காபேரி காயேன்
காபேரி காயேன் (Kaberi Gayen) என்பவர் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவாவார். 1970 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பத்திரிகையாசிரியர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் இவர் அறியப்படுகிறார். சமூக சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையின் மீதும், பாலின சமமின்மை மீதும் இவரது வெளிப்படையான பார்வைகளால் நன்கு அறியப்படுகிறார்.[1] காபேரி கேய்ன் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
காபேரி காயேன் Kaberi Gayen | |
---|---|
কাবেরী গায়েন | |
தாய்மொழியில் பெயர் | কাবেরী গায়েন |
பிறப்பு | 1 சனவரி 1970 பரிசால், கிழக்கு பாகிஸ்தான், Pakistan |
படித்த கல்வி நிறுவனங்கள் | தாக்கா பல்கலைக்கழகம் (பி.ஏ, எம்.ஏ) எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகம், முனைவர் |
பணி | கல்வியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1994 - முதல் |
அறியப்படுவது | சமூகச் செயற்பாட்டாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | முக்தியுதெர் சோலோச்சிட்டெர் நாரி நிர்மன் |
டாக்கா பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் பத்திரிகை துறையின் பேராசிரியராகவும், ஐக்கிய இராச்சியத்தின் எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளராகவும் காயேன் பணியாற்றுகிறார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகாயேன் வங்கதேசத்தின் குல்னாவில் உள்ள ஒரு வங்காள கயாசுதா குடும்பத்தில் பிறந்தார். பாரிசால் அரசு மகளிர் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மேலும் டாக்காவிற்குச் சென்று 1989 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் ஆனர்சு பட்டம் பெற்றார். இதற்காக இவருக்கு தில் நோசின் கானம் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டில் இதே பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் படிப்பை முடித்தார், அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற எடின்பர்க்கிற்கு பயணம் செய்தார்.இவரது ஆய்வறிக்கை கிராமப்புற வங்காளதேசத்தில் பெண்களின் கருவுறுதல் நடத்தையும் தகவல்தொடர்புகளின் செல்வாக்கும் என்பதைப் பற்றியதாக இருந்தது.
தொழில்
தொகுகாயேன் டாக்கா பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முழுநேர பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஐக்கிய இராச்சியத்தின் எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் விரிவுரையாளராகவும் இருக்கிறார்.[2] சமூக வலைப்பின்னல் பகுப்பாய்வு மற்றும் வங்காளதேச ஆசியச் சங்கத்தின் பன்னாட்டு வலையமைப்பில் உறுப்பினராக உள்ளார். வங்கதேச ஆங்கில மொழி செய்தித்தாள்களான தி டெய்லி சிடார் மற்றும் பிரோத்தோம் அலோ உட்பட பல்வேறு தேசிய செய்தித்தாள்களுக்கான கட்டுரையாளராகவும் உள்ளார். "பழைய தொழிலாளர்களின் சமூக வலைப்பின்னலில்" பணியாற்றுவதற்காக 2004 ஆம் ஆண்டு இவருக்கு ஐரோப்பிய ஒன்றிய மானியம் வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க எடின்பர்க் ராயல் கழகத்தின் மானியத்தைப் பெற்றார், பின்னர் டன்டி பல்கலைக்கழகம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளை வழங்குவதற்காக அழைக்கப்பட்டார்.[3] ஓச்சூல் புர்ட்வாங்கன் பல்கலைக்கழகத்தின் செருமன் நாட்டு கல்வியாளர் யோகன்னசு கார்ல் மகலின் "நிறுவன அறக்கட்டளை: அளவீடு, தாக்கம், மற்றும் மேலாண்மை கணக்காளர்களின் பங்கு" என்ற புத்தகம் எழுதுவதற்கு இவர் உதவியுள்ளார்.
சமூக செயற்பாடு
தொகுகாயேன் மனித உரிமை ஆர்வலர் ஆவார். இந்து, கிறித்துவ மற்றும் நாத்திக சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் பேசும் நாத்திக பதிவர் ஆசிப் மொகிதீன் போன்றவர்களுக்காக குரல் கொடுத்தவர். வங்கதேச நீதித்துறையில் நீதிக்காக பிரச்சாரம் செய்தார். மேலும் மத தீவிரவாதம் மற்றும் அரசாங்க ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். வங்காளதேசத்திலுள்ள பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை ஆதரித்தார்.[4] தொழிலாளர் உரிமை ஆர்வலர்களை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வங்காளதேச சமூகத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பேசியுள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தல்
தொகுஇசுலாமிய பயங்கரவாதிகளான அன்சாருல்லா பங்களா அணியினரிடமிருந்து கொலை மிரட்டல் பெற்ற பத்து நபர்களில் இவரும் ஒருவர். இந்த பட்டியலில் வங்கதேச பிரதமரின் ஆலோசகர், டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் முகமது சபர் இக்பால் ஆகியோர் அடங்குவர் . பதிவர் அவிசித் ராயின் கொலையை நடத்தியதாக தீவிரவாத குழுவும் ஒப்புக்கொண்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gayen, Kaberi (28 March 2015). "Women not portrayed as Freedom Fighters on Screen". The Daily Star. http://www.thedailystar.net/in-focus/women-not-portrayed-freedom-fighters-screen-74241.
- ↑ 2.0 2.1 "Department of Mass Communication & Journalism". University of Dhaka. Archived from the original on 1 August 2015. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
- ↑ Gayen, Kaberi. "Faculty Details" (PDF). University of Dhaka. Archived from the original (PDF) on 1 November 2013. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
- ↑ "Academician in Bangladesh hails start of war crimes trial". Archived from the original on 24 February 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
- ↑ Khan, Mohammad Jamil; Ahmed, Arif. "10 citizens get 'Ansarullah death threats'". Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)