காண்டாமிருக இருவாச்சி
காண்டாமிருக இருவாச்சி Rhinoceros hornbill | |
---|---|
சிங்கப்பூர் மிருகக்காட்சிச்சாலையில் ஒரு சோடி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | கொர்டேட்டா
|
வகுப்பு: | |
வரிசை: | கொரேசிஃபார்மல்
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. rhinoceros
|
இருசொற் பெயரீடு | |
Buceros rhinoceros L., 1758 |
காண்டாமிருக இருவாச்சி (Buceros rhinoceros) என்னும் பறவை ஆசியப்பறவைகளிலேயே மிகப் பெரிய அலகு கொண்டது.[2] இதன் அலகானது 91–122 செ.மீ (36–48 அங்குலம்) நீளமானது.[3] பழங்களைப் பறிப்பது, கூடுகட்டுவது, குஞ்சுகளுக்கு உணவூட்டுவது என்று பல வேலைகளை இந்தப் பறவை தனது அலகைக் கொண்டு செய்கிறது. தன் இணையை அழைப்பதற்கு இப்பறவை குரல் கொடுக்கும்போது, இந்த அலகுக் குரலை அதிக தொலைவுக்கு எதிரொலிக்க வைக்கிறது. காண்டாமிருகத்தின் கொம்புபோல இப்பறவையின் அலகின்மீது ஒரு கொம்பு இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.[4] 90 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடிய[சான்று தேவை] இப்பறவை போர்னியோ தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேசியத் தீபகற்பம், சிங்கப்பூர், தெற்கு தாய்லாந்து போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
இது மலேசிய நாட்டின் தேசியப் பறவையும் ஆகும்.
தோற்றக்குறிப்பு
தொகுஇது மரத்தில் வாழக்கூடிய ஒரு பெரிய இருவாச்சிப் பறவை, 80 to 90 cm (31–35 அங்) நீளமுடையது. ஆண் பறவைகள் 2,465 to 2,960 g (87.0–104.4 oz) எடையும் பெண் பறவைகள் 2,040 to 2,330 g (72–82 oz) வரையும் இருக்கும். இது பெரும்பாலும் கருப்பாகவும் கால்கள் வெள்ளையாவும் வாலானது ஒரு கருப்புப் பட்டையுடன் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதனுடைய பெரிய அலகு இளஞ்சிவப்பு, சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் பின்புழையில் உள்ள பிரீன் சுரப்பியில் இருந்து வரும் பிரீன் எண்ணெய் பறவையின் அலகுகளுடன் உராய்ந்து அலகுகள் இந்த நிறம் பெறுகின்றன. ஆண் பறவைகளின் கண்கள் சிவப்பு நிறத்தில் கருப்பு வளையத்துடனும் பெண் பறவைகளின் கண்கள் வெள்ளை நிறத்தில் சிவப்பு வளையத்துடனும் இருக்கும்.[5]
படங்கள்
தொகு-
பிட்சுபர்கின் தேசியப் பறவையகத்தில் ஓர் ஆண் பறவை. ஆண் பறவைகளுக்கு கண் சிவப்பாக இருக்கும்.
-
இங்கிலாந்தின் செஸ்ட்டர் விலங்ககத்தில் உள்ள ஒரு பெண் பறவை
-
செர்மனியில் ஒரு பறவை
குறிப்புகள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Buceros rhinoceros". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ http://www.sarawaktourism.com/kenyalang.html பரணிடப்பட்டது 2005-12-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-30. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.
- ↑ தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 10.12.2014
- ↑ Kemp, A C (2001). "Family Bucocerotidae (Hornbills)". In Josep, del Hoyo; Andrew, Elliott; Sargatal, Jordi (eds.). Handbook of the Birds of the World. Volume 6, Mousebirds to Hornbills. Barcelona: Lynx Edicions. pp. 436–487. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-87334-30-6.