காத்ரா
காத்ரா (Khatra) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள பாங்குரா மாவட்டத்தின் காத்ரா உட்பிரிவிலுள்ள காத்ரா சமூக மேம்பாட்டு தொகுதியிலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இது காத்ரா உட்பிரிவின் தலைமையகமாகவும் இருக்கிறது.[1]
காத்ரா | |
---|---|
மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் | |
ஆள்கூறுகள்: 22°59′N 86°51′E / 22.98°N 86.85°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | பாங்குரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.6161 km2 (0.6240 sq mi) |
ஏற்றம் | 154 m (505 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,382 |
• அடர்த்தி | 4,600/km2 (12,000/sq mi) |
மொழிகள்* | |
• அலுவல் | வங்காளம், சந்தாளி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 722140 |
தொலைபேசி இணைப்பு எண் | +91 3264 |
மக்களவைத் தொகுதி | பாங்குரா |
சட்டப் பேரவைத் தொகுதி | இராணிபந்த் |
இணையதளம் | bankura |
அமைவிடம்
தொகுகாத்ரா மேற்கு வங்கத்தின் தெற்குப் பகுதியின் மேற்கே உள்ள பாங்குரா மாவட்டத்தின் தென்மேற்கில் உள்ளது. இது 22.98 ° வடக்கு 86.85 ° கிழக்கு பாகையில் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 154 மீ (505 அடி) ஆகும்.[2]
பாங்குரா, மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் விவசாயத்திற்கு முக்கியமான கங்க்சபாதி பாசனத் திட்டம் இங்கு அமைந்துள்ளது.[3] இது கிட்டத்தட்ட முழுமையாக கிராமப்புறப் பகுதியாகும்.[4]
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காத்ராவில் மொத்தம் 7,382 மக்கள் தொகை இருந்தது. அதில் 3,774 (51%) ஆண்களும் 3,608 (49%) பெண்களும் ஆவர். 6 வயதிற்குட்பட்ட மக்கள் தொகை 672 ஆகும். காத்ராவில் மொத்த கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5,658 (6 ஆண்டுகளில் 84.32% மக்கள்).[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Official District Website பரணிடப்பட்டது 2008-07-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Falling Rain Genomics, Inc - Khatra
- ↑ "District Census Handbook Bankura" (PDF). pages 13-17. Directorate of Census Operations West Bengal. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
- ↑ "District Statistical Handbook 2014 Bankura". Table 2.4b. Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "2011 Census – Primary Census Abstract Data Tables". West Bengal – District-wise. Registrar General and Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mukutmanipur