காக்கத்துருத்து
காக்கத்துருத்து (Kakkathuruth) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் வேம்பநாட்டு ஏரியால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு ஆகும். [1] காகங்களின் தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான நேசனல் சியோகிராஃபிக் தொலைக்காட்சி , காக்கத்துருட்டில் இருந்து பார்க்கப்படும் சூரிய மறைவு நிகழ்வு உலகின் மிகச் சிறந்ததாக காட்சி அனுபவம் என வர்ணிக்கிறது.[2] கிரகத்தின் வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட 24 மிக அழகான படங்களில் ஒன்றாக இக்காட்சியை இந்நிறுவனம் சேர்த்துள்ளது. [3]
காக்காத்துருத்து Kakkathuruth | |
---|---|
தீவு | |
ஆள்கூறுகள்: 9°49′01″N 76°19′30″E / 9.817°N 76.325°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
District | ஆலப்புழா |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கண்ணோட்டம்
தொகுஆலப்புழாவின் வடக்கு முனையில் உள்ள எழுபுன்னா கிராமத்தில் காக்கத்துருத்து தீவு அமைந்துள்ளது. [4] ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரமல்லூர் காக்கத்தூருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியாகும். [5] எரமல்லூரில் இருந்து படகு மூலம் தீவை அணுகலாம். மூன்று கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. [6] வேம்பநாட்டு ஏரியின் நடுவில் அமைந்துள்ள காக்கத்துருத்து காகங்கள் மற்றும் பல பறவைகளின் புகலிடமாகமாகவும் பறவை ஆர்வலர்களின் விருப்பமான இடமாகவும் உள்ளது. [7]
தீவில் பெரிய சாலைகள் எதுவும் இல்லை மற்றும் மண் சாலைகளில் மிதிவண்டி முக்கிய வாகனமாகப் பயன்படுத்தப்படுகிறது. தீவில் அங்கன்வாடியும் (குழந்தைகளுக்கான பள்ளி) மற்றும் ஆயுர்வேத மருத்துவமனையும் உள்ளன. [8] சதுப்பு நிலங்கள், தென்னந்தோப்புகள் எங்கும் காணக்கூடியவையாக உள்ளன. வேம்பநாட்டு காயலின் பரந்த தன்மை காக்காத்துருத்தை ஆலப்புழாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. [9] 2016 ஆம் ஆண்டில், நேசல் சியோகிராஃபிக் தொலைக் காட்சி நிறுவனம் உலகின் 24 மிக அழகான இடங்களில் ஒன்றாக காக்காத்துருத்தை தேர்ந்தெடுத்தது. [10]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Magical sunsets to exhilarating village experience: Kakkathuruthu awaits travel enthusiasts" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
- ↑ "നാടന് കള്ളും അപ്പവും കരിമീനും ഞണ്ടും; കാക്കത്തുരുത്തിലേക്ക് വിട്ടാലോ?" (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
- ↑ Kerala's Economic Development: Emerging Issues and Challenges (in ஆங்கிலம்).
- ↑ "Kakkathuruthu beckons nature lovers with its magical sceneries". OnManorama.
- ↑ "കാക്കത്തുരുത്ത്: കേരളത്തിന്റെ സമ്പദ് വ്യവസ്ഥ മാറ്റാൻ കഴിയുന്ന സുവർണ ദ്വീപ്". News18 Malayalam. 2019-10-20.
- ↑ "കാക്കത്തുരുത്തിന്റെ പ്രത്യേകത എന്താണ്?". ManoramaOnline.
- ↑ "Kakkathuruthu | Tiny Island | Tourist Places in Alappuzha". Kerala Tourism.
- ↑ "ലോകശ്രദ്ധയാകർഷിച്ച വിനോദസഞ്ചാരകേന്ദ്രം, പക്ഷേ ഒരു പാലം ഇന്നാട്ടുകാർക്ക് നടക്കാത്ത മനോഹര സ്വപ്നം" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
- ↑ "Kakkathuruthu, The Tiny Crow Island In Kerala Is Now On NatGeo's List Of World Destinations" (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
- ↑ "Kakkathuruthu on NatGeo's must-visit list" (in en-IN). https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/Kakkathuruthu-on-NatGeo%E2%80%99s-must-visit-list/article16075622.ece.