காருபேடியா
காருபேடியா (Kharupetia), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் வடக்கு அசாம் கோட்டத்தில் அமைந்த தர்ரங் மாவட்டத்தில் உள்ள மங்கல்தோய் வருவாய் வட்டத்தில் நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.
காருபேடியா | |
---|---|
நகரம் | |
அசாம் மாநிலத்தில் காருபேடியா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°31′N 92°08′E / 26.52°N 92.13°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
கோட்டம் | வடக்கு அசாம் கோட்டம் |
மாவட்டம் | தர்ரங் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | காருபேடியா நகராட்சி |
ஏற்றம் | 37 m (121 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,783 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 784115 |
வாகனப் பதிவு | AS13 |
இணையதளம் | darrang |
அமைவிடம்
தொகுகாருபேடியா நகரம், மாவட்டத் தலைமையிடமான மங்கல்தோய்க்கு வடகிழக்கே 15.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கவுகாத்திக்கு வடகிழக்கே 82 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 8 வார்டுகளும், 3,860 வீடுகளும் கொண்ட காருபேடியா நகரத்தின் மக்கள் தொகை 18,501 ஆகும். அதில் ஆண்கள் 9,764 மற்றும் பெண்கள் 8,737 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,293 மற்றும் 12 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.71%, இசுலாமியர் 17.57%, சமணர்கள் 3.58% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுஇதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம் 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரௌதா பாகன் இரயில் நிலையம் ஆகும்.[2]தேசிய நெடுஞ்சாலை எண் 15 கவுகாத்தியை காருபேடியா நகரத்துடன் இணைக்கிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://www.censusindia.co.in/towns/kharupatia-population-darrang-assam-801631 Kharupatia Population, Religion, Caste, Working Data Darrang, Assam - Census 2011]
- ↑ ROWTA BAGAN RWTB Railway Station Trains Schedule