இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு

இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு (Strontium hydroxide) என்பது Sr(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு இசுட்ரோன்சியம் அயனியும் இரண்டு ஐதராக்சைடு அயனிகளும் சேர்ந்து இத்தீவிர காரம் உருவாகிறது. இதற்காக ஒரு இசெஉட்ரோன்சியம் உப்புடன் வலிமையான ஒரு காரம் சேர்க்கப்படுகிறது. நீரிலி நிலை, ஒற்றை நீரேற்று மற்றும் எந்நீரேற்று முதலிய வடிவங்களில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு காணப்படுகிறது.

இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
18480-07-4 Y
1311-10-0 (எந்நீரேற்று) N
ChEBI CHEBI:35105 Y
ChemSpider 79094 Y
EC number 242-367-1
Gmelin Reference
847042
InChI
  • InChI=1S/2H2O.Sr/h2*1H2;/q;;+2/p-2 Y
    Key: UUCCCPNEFXQJEL-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2H2O.Sr/h2*1H2;/q;;+2/p-2
    Key: UUCCCPNEFXQJEL-NUQVWONBAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 87672
  • [Sr+2].[OH-].[OH-]
பண்புகள்
Sr(OH)2
வாய்ப்பாட்டு எடை 121.63 கி/மோல் (நீரிலி)
139.65 கிராம்/மோல் (ஒற்றை நீரேற்று)
265.76 கி/மோல் (எந்நீரேற்று)
தோற்றம் பட்டகம் போன்ற நிறமற்ற படிகங்கள்
நீருறிஞ்சி
அடர்த்தி 3.625 கி/செ.மீ3 (நீரிலி)
1.90 கிராம்/செ.மீ3 (எந்நீரேற்று)
உருகுநிலை 535 °C (995 °F; 808 K) (நீரிலி நிலை, எந்நீரேற்றுக்கு 375 கெல்வின்)
கொதிநிலை 710 °C (1,310 °F; 983 K) சிதைவடையும் (நீரிலி)
0.41 கிராம்/100 மி.லி (0 °செல்சியசில்)
1.77 கிராம்/100 மி.லி (40 °செல்சியசில்)
21.83 கிராம்/100 மி.லி (100 °செல்சியசில்) [1]
கரைதிறன் அசிட்டோனில் கரையாது.
அமிலம், அமோனியம் குளோரைடில் கரையும்.
காரத்தன்மை எண் (pKb) 0.3 (முதல் OH), 0.83 (இர்ண்டாவது OH)[2]
−40.0•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம் (எந்நீரேற்று)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இசுட்ரோன்சியம் ஆக்சைடு
இசுட்ரோன்சியம் பெராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் ஐதராக்சைடு
மக்னீசியம் ஐதராக்சைடு
கால்சியம் ஐதராக்சைடு
பேரியம் ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

குளிர் நீரில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு கரையுமென்பதால் NaOH அல்லது KOH போன்ற ஒரு வலிமையான காரத்தை கரையக்கூடிய ஏதாவதொரு இசுட்ரோன்சியம் உப்புக் கரைசலுடன் சொட்டு சொட்டாக சேர்ப்பதன் மூலம் எளிதாக இதைத் தயாரிக்க முடியும். பெரும்பாலும் இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு ((Sr(NO3)2 ) உப்பு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மையான நுண் தூளாக இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு வீழ்படிவாகிறது. கரைசலை வடிகட்டி குளிர் நீரில் கரைத்து பின்னர் உலர்த்தி இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது.[3]

பயன்பாடுகள்

தொகு

இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு, முக்கியமாக கிழங்குவகை சர்க்கரை சுத்திகரிப்பிலும் நெகிழிகளில் ஒரு நிலைப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இசுட்ரோன்சியம் குளோரைடுஇசுட்ரோன்சியம் குளோரைடிலிருந்து குளோரின் தயாரிக்கையில் இசுட்ரோன்சியம் அயனிகளின் ஆதார மூலமாக இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு பயன்படுகிறது. காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை ஈர்த்து இசுட்ரோன்சியம் கார்பனேட்டாகவும் இது உருவாகிறது.

பாதுகாப்பு

தொகு

விழுங்க நேர்ந்தால் மிகவும் கொடிய தீங்குகளை இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு விளைவிக்கும். கண், தோல், சுவாச உறுப்புகளில் எரிச்சலை உண்டாக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  2. "Sortierte Liste: pKb-Werte, nach Ordnungszahl sortiert. - Das Periodensystem online" (in ஜெர்மன்).
  3. Brauer, Georg (1963). Handbook Of Preparative Inorganic Chemistry. Academic Press. p. 935.

புற இணைப்புகள்

தொகு