மகாநாராயண உபநிடதம்

வைண இந்து சமய நூல்

மகாநாராயண உபநிடதம் ( Mahanarayana Upanishad) ( சமக்கிருதம்: महानारायण उपनिषद् ) ஒரு பழங்கால சமஸ்கிருத நூலான இது இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இந்நூல் வைணவ உபநிடதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [3][2]

மகாநாராயண உபநிடதம்
தேவநாகரிमहानारायणोपनिषत्
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புMahānārāyaṇa
உபநிடத வகைVaishnava[1]
தொடர்பான வேதம்யசுர் வேதம்[2] அல்லது அதர்வண வேதம்[3]
அத்தியாயங்கள்பல பகுதிகள்
பாடல்களின் எண்ணிக்கைபல கைஎழுத்துப் பிரதிகள்
அடிப்படைத் தத்துவம்வைணவ சமயம்

உரை மூன்று முக்கிய பதிப்புகளில் கிடைக்கப் பெற்றுள்ளது. [4] 64 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பதிப்பு கிருஷ்ண யசுர் வேதத்துடன் பல தென்னிந்திய நூல்களில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்குப் பதிப்பில் உள்ள அதே வாசகம் விரிவாக்கப்பட்ட வடிவத்தில் 80 அத்தியாயங்களுடன் அதே வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] இரண்டாவது பதிப்பு அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [3] 25 அத்தியாயங்களைக் கொண்டுள்ள இது திரிபத்விபூதியுடன் முன்னொட்டாக உள்ளது. [5] இந்த கையெழுத்துப் பிரதிகள் சில சமயங்களில் யாக்னிகி உபநிடதம் அல்லது திரிபத்-விபூதி-மகாநாராயண உபநிடதம் என்றும் பெயரிடப்படுகின்றன.[6][3] சுவாமி விமலானந்தாவின் கூற்றுப்படி, யக்ஞாத்மா என்ற முனிவர் நாராயணனைப் போற்றும் வகையில் இருப்பதால் இது யாக்னிகி உபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது. [7]

உபநிடதத்தின் தலைப்பு "பெரிய நாராயணன்" என்று பொருள்படுவதாக இருந்தபோதிலும், [8] நாராயணன் மற்றும் உருத்திரன் இருவரையும் பெருமைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.[4] உபநிடதம் வேதாந்தக் கலைச்சொற்களைப் பயன்படுத்துகிறது. [9] மேலும் இருக்கு வேதம், தைத்திரீய பிராமணம், வாஜஸனேயி சம்ஹிதை மற்றும் முதன்மை உபநிடதங்களிலிருந்து ஏராளமான கருத்துகளைப் பயன்படுத்துகிறது. [9]

சந்தியாவந்தனம் செய்யும் போது , பிராணாயாமம், மந்திராசமனம், காயத்ரி ஆவாகனம், தேவதாநமஸ்காரம் மற்றும் காயத்ரி பிரஸ்தானம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மந்திரங்கள் நேரடியாக மகாநாராயண உபநிடதத்திலிருந்து (80 அனுவாக்களைக் கொண்ட ஆந்திர மறுமலர்ச்சி) கிடைக்கபெற்றது. [10]

உள்ளடக்கம்

தொகு

"எல்லையற்ற அண்ட நீரில்" ஒளியாகவும், பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த பிரம்மம் என்ற கொள்கையை விவரிக்கும் ஒரு வசனத்துடன், அண்டவியலுடன் உரை ஆரம்பிக்கிறது.[4][11] இந்த உரை இயற்றப்பட்ட நேரத்தில் பிரம்மனின் மனோதத்துவக் கொள்கை நன்கு நிறுவப்பட்டதாக அதன் தொடக்க வசனங்களின் பாணி தெரிவிக்கிறது.[4] அசையும் மற்றும் அசைவற்ற அனைத்து உயிரினங்களிலும் பிரம்மமும் ஓமில் என்ற பிரவண மந்திரமும் உள்ளது.[12] இது உயர்ந்ததில் உயர்ந்தது, பெரியவற்றில் பெரியது, [13] இது சட்டம், இது உண்மை, இது பிராமணம் எனவும் கூறுகிறது. [14] உரை இந்த மனோதத்துவக் கொள்கையை நெருப்பு, வாயு, சூரியன் , சந்திரன், பிரஜாபதி, புருசன், உருத்திரன் மற்றும் நாராயணன் என்று அழைக்கிறது. அவர்கள் அனைவரும் பிரம்மத்தைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூருகிறாது.[12] [15]{{Sfn|Srinivasan|1997|p=115} கடவுள்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்ததாக வசனம் 10.19 கூறுகிறது. [16]

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Deussen 1997, ப. 247.
  2. 2.0 2.1 2.2 Deussen 1997, ப. 247–248.
  3. 3.0 3.1 3.2 3.3 Tinoco 1996, ப. 88.
  4. 4.0 4.1 4.2 4.3 Srinivasan 1997, ப. 112.
  5. Deussen, p.248. Also, Bloomfield Concordance, Preface. Both cite Jacob 1888.
  6. Deussen 1997, ப. 219, 247–248.
  7. Vimalananda 1957, ப. ix.
  8. Mahanaraya, Sanskrit-English Dictionary, Koeln University, Germany (2012)
  9. 9.0 9.1 Deussen 1997, ப. 247-268.
  10. "Mahanarayana_Upanishad" (PDF). Swami Vimalananda (2 ed.). Sri Ramakrishna Math. 1968.
  11. Deussen 1997, ப. 249.
  12. 12.0 12.1 Deussen 1997, ப. 249–250.
  13. Srinivasan 1997, ப. 114.
  14. Deussen 1997.
  15. Deussen 1997, ப. 250–251.
  16. Deussen 1997, ப. 256.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநாராயண_உபநிடதம்&oldid=4071907" இலிருந்து மீள்விக்கப்பட்டது