காமிசெட்டி பரசுராம் நாயுடு

இந்திய அரசியல்வாதி

காமிசெட்டி சிறீ பரசுராம் வரபிரசாதா ராவ் நாயுடு (Kamisetty Sri Parasurama Varaprasada Rao Naidu) (அக்டோபர் 2,1921-சனவரி 19,1989), என்பவர் காமிசெட்டி பரசுராம் நாயுடு என நன்கு அறியப்பட்டவர். இவர் 1985 முதல் 1989 வரை புதுச்சேரி சட்டமன்றத்தில் சபாநாயகராக பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] 1963 முதல் 1964 வரை புதுச்சேரி சட்டமன்றத்தின் முதல் துணைச் சபாநாயகராகவும், பின்னர் 1972 முதல் 1974 வரை மற்றொரு பதவிக்காலத்தில் பணியாற்றினார். யானாமில் உள்ள ஓர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.[2]

காமிசெட்டி பரசுராம் நாயுடு
உறுப்பினர்-பிரஞ்ச் இந்தியா பிரதிநிதித்துவ சபை
பதவியில்
1946–1951
முன்னையவர்புதியது
பின்னவர்கானகாலா தாட்யா
தொகுதியானம்
உறுப்பினர்-பாண்டிச்சேரி சட்டமன்றம்
பதவியில்
1955 – 30 சூன் 1963
முன்னையவர்புதியது
பின்னவர்நீக்கப்பட்டது
தொகுதியானம்
துணை சபாநாயகர்-புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில்
27 நவம்பர் 1963 – 24 ஆகத்து 1964
முன்னையவர்புதியது
பின்னவர்வி. என். புருசோத்தமன்
பதவியில்
5 ஏப்ரல் 1972 – 2 சனவரி 1974
முன்னையவர்எம். எல். செல்வரஜூலு
பின்னவர்[note 1]
சபாநாயகர்
பதவியில்
27 மார்ச்சு 1985 – 19 சனவரி 1989
முன்னையவர்பாரூக் மரைக்காயர்
பின்னவர்எம். சந்திரகாசு
உறுப்பினர்-புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில்
1 சூலை 1963 – 19 சனவரி 1989
முன்னையவர்புதியது
பின்னவர்இரக்சா அரிகிருஷ்ணா
தொகுதியானம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Kamichetty Sri Parassourama Varaprasada Rao Naidu

(1921-10-02)2 அக்டோபர் 1921
யானம், பிரெஞ்சு இந்தியா
இறப்பு19 சனவரி 1989(1989-01-19) (அகவை 67)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்காமிசெட்டி சாவித்திரி
பிள்ளைகள்1 மகன்; 2 மகள்கள்
வாழிடம்யானம்

பிறப்பும் குடும்பமும்

தொகு

காமிசெட்டி யானாமில் ஒரு காபூ குடும்பத்தில்[3] முன்னாள் மைர் டி யானாவ், காமிசெட்டி வேணுகோபால ராவ் நாயுடு மற்றும் கமலம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[4] இவர் ஏலூரைச் சேர்ந்த படேட்டி குடும்பத்தைச் சேர்ந்த காமிசெட்டி சாவித்திரியை மணந்தார்.[5] இவர் தனது தந்தைக்குப் பிறகு யானாமில் இறக்கும் வரை ஒரு சிறந்த தலைவராக இருந்தார்.[6] இந்தியத் திரைப்படத்துறையின் சிறந்த நடிகரான எஸ். வி. ரங்கராவின் மைத்துனர் ஆவார்.

பிரதிநிதித்துவ சபை உறுப்பினர்

தொகு

காமிசெட்டி 1946, 1955 மற்றும் 1959 தேர்தல்களில் வெற்றி பெற்று[7] 1946 முதல் 1964 வரை பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.[8] இருப்பினும், 1951 தேர்தலில் இவரை கனகலா டாடாயா தோற்கடித்தார்.[9]

சட்டப்பேரவை உறுப்பினர்

தொகு

தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் தோற்கடிக்க முடியாதவராக காமிசெட்டி இருந்தார். 1964 (இதேகா) 1969 (சுயேச்சை) 1974 (சுயேச்சை 1977 (ஜனதா கட்சி) 1980 (சுயேச்சை) மற்றும் 1985 (இதேகா) எனத் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதில் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளாமல் இவர் இந்தத் தொகுதியைத் தன்வசம் வைத்திருந்தார். உயிருடன் இருந்த வரை, புதுச்சேரி இந்தியாவுடன் சட்டப்படி இணைக்கப்பட்ட பின்னரும், பிராந்தியச் சட்டமன்றத்திற்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி 1964-இல் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டார்.

இத்தேர்தல்களில் இவர் பெரும்பாலான நேரங்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் இரண்டு முறை துணைச் சபாநாயகராகவும் இருந்தார்.[10][11] 1985ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு காமிச்செட்டி புதுச்சேரி சட்டமன்றத்தின் 10ஆவது சபாநாயகராக ஆனார்.[1] இவர் 1989 சனவரி 19 அன்று பதவியில் இருந்தபோதே இறந்தார். 1989 வரை புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் மிக நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இவராவார்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Union Territory of Pondicherry".
  2. Yanam high school
  3. More, J. B. Prashant (2007). The Telugus of Yanam and Masulipatnam: From French Rule to Integration with India (in ஆங்கிலம்). p. 263.
  4. "Who's who in India". Business Press Private Limited. 1986. p. 294.
  5. "Directory of Indian Women Today, 1976". Ajīta Kaura, Arpana Caur. India International Publications. 1976. p. 251.
  6. J B Prashant More (2007). "The Telugus of Yanam and Masulipatnam: From French rule to Integration with India"..
  7. Journal Officiel des établissements français dans l'Inde, 1946.
  8. "India, A Reference Annual 1956". Ministry of Information and Broadcasting, Government of India. Publications Division. 1956. p. 494.
  9. Journal Officiel des établissements français dans l'Inde, 1952.
  10. "India, A Reference Annual 1964". Ministry of Information and Broadcasting, Government of India. Publications Division. 1964. p. 398.
  11. "India, a Reference Annual, 1974". Ministry of Information and Broadcasting, Government of India. Publications Division. 1974. p. 371.

குறிப்புகள்

தொகு
  1. நான்காவது பாண்டிச்சேரி சட்டமன்றம்,துணை சபாநாயகராக எவரும் நியமிக்கப்படவில்லை