காரு (லே மாவட்டம்)

காரு (Kharoo), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த லே மாவட்டத்திலுள்ள காரு வருவாய் வட்டம் மற்றும் காரு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட கிராமம் ஆகும். இது லடாக் மலைத்தொடரி 3500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பகுதி மக்கள் திபெத்திய பௌத்தம் பின்பற்றுகின்றனர்.

காரு
Kharoo
ஊர்
காருவில் இராணுவ முகாம்
காருவில் இராணுவ முகாம்
காரு is located in லடாக்
காரு
காரு
இந்தியாவில் லடாக்க்கில் காருவின் அமைவிடம்
காரு is located in இந்தியா
காரு
காரு
காரு (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°56′31″N 77°45′51″E / 33.9419°N 77.7643°E / 33.9419; 77.7643
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்காரு [1]
மொழிகள்
 • அலுவல் மொழிலடாக்கி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

இங்கு பாயும் சிந்து ஆற்றின் கரையில் இந்திய இராணுவ முகாம் உள்ளது. இது லே நகரத்திற்கு தென்கிழக்கில் 34 கிலோ மீட்டர் தொலைவில், லே-மணாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.[2][3][4][5][6]

இந்திய இரயில்வேயின் [[பனுப்பிலி-லே இருப்புப் பாதையில் அமைந்த காரு இந்திய இராணுவத்தின் தளவாடங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்கு மையமாக உள்ளது.[7]லே மாவட்டத்திற்கு கிழக்கே உள்ள நியோமா,பாங்காங் ஏரி போன்ற கேந்திரிய முக்கியத்துவமான இடங்களை காரு இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 42 குடியிருப்புகள் கொண்ட காரு கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 167 ஆகும். இலடாக்கிய மொழி பேசும் இங்குள்ள பழங்குடி மக்கள் அனைவரும் திபெத்திய பௌத்தம் பின்பற்றுகின்றனர்.சராசரி எழுத்தறிவு 66.45% ஆகும்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Villages | District Leh, Union Territory of Ladakh | India".
  2. Subdivisions and blocks of Leh, Leh dustrict website.
  3. Rashid, Hakeem Irfan. "Sombre Hemis fest in Ladakh amid covid, Chinese incursion". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sombre-hemis-fest-in-ladakh-amid-covid-chinese-incursion/articleshow/76746790.cms. பார்த்த நாள்: 20 August 2020. 
  4. Rashid, Hakeem Irfan. "Early signs of incursion by Chinese in August 2019: A local from Durbok". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/early-signs-of-incursion-by-chinese-in-august-2019-a-local-from-durbok/articleshow/76761784.cms. பார்த்த நாள்: 20 August 2020. 
  5. "China deploys troops all along 4,000-km LAC" (in en). Rediff. https://www.rediff.com/news/report/standoff-in-ladakh-china-deploys-troops-all-along-4000-km-lac/20200611.htm. பார்த்த நாள்: 20 August 2020. 
  6. "Chinese Army build-up from Ladakh to Arunachal, Indian Army increases troop deployment all along LAC" (in en). ANI News. https://www.aninews.in/news/national/general-news/chinese-army-build-up-from-ladakh-to-arunachal-indian-army-increases-troop-deployment-all-along-lac20200611151626/. பார்த்த நாள்: 20 August 2020. 
  7. "डीपीआर तैयार: सेना के लिए चीन सीमा तक अलग से बिछेगा 13 किलोमीटर रेल ट्रैक". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டெம்பர் 2022.
  8. Kharoo Population – Leh District
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரு_(லே_மாவட்டம்)&oldid=4042392" இலிருந்து மீள்விக்கப்பட்டது