காட்மியம் சயனைடு

காட்மியம் சயனைடு (Cadmium cyanide) என்பது Cd(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் மின்முலாம் பூசுவதற்குப் பயன்படுகிறது. மற்ற காட்மியம் மற்றும் சயனைடு சேர்மங்களைப் போல இதுவும் அதிக நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

காட்மியம் சயனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காட்மியம்(II) சயனைடு
இனங்காட்டிகள்
542-83-6 Y
ChemSpider 61630 Y
InChI
  • InChI=1S/2CN.Cd/c2*1-2;/q2*-1;+2 Y
    Key: NHMJUOSYSOOPDM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2CN.Cd/c2*1-2;/q2*-1;+2
    Key: NHMJUOSYSOOPDM-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68335
  • [Cd+2].[C-]#N.[C-]#N
பண்புகள்
Cd(CN)2
வாய்ப்பாட்டு எடை 164.45 கி/மோல்
தோற்றம் வெண்மை கனசதுர படிகங்கள்
அடர்த்தி 2.226 கி/செ.மீ3
1.71 கி/100 மி.லி (15 °C)
2.2 கி/100மி.லி (20 °செ)
கரைதிறன் ஆல்ககாலில் சிறிதளவு கரையும்
கார உலோகங்களின் சயனைடுகள் மற்றும் ஐதராக்சைடுகளில் கரைகிறது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காட்மியம் குளோரைடு,
காட்மியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக சயனைடு,
கால்சியம் சயனைடு,
மக்னீசியம் சயனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

உலோகங்களின் மீது காட்மியத்தை மெல்லிய அடுக்காக மின்முலாம் பூசுவதற்கு உரிய மின்பகுளியாக இது பயன்படுகிறது.

தயாரிப்பு மற்றும் அமைப்பு

தொகு

காட்மியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சயனைடை சேர்த்து வினைபுரிய வைப்பதன் மூலம் காட்மியம் சயனைடைத் தயாரிக்கமுடியும்.:[1]

Cd(OH)2 + 2 HCN → Cd(CN)2 + 2 H2O

Zn(CN)2 சேர்மத்தில் இருப்பதுபோல இச்சேர்மமும் வைரத்தின் படிகவமைப்பைப் பெற்றுள்ளது.

வினைகள்

தொகு

வழக்கத்திற்கு மாறாக இந்த உலோகசயனைடான துத்தநாக சயனைடு போல நீரில் சிறிதளவு கரைகிறது. கூடுதலாக சயனைடைக் கரைசலில் சேர்த்தால் "[Cd(CN)3]" மற்றும் [Cd(CN)4]2− நிலைகள் வழியாக மேலும் சிறிதளவு கரைகிறது. காட்மியம் சயனைடு, அமிலங்களுடன் வினைபுரியும் போது, ஐதரசன் சயனைடு வாயுவைத் தோற்றுவிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Karl-Heinz Schulte-Schrepping, Magnus Piscator "Cadmium and Cadmium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2007 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_499.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மியம்_சயனைடு&oldid=2747074" இலிருந்து மீள்விக்கப்பட்டது