஏராளமான நந்தி சிலைகளும் உள்ளன.

மகர சங்கராந்தியின் போது, மாலை நேர சூரிய ஒளி நந்தியின் கொம்புகளுக்கு இடையில் ஒரு வளைவு வழியாக சென்று குகைக்குள் இருக்கும் இலிங்கத்தின் மீது நேரடியாக விழுந்து உட்புற சிலையை ஒளிரச் செய்யும் ஒரு தனித்துவமான நிகழ்வை கோயில் கொண்டுள்ளது. [2]

சூரிய ஒளியால் சன்னதி வெளிச்சம் பெறுதல்

தொகு

இந்த குகைக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சனவரி நடுப்பகுதியில் மகர சங்கராந்தி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் சிறப்பு நாள் இது. சமகால கட்டமைப்புகள் மற்றும் தாமஸ் டேனியல் மற்றும் வில்லியம் டேனியல் ஆகியோரின் முந்தைய வரைபடங்களின் ஒப்பீடு முந்தைய கோவிலில் குறைவான கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது என்பதையும், கோடை மற்றும் குளிர்கால சங்கிராந்திகளில் சூரியன் சன்னதியை ஒளிரச் செய்ததையும் காட்டுகிறது. [3] [4] [5] இன்று சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை சிவலிங்கத்தை ஒளிரச் செய்கிறது - சனவரி 13 முதல் 16 வரை பிற்பகலிலும், நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை இது நிகழகிறது.

பாதுகாக்கப்பட்டக் கோயில்

தொகு

கோவில் கர்நாடக பண்டைய மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டம் 1961 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். [6] மேலும்,இந்திய கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பல கோயிலாகுவும் திகழ்கிறது.

சிறப்பு

தொகு

காசிக்குச் செல்லும் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இருப்பினும் இதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

அருகிலுள்ள புனித இடங்கள்

தொகு
  • கோசாயி மடம்
  • கவி கங்காதரேசுவரர் கோயிலுக்குப் பின்னால், பெட் நாராயண் மகராஜ் என்ற பெரிய யோகியின் சமாதி உள்ளது.
  • சிறீ பந்தே மகாகாளி கோயில்

புகைப்படங்கள்

தொகு

பழங்கால ஓவியங்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Shastry, Vyasa (25 February 2017). "The mysteries of Bengaluru's famed Gavi Gangadhareshwara temple". Livemint. Retrieved 2 March 2017.
  2. "Gavi Gangadhareshwara Temple at Bangalore(Karnataka)". Retrieved 2006-09-13.
  3. "A stellar wonder". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-01-08. Retrieved 2019-08-05.
  4. "IIACD | Gavi Gangadhareshwara Cave Temple and Vernacular Dwellings of Gavipuram: A Pilot Study". www.iiacd.org. Retrieved 2019-08-05.
  5. "Astronomical Significance of the Gavi Gangadhareshwara temple in Bangalore" (PDF). Current Science, Vol.95, No. 11, 10 December 2008. Retrieved 2010-06-18.
  6. "Gavi Gangadhareshwara Temple, Bangalore". Archived from the original on 2021-05-03. Retrieved 2021-05-03.

மேலும் படிக்க

தொகு
  • Hardy, Adam. Indian Temple Architecture: Form and Transformation. New Delhi. ISBN 8170173124.

வெளி இணைப்புகள்

தொகு