பேட்சே குகைகள்

பேட்சே குகைகள் அல்லது பேட்சா குகைகள் (Bedse Caves - Bedsa Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில், புனே மாவட்டத்தின், மவல் தாலுக்காவில் உள்ள இரண்டு பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுதியாகும்.

பேட்சா பௌத்த குடைவரையின் சைத்தியம்

பேட்சா குகைகள், புனேவிலிருந்து லோனாவாலா செல்லும் வழியில் 60 கிமீ தொலைவில் உள்ளது. இக்குடைவரைகள், சாதவாகனர் ஆட்சிக்கு முன்னர் [1] கிமு முதலாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[2] இதனருகே கர்லா குகைகள் மற்றும் பாஜா குகைகள் உள்ளது.

பேட்சா குடைவரை குகைகள் இரண்டு முக்கியத் தொகுதிகளாக உள்ளது. இதில் குகை எண் 7ல் சைத்தியத்துடன் கூடிய பிக்குகளின் தியான மண்டபமும், பெரிய தூபியும் கொண்டது. குகை எண் 11ன் குடைவரை விகாரையின் நுழைவாயில், குதிரை லாட வடிவத்தில், புடைப்புடன் கூடிய போதிகை அமைக்கப்பட்டுள்ளது.[3]

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Michell, 351
  2. Harle, 54
  3. Michell, 351-352

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bedse caves
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



வார்ப்புரு:புனே மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்சே_குகைகள்&oldid=3718348" இலிருந்து மீள்விக்கப்பட்டது