பாஜா குகைகள்
பாஜா குகைகள் அல்லது பஜே குகைகள் (Bhaja Caves or Bhaje caves) (மராத்தி: भाजे) இருபத்தி இரண்டு குகைகளின் தொகுப்பாகும்.[1] கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரை குகைகள், மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணாவாலா அருகில் பாஜா கிராமத்தில் நானூறு அடி உயரத்தில் உள்ளது.[2][3] மல்வலி தொடருந்து நிலையம், பாஜே கிராமத்தின் அருகில் உள்ளது.[4] இதனருகே கர்லா குகைகள் மற்றும் பேட்சே குகைகள் உள்ளது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்குகைகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.[5][6][7]
ஈனயானம் பௌத்தப் பிரிவினருக்கு உரிய இக்குகைள்,[1] 14 தூபிகள் கொண்டுள்ளது.[2][8][9] இத்தூபிகளில் சிலவற்றில் அம்பினிகா , தம்மகிரி மற்றும் சங்கதினா போன்ற பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற குகை எண் 12ல் உள்ள சைத்தியத்தில் [10], மரவேலைப்பாடுகளுடன், லாட வடிவ மேற்கூரை கொண்டுள்ளது. குகை எண் 28ல் உள்ள புத்த விகாரத்தின் முற்றவெளியில் அழகிய தூண்களைக் கொண்டுள்ளது.[8] இக்குகைகள் அழகிய மரவேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றதாகும்.[1] இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருதங்கம் இசைக்கும் மரச்சிற்பங்கள் மற்றும் நடனமாடும் மங்கைகையர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.
இக்குகைகளின் சிற்பங்கள், தலை அலங்காரம், மாலைகள் மற்றும் நகை வேலைபாடுகளுடன் கூடியது.[11]
குகை எண் 29ல் உள்ள விகாரையில் தேரோட்டும் சூரியன், யானைச் சவாரி செய்யும் இந்திரன் மற்றும் நுழைவு வாயில்களில் துவாரபாலகர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[12]
படக்காட்சிகள்
தொகு-
பாஜா குகைகளின் படிக்கட்டுகள்
-
முதன்மை சைத்தியத்தின் மரக்கூரை
-
பாஜா குகைச் சிற்பங்கள்
-
பாஜா குகைகள்
-
பாஜா குகைச் சிற்பங்கள்
-
பாஜா குகைச் சிற்பங்கள்
-
பாஜா குகை அருவி
-
பாஜா குகையின் நுழைவாயில்
-
பாஜா குகையின் முகப்பு
-
படிக்கட்டுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Ticketed Monuments - Maharashtra Bhaja Caves, Bhaja". Archaeological Survey of India, Government of India. Archived from the original on 10 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 Burgess, James (1880). "The caves in vicinity os Karle and the Bor Ghat". The Cave Temples of India. W.H. Allen. pp. 223–228. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
- ↑ "CHAPTER 20 PLACES OF INTEREST". Maharashtra Government - Tourism and Cultural Dept. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
- ↑ Malavli Railway Station
- ↑ "Ticketed Monuments - Maharashtra Bhaja Caves, Bhaja". Archived from the original on 2013-08-10. பார்க்கப்பட்ட நாள் 2017-08-22.
- ↑ "List of the protected monuments of Mumbai Circle district-wise" (PDF). Archived from the original (PDF) on 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2017-08-22.
- ↑ "Bhaja Caves Visitors' Sign". பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
- ↑ 8.0 8.1 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India: history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.
- ↑ Schopen, Gregory (1996). Bones, stones and Buddhist monks : collected papers on the archaeology, epigraphy, and texts of monastic Buddhism in India. Honolulu: University of Hawaii Press. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0824818709.
- ↑ "5000 Years of Indian Architecture". Archived from the original on 14 April 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-14.
- ↑ Behl, Benoy K (Sep 22 – Oct 5, 2007). "Grandeur in caves". Frontline 24 (19). http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2419/stories/20071005505506600.htm. பார்த்த நாள்: 6 July 2013.
- ↑ Knapp, Stephen (2009). "Karla and Bhaja Caves". Spiritual India handbook : a guide to temples, holy sites[,] festivals and traditions. Mumbai: Jaico Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8184950241. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Bhaja Caves தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பாஜா குகைகளின் காணொளி
- "Indian Tourist sites – In the footsteps of the Buddha"