காலாக்னி ருத்ர உபநிடதம்

இந்து சமய சைவ உரை

காலாக்னி ருத்ர உபநிடதம் (Kalagni Rudra Upanishad) (சமக்கிருதம்: कालाग्निरुद्र - उपनिषत् ), சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றான இது கிருஷ்ண யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] மேலும் 14 சைவ உபநிடதங்களில் ஒன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.[1]

காலாக்னி ருத்ரம்
நெற்றியில் திருநீறு அணிவதை விவரிக்கிறது
தேவநாகரிकालाग्निरुद्र
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புகாலாக்னி ருத்ரம்
உபநிடத வகைசைவம்[1]
தொடர்பான வேதம்யசுர் வேதம்[1]
அத்தியாயங்கள்2

புனித சாம்பலை நெற்றியில் நீறாக அணியும் சைவ சமயத்தைச் சேர்ந்த சனகாதி முனிவர்களுக்கு உருத்ரனால் ( சிவன் ) இந்த உபநிடதம் உரைக்கப்பட்டது. "மூன்று சாம்பல் கோடுகளின்" உருவக முக்கியத்துவத்தை " பாரம்பரியம் அவற்றை மூன்று வேத நெருப்புகளின் கோடுகளாகவும், மூன்று எழுத்துகள் அடங்கிய ஓம் என்ற பிரணவ மந்திரமாகவும், முக்குணங்கள், மூன்று உலகங்கள், மூன்று ஆன்மாக்கள், மூன்று வேதங்கள் மற்றும் சிவனின் மூன்று அம்சங்களாகவும் பார்க்கிறது என்று ஜெர்மானிய இந்தியவியலாளர் பால் டியூசன் கூறுகிறார்.[3] இந்த உரை திருநீற்றைப் போற்றுகிறது. மேலும், தொடர்புடைய மந்திரங்கள் மற்றும் சடங்குகளுடன் உடலின் பல்வேறு பகுதிகளில் திருநீற்றைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையைப் பற்றி கூறுகிறது.

இந்து சமயம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அறிஞர் கிளாஸ் குளோஸ்டர்மேயர் இந்த உபநிடதத்தை பஸ்மஜபால உபநிடதம், உருத்ராக்சஜபால உபநிடதம், பிருகஜபால உபநிடதம் மற்றும் அக்சமாலிகா உபநிடதம் போன்ற சைவ உபநிடதங்களுடன் வகைப்படுத்துகிறார்.[4]

பெயர்க் காரணம்

தொகு

காலாக்னி, அல்லது காலா-அக்னி என்றால் "நேரமாகிய நெருப்பு" என்று பொருள்.[5] உருத்திரன் என்பது உலகத்தையும் காலத்தையும் பிரதானமாக நகர்த்துபவர் மற்றும் அழிப்பவர் எனப் பொருள்.[5]காலாக்னி-ருத்ர உபநிடதம் கொள்கைகளையும் நேரத்தையும் அதன் இடைவிடாத தெய்வீக வெளிப்பாடாகக் குறிக்கிறது. "இறுதியில் அனைத்து பிரபஞ்சமும் ஒன்றாக கூடுகிறது" என கிரம்ரிஷ் கூறுகிறார்.[5] காலாக்னி-ருத்ரம் என்பது சிவனின் அடைமொழியாகும். இது நெருப்பிலிருந்து அனைத்தையும் - தேவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்கள் - உருவாக்கி, பின்னர் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிய பைரவருடன் தொடர்புடையது. [6]

மற்ற சைவ உபநிடதங்களைப் போலவே, சிவபெருமானின் இந்து சமய கருத்தான இறுதி உண்மையான பிரம்மமத்தை ஒத்ததாக அடையாளப்படுத்தப்படுவதை முன்னிறுத்துகிறது. [7] இது உபநிடதத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இது சுவேதாசுவதர உபநிடதத்தில் தொடங்கி, வேதாந்தத்தின் கோட்பாட்டையும், இரட்சிப்பின் வழிமுறையாக யோகப் பயிற்சியையும் ஒன்றாகக் கற்பிக்கிறது. [7] சிவன் ஆன்மவாக உள்ளே இருக்கிறார். இந்த சிவனை உணர்ந்துகொள்வது எல்லையற்ற அமைதிக்கான வழிமுறையாகும். மேலும் "நெருப்பு, சாம்பல் மற்றும் எஞ்சியவற்றை" உற்பத்தி செய்யும் சடங்கு, பின்னர் நெற்றியில் சாம்பலைப் பூசிக்கொள்வது ஆன்மீக சாரத்தின் நிலையான நினைவூட்டலாகும்.{Sfn|Kramrisch|1981|pp=275-277, 281-286}}

நெற்றியில் உள்ள சாம்பல் கோடுகள் திரிபுந்திரம் அல்லது திலகம் அல்லது புந்த்ரம் என்று அழைக்கப்படுகிறது.[3]

உள்ளடக்கம்

தொகு
 
திருநீறணிந்த ஒரு நடனக் கலைஞர்

ஒரு பாரம்பரிய அழைப்பிற்குப் பிறகு, சனத்குமார முனிவர் காலாக்னி உருத்திரனிடம் திருநீற்றின் பயன்பாட்டை விளக்குமாறும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் விவரக்குறிப்புகள், அதை தயாரிப்பதற்கான செயல்முறை குறித்தும், அதை வாங்க வேண்டிய இடம் மற்றும் அதன் நன்மைகள் பற்றியும் தனக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறார். [3][8][9]

அத்தியாயம் 2ல் உள்ள மூன்று வரிகளை பல்வேறு மும்மூர்த்திகளாக விளக்குகிறது: புனித நெருப்புகள், ஓம், குணங்கள், உலகங்கள், ஆன்மாவின் வகைகள், சக்திகள், வேதங்கள், வேத பானமான சோம பாணத்தை பிரித்தெடுக்கும் நேரம் மற்றும் மகேஸ்வரனைக் குறிக்கிறது.[10][11]

காலாக்னி ருத்ர உபநிடதம், மனித வாழ்வின் பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சந்நியாசம் போன்ற நான்கு நிலைகளில் ஏதேனும் ஒரு நபரால் நீறணிவதால் ஏற்படும் நன்மைகளைப் போற்றுகிறது. [12] திருநீறணிவதால் அனைத்து பாவங்களிலிருந்தும் ஒருவனை விடுவிக்கப்படுகிறான். இதை பூசுவதன் மூலம், ஒருவர் அனைத்து புண்ணிய ஆறுகளிலும் குளித்தர்களுக்கும், ஸ்ரீருத்ர துதியை ஓதுவதில் முழு நேரத்தையும் செலவிடுபவருக்கும் சமமாகிறார் . [12] மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்த பிறகு, அவர் இறந்த பிறகு சிவனுடன் ஒன்றாகிவிடுகிறார். மறுபிறப்பை எடுப்பதில்லை. [8][9]

மேலும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Tinoco 1997, ப. 87-88.
  2. Farquhar, John Nicol (1920), An outline of the religious literature of India, Oxford university press, p. 364, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-2086-X
  3. 3.0 3.1 3.2 Deussen 1997, ப. 789–790.
  4. Klostermaier 1984, ப. 134, 371.
  5. 5.0 5.1 5.2 Kramrisch 1981, ப. 274-275.
  6. Kramrisch 1981.
  7. 7.0 7.1 Klostermaier 1984.
  8. 8.0 8.1 Deussen 1997, ப. 789-790.
  9. 9.0 9.1 Mahadevan 1975, ப. 226.
  10. Deussen 1997, ப. 790.
  11. Nene 1999.
  12. 12.0 12.1 Deussen 1997.

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=காலாக்னி_ருத்ர_உபநிடதம்&oldid=3747089" இலிருந்து மீள்விக்கப்பட்டது