கார்மோ மலை
கார்மோ மலை (தாஜிக் மொழி: Қуллаи Гармо, குல்லை கார்மோ, உருசிய மொழி: пик Гармо, பீக் கார்மோ)மத்திய ஆசியாவில் தஜிகிஸ்தானில் உள்ள பாமிர் மலைத் தொடரில் உள்ள ஒரு மலையாகும். இந்த மலையின் உயரமானது 6,595 மீட்டர்கள் முதல் 6,602 மீட்டர்கள் வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[2]
கார்மோ மலைச்சிகரம் | |
---|---|
The Pamirs | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,595 m (21,637 அடி) |
புடைப்பு | 1,265 m (4,150 அடி) |
ஆள்கூறு | 38°48′N 72°4′E / 38.800°N 72.067°E[1] |
புவியியல் | |
அமைவிடம் | தஜிகிஸ்தான், வடமேற்குகோர்னோ-படாக்சான் |
மூலத் தொடர் | பாமிர் மலைகள் |
கார்மோ மலையில் பனியாறு ஒன்று உள்ளது. இந்த மலையின் கிழக்காக பெட்செங்கோ பனியாறு (உலகில் துருவப் பகுதிகள் தவிர்த்த இடங்களில் உள்ள பனியாறுகளில் மிக நீளமானது) பாய்கிறது. இம்மலைப்பகுதிக்கு அருகாமையில் உள்ள குடியேற்றப் பகுதியானது, இந்த மலையிலிருந்து தெற்காக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. (38° 39' 10 N, 71° 58' 2 E), இந்த குடியேற்றப்பகுதியின் உயரமானது 2785 மீட்டர்களாகும்.
இந்த மலைச்சிகரத்தின் இருப்பிடம் மற்றும் உயரம் பற்றிய நிச்சயமற்ற தன்மையே இந்தப் பெயரைத் தாங்கி நிற்பதன் காரணமாக உள்ளது. தற்போதைய ஒருமித்த கருத்தின் படி 6,595 மீட்டர்களாக உள்ளது. 1973 ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்க அல்பைன் பருவ இதழ் இம்மலைச்சிகரத்தின் உயரத்தை 21,703 அடி(6,615 மீ) என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.[3]
வரலாறு
தொகுமுன்னதாக, சோவியத் ஒன்றியத்தில் கார்மோ அறிவியல் தொடரின் கல்விசார் அமைப்பின் பகுதியாக கார்மோ அமைந்துள்ளது.(உருசியம்: Хребет Академии Наук; தாஜிக் மொழி|க்வாடோரகுகி அகாதெமியாய் பான்கோ) இது இந்த இடத்தில் தார்வோஸ் மலைத் தொடருடன் இணைகிறது.
1928 ஆம் ஆண்டு உருசிய படையெடுப்பின் போது லெனின் சிகரத்தின் முதல் ஏற்றத்தை அடைந்தது. அந்த இடம் வரையிலான உயரத்தை அளக்கவும் செய்தனர். தற்போது அது அலுவல்ரீதியாகவே இசுமாயில் சோமோனி சிகரம் எனவும் அழைக்கப்பட்டது. இந்த சிகரமே முதலில் தவறுதலாக கார்மோ என அடையாளப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் இந்த இடமானது தற்போதைய கார்மோவிற்கு பதினாறு கிலோமீட்டர்கள் வடக்கு திசையில் அமைந்துள்ளது.
சூலை 1962 இல் இரண்டு பிரித்தானிய மலையேற்ற வீரர்கள் வில்பிரிட் நாய்ஸ் மற்றும் இளைஞரான இசுகாட்டிய மலையேற்ற வீரர் இராபின் சுமித் இருவரும் இசுமாயில் சோமோனியில் (கம்யூனிச சிகரம் என அப்போது அழைக்கப்பட்டது) சோவியத்-பிரித்தானிய சாதனைக்கு தயாராகி, 4000 அடி (1200 மீட்டர்) உயர சிகரத்தை அடைந்த பிறகு இறந்து போயினர்.[4][5]
நாய்ஸ் மற்றும் சுமித் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு உருசியர்களுக்கும், பிரித்தானியர்களுக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டன. சர் ஜான் அன்ட், படையெடுப்பின் இணைத் தலைவர், பிரிட்டனுக்குத் திரும்பினார். 1964 ஆம் ஆண்டில், பிரித்தானிய பத்திரிக்கைகள் கார்மோவை "21,800-அடி கார்மோ சிகரம்"எனக் குறிப்பிட்டிருந்தது.[6]
பெயர் குழப்பம்
தொகு1920கள் மற்றும் 1930களிலிருந்து, இம்மலையானது மற்றுமொரு உயர்ந்த சிகரமான இசுமாயில் சோமோனியுடன் இணைத்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது சல ஆண்டுகளுக்கு ஸ்டாலின் சிகரம் என்றோ அல்லது இன்னும் சிறப்பாக கம்யூனிச சிகரம் என்றோ அழைக்கப்பட்டது. பிபிசி நடத்திய இணைய வழி வினாடி வினாப் போட்டி ஒன்றில் ”தஜிகிஸ்தானில் காணப்படும் கார்மோ சிகரம் சோவியத் ஒன்றியத்தின் மிக உயர்ந்த சிகரமாக இருந்த போது எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது?” என்ற வினாவிற்கான பதிலாக கம்யூனிச சிகரம் என்ற பதிலைத் தந்தது.[7]
1937 ஆம் ஆண்டு ஸ்டாலின் சிகரத்தின் ஏற்றத்தின் போது மைக்கேல் ரோம்ன் மற்றும் அலெக் பிரௌன் ஆகியோர் "தார்வாஸ் என்பது கார்மோ சிகரம் என்றும் கார்மோவானது ஸ்டாலின் சிகரம் என்றும் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது” என்று கூறினர். இதற்கான காரணங்கள் திருப்திப்படுத்தும் விதத்தில் இல்லை.[8] பிரித்தானிய ஆட்சி அலுவலக உபயோகத்திற்காக புவியியல் பெயர்களைப் பரிந்துரைக்கும் நிலைக்குழுவின் ஆய்வறிக்கையானது தஜிகிஸ்தான், பாமீர் மலைத்தொடரின் உயரமான நீடித்த தன்மையை (நவம்பர் 2001) பின்வருமாறு கூறுகிறது:
இறுதியான ஆர்வமூட்டக்கூடிய கருத்தானது தஜிகிஸ்தானின் உயரமான மலைச் சிகரத்தைப் பற்றியது; உண்மையில், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் முழுமைக்குமான உயரமான மலைப்பகுதியாகும். இந்த சிகரமானது(3857N 7201E) 7495 மீட்டர் உயரத்தை உடையதாகும். 1933, வரையிலும் இது கார்மோ சிகரம் எனப்பட்டது. ஒரு நாளில் இந்தப் பெயர் தெற்கிலிருந்த மற்றொரு உயரம் குறைந்த சிகரத்திற்கு (3848N 7204E) மாற்றி வைக்கப்பட்டது. அந்தப் பெயர் இன்னும் நிலைத்திருக்கிறது. உயரமான சிகரத்திற்கான புதிய பெயரானது ஸ்டாலின் சிகரம் என 1962 ஆம் ஆண்டு வரையிலும் நிலைத்திருந்தது. அதன் பிறகு ஸ்டாலின் சிகரமானது கம்யூனிசத்தின் சிகரம் என்றழைக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டில், பல விதமான மூலங்கள் கார்மோவை பாமீர் மலைத்தொடரின் உயரமான மலைச்சிகரமாக அடையாளப்படுத்தின அல்லது இதன் உயரத்தை 7000 மீட்டர்கள் எனத் தந்தன.[10][11][12][13][14][15][16]
புகழ் பெற்ற கலாச்சாரம்
தொகுகார்மோ மலைச்சிகரமானது டெக்சாஸ் கருவிகள் TI-99/4A தனிநபர் கணினி விளையாட்டில் குறிப்பிடப்படும் ஆறு மலைச்சிகரங்களில் ஒன்றாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Pik Garmo, Tajikistan at peakbagger.com, accessed 6 August 2008
- ↑ (Russian) Памир at wiki.risk.ru, accessed 5 August 2008
- ↑ American Alpine Journal for 1973, page 505 online at books.google.co.uk, accessed 6 August 2008
- ↑ Pik Kommunizma, at summitpost.org, accessed 5 August 2008
- ↑ Brown, Joe (1975). The Hard Years. Harmondsworth, Middlesex, England: Penguin Books. pp. 200–211.
- ↑ Cantwell, Robert A Mountaineer Records a British-Russian Adventure on a Dangerous Pamir Peak பரணிடப்பட்டது 2012-07-17 at Archive.today dated 9 November 1964 at cnn.com, accessed 5 August 2008
- ↑ People's Quiz at bbc.co.uk, accessed 5 August 2008
- ↑ "K. M.", untitled Review of The Ascent of Mount Stalin by Michael Romm, Alec Brown, in The Geographical Journal, Vol. 89, No. 3 (March 1937), pp. 273-274
- ↑ Tajikistan, the Lofty Fastness of the Pamirs dated 5 November 2001, online at pcgn.org.uk, accessed 6 August 2008
- ↑ Attractions and Things to See and Do பரணிடப்பட்டது 2018-01-07 at the வந்தவழி இயந்திரம் at hospitalityclub.org: "Pik Lenina and Mount Garmo (formerly Pik Kommunizma) are to the northwest and west respectively of Lake Kara-Kul."
- ↑ Tourism in Tajikistan பரணிடப்பட்டது 2009-09-10 at the வந்தவழி இயந்திரம் at tajikembassy.pk (web site of the Embassy of Tajikistan in Pakistan): "Peak Somoni and Mount Garmo are to the northwest and west respectively of Lake Kara-Kul. At well over 7000m these two peaks tower over Tajikistan and the neighbouring Republic of Kyrgyzstan to the north."
- ↑ Mount Garmo பரணிடப்பட்டது 2012-02-16 at the வந்தவழி இயந்திரம் at glossary.com:"The noun mount garmo has 1 sense: Communism Peak, Mount Communism, Stalin Peak, Mount Garmo -- (the highest mountain peak in the Pamir mountains)"
- ↑ Garmo Peak at encyclopedia.com: "Garmo Peak see Ismoili Somoni Peak."
- ↑ Kommunizma Pik at encyclopedia.com: "Kommunizma Pik (Communism Peak) Mountain in central Asia, in SE Tajikistan, in the Pamirs region. Known as Mount Garmo until 1933 and Stalin Peak until 1962, it was the highest peak in the former Soviet Union. Height: 7495m (24,590ft)."
- ↑ The Columbia Encyclopedia, sixth edition: "...the highest point in Tajikistan. Originally called Garmo Peak, it was determined (1932-33) the highest peak in the USSR and was renamed Stalin Peak."
- ↑ TAJIKISTAN COUNTRY SNAPSHOT AND INTERESTING FACTS at travel-island.com: "...the sparsely populated Pamir Mountains, which include Mount Garmo (formerly Pik Kommunizma; 7495m/24,590ft), the highest point of the former Soviet Union."