கார நீரிலி
கார நீரிலிகள் ( Base anhydrides) என்பவை முதல் மற்றும் இரண்டாம் நெடுங்குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் ஆக்சைடுகள் ஆகும். முதல் நெடுங் குழுவில் உள்ள தனிமங்கள் கார உலோகங்கள் என்றும் இரண்டாவது நெடுங்குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் காரமண் உலோகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தொடர்புடைய ஐதராக்சைடு உப்பிலிருந்து நீர் மூலக்கூறை நீக்குவதன் மூலம் கார நீரிலிகளைத் தயாரிக்கலாம். கார நீரிலியுடன் தண்ணீர் சேர்க்கப்படுமேயானால் அதனோடு தொடர்புடைய கார ஐதராக்சைடு உருவாகிறது. ஒரு காரநீரிலியானது அர்ரீனியசு காரமாகவும் செயல்படுவது இல்லை பிரான்சிடெட் லவ்ரி காரமாகவும் செயல்படவில்லை. ஏனெனில் இது புரோட்டான்களை ஏற்றுக் கொள்வதில்லை தண்ணீரில் ஐதராக்சைடு அயனியின் அடர்த்தியை அதிகரிப்பதும் இல்லை. ஆனால் இவை இலூவிக் காரமாகச் செயல்படுகின்றன. ஏனெனில் இது இலூயிக் அமிலங்களுடன், குறிப்பாக அமில ஆக்சைடுகளுடன் [1] எலக்ட்ரான் இரட்டைகளை பகிர்ந்து கொள்கிறது.
உதாரணங்கள்
தொகு- கால்சியம் ஆக்சைடு, கால்சியம் ஐதராக்சைடு சேர்மத்தின் நீரிலியாகும்
- பேரியம் ஆக்சைடு , பேரியம் ஐதராக்சைடு சேர்மத்தின் நீரிலியாகும்
- சோடியம் ஆக்சைடு, சோடியம் ஐதராக்சைடு சேர்மத்தின் நீரிலியாகும்
- பொட்டாசியம் ஆக்சைடு, பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்மத்தின் நீரிலியாகும்
- இசுட்ரோன்சியம் ஆக்சைடு, இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு சேர்மத்தின் நீரிலியாகும்
- இலித்தியம் ஆக்சைடு, இலித்தியம் ஐதராக்சைடு சேர்மத்தின் நீரிலியாகும்
- சீசியம் ஆக்சைடு, சீசியம் ஐதராக்சைடு சேர்மத்தின் நீரிலியாகும்
- ருபீடியம் ஆக்சைடு, ருபீடியம் ஐதராக்சைடு சேர்மத்தின் நீரிலியாகும்
மேற்கோள்கள்
தொகு- ↑ Principles of Modern Chemistry, 7th Edition. David Oxtoby, H. P. Gillis, Alan Campion. Published by Cengage Learning. Page 675-676. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0840049315