காதல் கசக்குதய்யா

காதல் கசக்குதய்யா (Kadhal Kasakuthaiya) (ஆங்கிலம்: Love Feels Bitter) என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை துவாரக் ராஜா என்பவர் இயக்கியுள்ளார். இவருக்கு இது முதல் திரைப்படமாகும். இதற்கு முன் சில தமிழ் குறும்படங்களை இயக்கியுள்ளார். துருவா, வெண்பா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சார்லி, கல்பனாதீபா நேத்ரன், வைஷாலி, ஜெயகனேஷ் ஆகியோர் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்கப்பட்டது. இத் திரைப்படம் செப்டம்பர் 8, 2017 வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

காதல் கசக்குதய்யா
இயக்கம்துவாரக் ராஜா
தயாரிப்புவி. மதியழகன், ரம்யா
இசைதரண் குமார்
நடிப்புதுருவா, வெண்பா
ஒளிப்பதிவுபாலஜி சுப்பிரமணியன்
படத்தொகுப்புமுனீஷ்
கலையகம்எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட்
வெளியீடு8 செப்டம்பர் 2017 (2017-09-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்தொகு

பள்ளிக்கூடம் செல்லக்கூடிய ஒரு பெண்ணிற்கும் விடலைப் பருவ வயதிலுள்ள ஆணிற்கும் இடையேயான காதலைப் பற்றியதாகும். கதையின் நாயகன் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அர்ஜூனின் செல்லிடத் தொலைபேசி எண்ணை அவருக்குத் தெரியாமல் தியா பெறுகிறார். இவர்களின் இருவரும் தொலைபேசி அழைப்புகளின் மூலமாகவே நண்பர்களாகின்றனர். பின் இருவரும் காதலிக்கத் துவங்கி நேரில் சந்திக்க விரும்புகின்றனர்.அதுவரையில் தியாவை அர்ஜூன் பார்த்தது இல்லை. தியாவை பள்ளிச் சீருடையில் பார்த்த போதுதான் அவர் பள்ளி மாணவி என்பது இவருக்குத் தெரிய வருகிறது. இதனால் வயது வித்தியாசம் கூறி அவரது காதலை துருவா மறுக்கிறார்.[2] ஆனாலும் தியா தொடர்ந்து காதலிக்கிறார். இறுதியில் இவர்கள் இணைந்தார்களா என்பதனை இறுதியில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார்.

கதை மாந்தர்கள்தொகு

 • அர்ஜூனாக துருவா
 • தியாவாக வெண்பா
 • தியாவின் தந்தையாக சார்லி
 • அர்ஜூனின் தாயாக கல்பனா
 • லிங்கா
 • ஜெயகனேஷ்
 • சிவம்
 • நவீன்

தயாரிப்புதொகு

துவாரக் ராஜா ஊடகவியல் துறையில் பயின்றார். சில தமிழ் குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தைப் பற்றி கூறுகையில் இது விடலைப் பருவத்தில் உள்ள ஒரு பெண்ணிற்கும் பையனிற்கும் இடையேயான காதற் செய்கை பற்றிய கதையாகும் எனத் தெரிவித்தார். இது மாலை நேரம் எனும் தமிழ் குறும்படத்தின் மீள் உருவாக்கம் ஆகும். ஆனால் இயக்குநர் துவாரக் ராஜா திரைப்படத்திற்கான காலம் கருதி சில மாற்றங்களைச் செய்திருந்தார்.[3] திலகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற துருவா கதாநாயகனாக ஒப்பந்தம் ஆனார். கற்றது தமிழ் திரைப்படத்தில் அஞ்சலியின் (நடிகை) சிறு வயதுக் கதாப்பத்திரத்தில் நடித்த வெண்பா நாயகியாக ஒப்பந்தம் ஆனார்.[4] இந்தப் படத்திற்கான கதையை துவாராக் ராஜா பத்து நாட்களில் எழுதி முடித்தார் . இருபத்தி நான்கு நாட்களில் படப்பிடிப்பை முடித்தனர்[5].

வெளியீடுதொகு

இந்தத் திரைப்படம் செப்டம்பர் 8, 2017 இல் வெளியானது. கலவையான விமர்சங்களையே பெற்றுத் தந்தது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்தத் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தைத் தந்தது. பின் ஹார்ட் பீட் எனும் பெயரில் தெலுங்கில் ஜனவரி 19, 2018 இல்வெளியானது.[6]

ஒலி வரிதொகு

Untitled

இந்தத் திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைத்தவர் தரண் குமார்.[1] மியூசிக் 247 எனும் நிறுவனம் இதற்கான இசை உரிமையைப் பெற்றது.ஆறு பாடல்களைக் கொண்ட இதன் ஒலிவரியானது ஆகஸ்டு 23,2017 இல் வெளியானது.

காம்ப்ளான் பாய்தொகு

தரண் குமார் மற்றும் எம். எம. மோனிஷா இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். இதன் நீளம் 4.42 நிமிடங்கள் ஆகும்.

ஹலோ அர்ஜூன்தொகு

தரண்குமார் இசையில் ஹரினி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். இதன் நீளம் 4.14 நிமிடங்கள் ஆகும்.

அம்மா செல்லம்தொகு

மாளவிகா சுந்தர் எனும் பாடகர் இதனைப் பாடியுள்ளார். இதன் நீளம் 4.42 நிமிடங்கள் ஆகும்.

வெயில் வந்தால்தொகு

அனிஷா சந்தி என்பவர் இதனைப் பாடியுள்ளார். 1.20 நிமிடங்கள் உள்ள பாடலகும்.

கருப்பாடல்கள் (தீம்)தொகு

டஸ்க் டான்ஸ், காம்ப்ளான் பாய் ஆகிய இரு கருப்பாடல்கள் உள்ளன. இவற்றின் நீளங்கள் முறையே 2.31 மற்றும் 1.49 ஆகும்

சான்றுகள்தொகு

 1. 1.0 1.1 "Kadhal Kasakuthaiya Movie Review | Nettv4u.com", nettv4u (in ஆங்கிலம்), retrieved 2018-04-03
 2. Team, Vikatan Review (2017-09-09), "இந்தக் காதல் கதை இனிக்குதா... கசக்குதா? - 'காதல் கசக்குதய்யா' விமர்சனம்", Vikatan, retrieved 2018-04-03
 3. "Age no bar for this love story titled 'Kadhal Kasakkudhaiyya' | Tamil Movie News". பார்த்த நாள் 8 September 2017.
 4. "Love from a woman’s perspective". பார்த்த நாள் 8 September 2017.
 5. "A minor love story- The New Indian Express". பார்த்த நாள் 8 September 2017.
 6. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-details/heart-beat/movieshow/61933073.cms

வெளியிணைப்புகள்தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் காதல் கசக்குதய்யா

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_கசக்குதய்யா&oldid=2908294" இருந்து மீள்விக்கப்பட்டது