காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்
காஞ்சிபுரம் தொடருந்து நிலையம் (Kanchipuram railway station) இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் நகரத்திலுள்ள தொடருந்து நிலையம் ஆகும்.[1] இந்த தொடருந்து நிலையத்தின் குறியீடு ஆங்கிலத்தில் CJ[2] என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய ரயில்வேயின் எட்டு மண்டலங்களில் ஒன்றான தென்னக இரயில்வே மண்டலத்தின் சென்னை பிரிவின் ஒரு பகுதியாக இந்த நிலையம் உள்ளது.[3]
காஞ்சிபுரம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கோனேரிக்குப்பம், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°50′54″N 79°42′18″E / 12.8484°N 79.7051°E | ||||
ஏற்றம் | 85 மீட்டர்கள் (279 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | CJ | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சென்னை | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 2004 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
இருப்பிடம் மற்றும் அமைப்பு
தொகுகாஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் நகரத்தின் மையத்தில் பொன்னேரியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.[4] இது உள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, அருகிலுள்ள விமானநிலையம் 72 கி.மீ தூரத்திலுள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் ஆகும்.
அரக்கோணம் - செங்கல்பட்டு கிளை வழித்தடத்தில், இந்த நிலையம் உள்ளது. இது உள்ளூர் மற்றும் புறநகர் போக்குவரத்துக்கான முக்கிய வழியாகும்.
சென்னை புறநகர் இருப்பு வழியில் சென்னைக் கடற்கரை - திருமால்பூர் மார்க்கத்தில் காஞ்சிபுரம் இரயில் நிலையம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை தொன்மை வாய்ந்த நிலையமாக அறிவிக்க வேண்டும்: தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் மக்கள் கோரிக்கை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/626560-kanchipuram-railway-station.html. பார்த்த நாள்: 17 September 2024.
- ↑ "Station Code Index" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 2023–24. p. 6. Archived from the original (PDF) on 16 February 2024. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 3. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
- ↑ "காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் முழு நாளும் இயங்குமா?". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-kancheepuram/will-the-booking-center-at-kanchipuram-new-railway-station-be-open-all-day/3383381. பார்த்த நாள்: 17 September 2024.