புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969


புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969 அல்லது பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969 (ஆங்கிலம்: 1969 Pondicherry Legislative Assembly election; பிரஞ்சு: Assemblée législative de Pondichéry) என்பது முன்னர் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கான 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1969ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். 1969-இல் 3ஆவது புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசு கட்சி அதிக வாக்குகளை வென்றது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக இடங்களை வென்றது. மேலும் பாரூக் மரைக்காயர் புதுச்சேரியின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969

← 1964 9 மார்ச்சு 1969 1974 →
பதிவு செய்த வாக்காளர்கள்228,754
வாக்களித்தோர்81.59%
 
தலைவர் பாரூக் மரைக்காயர்
கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய தேசிய காங்கிரசு

முந்தைய முதலமைச்சர்


குடியரசுத்தலைவர் ஆட்சி

முதலமைச்சர் -தெரிவு

பாரூக் மரைக்காயர்
திராவிட முன்னேற்றக் கழகம்

பாண்டிச்சேரி பிரதேசம் இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தால் 30 ஒற்றை உறுப்பினர் சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

முடிவுகள்

தொகு
 
கட்சிவாக்குகள்%இருக்கைகள்+/–
இந்திய தேசிய காங்கிரசு78,05242.621012
திராவிட முன்னேற்றக் கழகம்61,71733.7015புதிது
இந்தியப் பொதுவுடமைக் கட்சி23,11512.623புதிது
சுயேச்சை (அரசியல்)20,25011.0622
மொத்தம்1,83,134100.00300
செல்லுபடியான வாக்குகள்1,83,13498.13
செல்லாத/வெற்று வாக்குகள்3,4971.87
மொத்த வாக்குகள்1,86,631100.00
பதிவான வாக்குகள்2,28,75481.59
மூலம்: இதேஆ[2]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு
தொகுதி இட ஒதுக்கீடு உறுப்பினர் கட்சி
முத்தியால்பேட்டை பொது கே. முருகையான் திராவிட முன்னேற்றக் கழகம்
கொருசுகுப்பம் பொது ஜி. பெருமாள் ராஜா திராவிட முன்னேற்றக் கழகம்
கேசிகேட் பொது பி. அன்சாரி துரைசாமி இந்திய தேசிய காங்கிரசு
ராஜ் பவன் பொது டி. காந்தராஜ் இந்திய தேசிய காங்கிரசு
புஸ்ஸி பொது சி. எம். அசாரப் திராவிட முன்னேற்றக் கழகம்
உப்பளம் பொது எஸ். கோவிந்தராஜலு திராவிட முன்னேற்றக் கழகம்
நெல்லித்தோப்பு பொது என். ரங்கநாதன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
முதலியார்பேட்டை பொது வி. கைலாசா சுப்பையா இந்தியப் பொதுவுடமைக் கட்சி
அரியாங்குப்பம் பொது எஸ். பெருமாள் திராவிட முன்னேற்றக் கழகம்
குருவிநத்தம் பொது கே. ஆர். சுப்பிரமணிய படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு
பாகூர் ப.இ. கே. கிருஷ்ணசாமி இந்திய தேசிய காங்கிரசு
நெட்டப்பாக்கம் பொது டி. ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம்
திருபுவனை ப.இ. எம். தங்கவேலு திராவிட முன்னேற்றக் கழகம்
மண்ணாடிப்பட்டு பொது எஸ். எம். சுப்பராயன் திராவிட முன்னேற்றக் கழகம்
ஊசுடு ப.இ. வி. நாகரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
வில்லியனூர் பொது எஸ். ஆறுமுகம் திராவிட முன்னேற்றக் கழகம்
ஏம்பலம் ப.இ. எம். வீரம்மாள் இந்திய தேசிய காங்கிரசு
உழவர்கரை பொது எஸ். முத்து திராவிட முன்னேற்றக் கழகம்
கலாபேட்டை பொது பாரூக் மரைக்காயர் திராவிட முன்னேற்றக் கழகம்
ஏனம் பொது என். குருசாமி இந்தியப் பொதுவுடமைக் கட்சி
கோட்டுச்சேரி ப.இ. எம். பாலையா இந்திய தேசிய காங்கிரசு
காரைக்கால் வடக்கு பொது எம். ஜம்புலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு
காரைக்கால் தெற்கு பொது மேரி லூர்ட்சு சில்வாராட்ஜோ திராவிட முன்னேற்றக் கழகம்
நிரவி பொது எசு. ராமசாமி திராவிட முன்னேற்றக் கழகம்
கிராண்டி ஆல்டி பொது ஒய். பண்டரிநாதன் திராவிட முன்னேற்றக் கழகம்
திருநள்ளாறு பொது ஆர். சுப்ரயாலு நாயக்கர் திராவிட முன்னேற்றக் கழகம்
நெடுங்காடு பொது பி. சண்முகம் இந்திய தேசிய காங்கிரசு
மாகே பொது ஐ. கே. குமரன் சுயேச்சை
பள்ளூர் பொது வி. என். புருசோத்தமன் இந்திய தேசிய காங்கிரசு
யானம் பொது காமிசெட்டி பரசுராம் நாயுடு சுயேச்சை

மேலும் காண்க

தொகு
  • புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்
  • இந்தியாவில் 1969 தேர்தல்கள்
  1. "H. E. Shri M. O. H. Faarooq". Archived from the original on 5 January 2010.
  2. "Statistical Report on General Election, 1969 to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.