மகா உபநிடதம்
மகா உபநிடதம் ( சமக்கிருதம்: महा उपनिषद् , Maha Upanishad) என்பது ஒரு சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும்.[4][5] இந்த உரை சாமான்ய உபநிடதம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மகா உபநிடதம் | |
---|---|
உரை நாராயணனைப் பற்றி விவாதிக்கிறது | |
தேவநாகரி | महा |
உபநிடத வகை | வைணவம்[1] |
தொடர்பான வேதம் | சாம வேதம்[2] |
அத்தியாயங்கள் | 6 |
பாடல்களின் எண்ணிக்கை | 549[3] |
அடிப்படைத் தத்துவம் | வைணவ சமயம் |
உரை இரண்டு பதிப்புகளில் உள்ளது. ஒன்று சில தொகுப்புகளில் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[6] மற்றொன்று சாம வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[5] அதர்வண வேதப் பதிப்பு குறுகியதாகவும், உரைநடையிலும் உள்ளது.[7][8] சாம வேத பதிப்பு ஓரளவு கவிதை வசனங்களில் உள்ளது. [9]
வைணவ உபநிடதம் விஷ்ணுவை மிக உயர்ந்தவராகவும், பிரம்மாவிற்கும் மேலானவராகவும் விவரிக்கிறது.[1] [10] இருப்பினும், இரண்டு குழுக்களும் நூல்கள் அனைத்து இந்து கடவுள்களின் மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. மேலும் அவை ஒரே ஆன்மா - பிரம்மம் என்று வலியுறுத்துகின்றன.[10] உபநிடதம் வைணவ மற்றும் வேதாந்தக் கருத்துகளின் ஒத்திசைவை முன்வைக்கிறது. மேலும் "வசுதைவ குடும்பகம் " அல்லது "உலகம் ஒரே குடும்பம்" என்ற போதனைக்காக குறிப்பிடத்தக்கது.[11]
வரலாறு
தொகுமகா உபநிடதத்தின் தேதி அல்லது ஆசிரியர் பற்றி தெரியவில்லை, ஆனால் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட வைணவ உபநிடதங்களில் இது மிகவும் பழமையானது என்று ஜெர்மன் இந்தியவியலாளர் டியூசன் கருதுகிறார்.[12]
இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகளும் மகோபநிஷத் என்ற தலைப்பில் காணப்படுகின்றன.[9][13] அனுமனுக்கு இராமனால் விவரிக்கப்பட்ட முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 61 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[14] சுல்தான் முகமது தாரா சிக்கோவால் 1656 இல் ஓபனேகாத் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட உபநிடதங்களின் தொகுப்பில் 50 உபநிடதங்களின் பாரசீக மொழிப்பெயர்ப்புடன், மதம் பற்றிய சிறந்த புத்தகமாக முன்மொழியப்பட்ட இது 16வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[15] வட இந்தியப் பதிப்பான. கோல்புரூக்கின் 52 உபநிடதப் பதிப்பில் இந்த உபநிடதம் 9 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. [16] நாராயணனின் பிப்லியோதிகா இண்டிகா பதிப்பில், தென்னிந்தியாவில் பிரபலமான 52 உபநிடதங்களின் பட்டியலில் உபநிடதம் 9 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[17]
உள்ளடக்கம்
தொகுஉபநிடதம் விஷ்ணுவை சாங்கியக் கொள்கைகளுக்கு மேல், சிவனுக்கும், பிரம்மனுக்கும் மேலான மனிதனாக முன்வைக்கிறது.[1] இந்த உபநிடத உரை சைவ உபநிடதங்களான அதர்வசிகா உபநிடதம், அதர்வசிரசு உபநிடதம் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. மேலும் விஷ்ணு மற்றும் பிரம்மாவை விட சிவனே உயர்ந்தவர் என்று வலியுறுத்துகிறது.[18] எவ்வாறாயினும், இரு குழுக்களும், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் (அல்லது மகேசுவரன், உருத்திரன்) ஆகிய மூன்றையும் விவரிப்பதில் மிகுந்த மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றது. மேலும் அவற்றை ஒரே உலகளாவிய ஆன்மா - பிரம்மம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக அடையாளப்படுத்துகின்றது.[10]
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Deussen 1997, ப. 799.
- ↑ Tinoco 1996, ப. 89.
- ↑ AG Krishna Warrier (1953), Maha Upanishad, Theosophical Society, Madras, Online[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Deussen 1997, ப. 557, 561–567.
- ↑ 5.0 5.1 Tinoco 1996, ப. 87–89.
- ↑ Deussen 1997, ப. 566–567.
- ↑ Deussen 1997, ப. 799–801.
- ↑ Max Muller, Alphabetisches Verzeichniss der Upanishads கூகுள் புத்தகங்களில், Zeitschrift der Deutschen Morgenländischen Gesellschaft: ZDMG, Volume 19, page 151
- ↑ 9.0 9.1 Hattangadi 2000.
- ↑ 10.0 10.1 10.2 Deussen 1997, ப. 779–782, 799–801.
- ↑ BP Singh and Dalai Lama XIV Bstan-ʼdzin-rgya-mtsho (2008), Bahudhā and the Post 9/11 World, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195693553, page 51
- ↑ Deussen 1997, ப. 799 with footnotes.
- ↑ Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA498, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, pages 291, 498–499
- ↑ Deussen 1997, ப. 556–557.
- ↑ Deussen 1997, ப. 558–59.
- ↑ Deussen 1997, ப. 561.
- ↑ Deussen 1997, ப. 564–65.
- ↑ Deussen 1997, ப. 779, 799.
உசாத்துணை
தொகு- Badlani, Hiro G. (September 2008). Hinduism: Path of the Ancient Wisdom. iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-70183-4.
- Deussen, Paul (1 January 1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Deussen, Paul (2010). The Philosophy of the Upanishads. Oxford University Press (Reprinted by Cosimo). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61640-239-6.
- Hattangadi, Sunder (2000). "महोपनिषत् (Maha Upanishad)" (PDF) (in சமஸ்கிருதம்). பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
- Sheridan, Daniel (1986). The Advaitic Theism of the Bhāgavata Purāṇa. Columbia: South Asia Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0179-2.
- Tan, Chung (1 January 2015). Himalaya Calling. World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-938134-60-9.
- Tinoco, Carlos Alberto (1996). Upanishads. IBRASA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-85-348-0040-2.