பஸ்மஜபால உபநிடதம்
பஸ்மஜபால உபநிடதம் (Bhasmajabala Upanishad) ( சமக்கிருதம்: भस्मजाबाल उपनिषत् ) சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட இந்து சமயத்தின் சிறிய சைவ உபநிடதங்களில் ஒன்றாகும்.[1] இது அதர்வண வேதத்துடன் தொடர்புடையது.[1][2]
Bhasmajabala | |
---|---|
A Shaiva sadhu in Varanasi with the Tripundra (three lines of ash) on the forehead and wearing Rudraksha necklaces. | |
தேவநாகரி | भस्मजाबाल |
உபநிடத வகை | Shaiva[1] |
தொடர்பான வேதம் | அதர்வண வேதம் |
அத்தியாயங்கள் | 2 |
பாடல்களின் எண்ணிக்கை | 69 |
பிருகஜபால உபநிடதம் மற்றும் அக்சமாலிகா உபநிடதம் போன்றவைகளைப் போலவே இதுவும் விபூதி (பஸ்மம்-புனித சாம்பல்) , உருத்ராட்ச மணிகளை அடையாளங்களாகவும் உடல் கலைக்காகவும் விவரிக்கிறது. சாம்பல் மற்றும் மணிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும், உடலில் அதன் பயன்பாடு ஆகியவற்றை உரை விவரிக்கிறது. புனித நகரமான வாரணாசி மற்றும் அங்குள்ள் காசி விசுவநாதர் கோயிலின் முக்கியத்துவம் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமயம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அறிஞர் கிளாஸ் குளோஸ்டர்மேயர் இந்த உபநிடதத்தை உருத்ராக்சஜபால உபநிடதம், பிருகஜபால உபநிடதம் மற்றும் அக்சமாலிகா உபநிடதம், காலாக்னி ருத்ர உபநிடதம் போன்ற சைவ உபநிடதங்களுடன் ஆகியவற்றுடன் சைவ மதத்தில் உள்ள சடங்குகள் மற்றும் வழிபாட்டு பொருள்களின் அடையாளத்தை விளக்கும் சைவ நூல்களாக வகைப்படுத்துகிறார்.[3]
வரலாறு
தொகுஇந்த உரையை உருவாக்கிய தேதி மற்றும் ஆசிரியர் பற்றி தெரியவில்லை. பெரும்பாலான குறுங்குழுவாத உபநிடதங்களைப் போலவே, இந்த உரை இடைக்காலத்தின் பிற்பகுதியில், 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய கால உபநிடதமாக இருக்கலாம். மேலும் இது முகலாய இளவரசன் தாரா சிக்கோவால் வெளியிடப்பட்ட 50 முக்கியமான இந்து உபநிடதங்களின் 17 ஆம் நூற்றாண்டின் தொகுப்பின் ஒரு பகுதியாகவோ அல்லது 18 ஆம் நூற்றாண்டின் தொகுப்பின் ஒரு பகுதியாகவோ இல்லை. வட இந்தியாவில் 52 பிரபலமான உபநிடதங்கள் ஆங்கிலேய மொழியியலாளர் கோல்ப்ரூக்கால் வெளியிடப்பட்டன. அல்லது நாராயணாவின் தென்னிந்தியாவில் பிரபலமான உபநிடதங்களின் பிப்லியோதேகா இண்டிகா தொகுப்பிலும் இடம்பெறவில்லை.[4]
நவீன யுகத்தில் உள்ள முக்திகாவின்]] 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இராமனால் அனுமனுக்கு விவரிக்கப்பட்டது. இது வரிசை எண் 87 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[5]
இது தொடர்பான சைவ உபநிடதங்களின் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் தொடர்புடைய சைவ உபநிடதங்கள், வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் வெவ்வேறு பதிப்புகளில் உள்ளன. உள்ளடக்கத்தில் வேறுபாடுகள், பகுதிகள் எவ்வாறு அமைக்கப்பட்டன மற்றும் நீளம், கிரந்த மற்றும் தேவநாகரி பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளில் உள்ளன.[6]
பஸ்மஜபால உபநிடதம் இரண்டு பகுதிகளாக வழங்கப்படுகிறது. முதல் பகுதி, 17 வசனங்களுடன், பூசுந்த ஜபாலனால் விளக்கப்பட்டது, சாம்பல் மற்றும் அதனை பூசும் செயல்முறையை பரிந்துரைக்கிறது. இரண்டாவது பகுதி, 52 வசனங்களுடன், பூசுந்த ஜபாலனுக்கும் சிவனுக்கும் இடையேயான உரையாடலைக் கூறுகிறது. இது வழிபட வேண்டிய கடவுள்கள் மற்றும் வழிபாட்டிற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்களைக் கூறுகிறது.[7]
உள்ளடக்கம்
தொகுமுதல் பிரிவில், முனிவர் பூசுந்த ஜபாலன் (ஜபாலி முனிவரின் வழித்தோன்றல் [8]) சிவனின் இருப்பிடமான கயிலை மலைக்குச் சென்று, அவருக்கு வணக்கம் செலுத்துகிறார். சிவனின் உருவப்படம் ஓம் , மூன்று கண்கள், புலித்தோல் அணிந்திருப்பது, ஒரு மிருகத்தின் மேல் அமர்ந்திருப்பதாக விவரிக்கப்படுகிறது. அவரது உடல் முழுவதும் திருநீறுபூசப்பட்டிருக்கும். மேலும் அவர் நெற்றியிலும் திரிபுந்திரத்தை அணிந்திருப்பார்.[9][10] அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் உருத்திரன் (அழிப்பவராக சிவன்) ஆகிய கடவுள்களை விட உயர்ந்தவராக விவரிக்கப்படுகிறார். மேலும் அவர் எல்லையற்றவர் மற்றும் உன்னதமானவர் என்றும் விவரிக்கப்படுகிறார். முனிவர் சிவனை வில்வ இலைகள் மற்றும் சாம்பலால் வணங்குகிறார். பின்னர் அவர் சிவனிடம் திரிபுந்திரத்தின் நெறிமுறைகளைப் பற்றி தெளிவுபடுத்தவும், அதன்மூலம் முக்தி பெறவும் வேண்டுகிறார். திருநீறை உருவாக்கும் செயல்முறை, அதைத் தயாரிக்கும் போது எந்த, எத்தனை பாடல்களைப் பாட வேண்டும், எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதைத் தேடும் நபர்கள் யார் என்பதைப் விவரிக்குமாறு சிவனிடம் கேட்கிறார்.[7]
திருநீறைத் தயாரிக்கும் முறை
தொகுவிடியற்காலையில், பசுவின் சாணத்தை சேகரித்து அதை அரச மரத்தின் இலைகளில் வைக்க வேண்டும். திரியம்பக மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அதனை வெய்யிலில் உலர்த்தப்பட வேண்டும். பின்னர் புனித சாம்பலை உற்பத்தி செய்ய நெருப்பு ஏற்றப்படவேண்டும். வன்னி மர இலையை கரண்டி போல வடிவமைத்துக் கொண்டு எண்ணெய் வித்துக்களை நெய்யில் தோய்த்து, நெருப்பில் இடுவதால், அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கும்.[9]
திருநீறணியும் முறை
தொகுஒருவர் தனது உள்ளங்கையில் உள்ள சாம்பலை எடுத்துக் கொண்டு வாமதேவ மந்திரத்தால் அதை புனிதப்படுத்த வேண்டும். அதை தண்ணீரில் கலந்து, பின்னர் பஞ்ச பிராமணத்தின் ஐந்து மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே ஈரமான சாம்பலை தனது உடலில் பூச வேண்டும். இதைத் தொடர்ந்து, தனது மூன்று நடுவிரல்களில் சாம்பலைப் பூசி, "பஸ்ம தாரணை" என்று அழைக்கப்படும் சடங்கைச் செய்ய வேண்டும்: நெற்றியில் மூன்று கிடைமட்ட கோடுகளை (திரிபுந்திரம்) வரைந்து, ஒரே நேரத்தில் அக்னர் புஷ்மாசி மந்திரம் மற்றும் மூர்த்தனம் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். கழுத்து, கன்னங்கள், கண்கள், வாய், மார்பு, தொப்புள், கைகள் அதன் நடுப்பகுதிகள் மற்றும் மணிக்கட்டுகள், உள்ளங்கைகளின் பின்புறம் மற்றும் தோள்பட்டை ஆகியவற்றிலும் இதேபோன்ற சாம்பல் அடையாளங்களை உருவாக்க வேண்டும்.[9][10]
தினமும் மூன்று முறை (காலை, மதியம் மற்றும் மாலை) உடலில் இதனை பூச வேண்டும். அபஹ்புனுந்து மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் திருநீறுடன் புனிதப்படுத்தப்பட்ட தண்ணீரையும் ஒரு பகுதி குடிக்க வேண்டும். மனித வாழ்வின் பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சந்நியாசம் போன்ற நான்கு நிலைகளில் ஏதேனும் ஒரு நபரால் நீறணிவதால் ஏற்படும் நன்மைகளைப் போற்றுகிறது.[9]
புனித நகரமான வாரணாசி
தொகுயோக தியான வடிவமான சிவனை உணர இயலாதவர்கள் வாரணாசிக்கு சென்று அங்கு வாழ வேண்டும் என்று உபநிடதம் வலியுறுத்துகிறது. [11] புனித நகரமான வாரணாசி (காசி) சிவனின் திரிசூலத்தில் இருப்பதாகவும், அங்கு இறப்பவர் அவருடைய பாகமாக மாறுவதாகவும் உரை கூறுகிறது. காசி விசுவநாதர் கோயிலில் உள்ள சோதிர்லிங்கம் உட்பட வாரணாசியில் உள்ள ஐந்து புனித இடங்கள் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. பழங்கால ஜபால உபநிடதத்தைப் போலவே, வாரணாசியில் இறப்பவர்களுக்கு இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சிவனால் உபதேசிக்கப்பட்ட தாரக மந்திரத்தை உபதேசிக்கிறார்கள். இதனால் அவர்கள் முக்தி அடைகிறார்கள் என்று இந்த உரை வலியுறுத்துகிறது.[9] உபநிடதத்தில் சிவனை வழிபடுவதற்கான இறுதி இடமாக வாரணாசி விவரிக்கப்படுகிறது.[7]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Tinoco 1997, ப. 84-89.
- ↑ Farquhar, John Nicol (1920), An outline of the religious literature of India, H. Milford, Oxford university press, p. 364, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-2086-X
- ↑ Klostermaier 1984, ப. 134, 371.
- ↑ Deussen 1997, ப. 558-564.
- ↑ Deussen 1997, ப. 556-557.
- ↑ Friedrich Otto Schrader, A descriptive catalogue of the Sanskrit manuscripts in the Adyar Library கூகுள் புத்தகங்களில், Volume 1, Adyar Library, pages 225-226
- ↑ 7.0 7.1 7.2 Shastri, R. A. "Bhasmajabala Upanishad (87th in order of 108 Upanishads)". Shaivam Organization. Archived from the original on 2022-11-24. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
- ↑ "Bhasma Jabala Upanishad". Vedanta Spiritual Library. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 Ayyangar 1953, ப. 165-192.
- ↑ 10.0 10.1 Swami Parmeshwaranand (2004). Encyclopaedia of the Śaivism. Sarup & Sons. pp. 196–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-427-4.
- ↑ Mahadevan 1975, ப. 231.
உசாத்துணை
தொகு- Ayyangar, TRS (1953). Śaiva Upanisạds. Adyar Library (Reprinted Jain Publishing 2007). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0895819819. இணையக் கணினி நூலக மைய எண் 1070372.
- Deussen, Paul (1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Klostermaier, Klaus K. (1984). Mythologies and Philosophies of Salvation in the Theistic Traditions of India. Wilfrid Laurier Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88920-158-3.
- Kramrisch, Stella (1981). The Presence of Śiva. Princeton, New Jersey: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120804913.
- Mahadevan, T. M. P. (1975). Upaniṣads: Selections from 108 Upaniṣads. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1611-4.
- Hattangadi, Sunder (2000). "भस्मजाबालोपनिषत् (Bhasmajabala Upanishad)" (in சமஸ்கிருதம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
- Tinoco, Carlos Alberto (1997). Upanishads. IBRASA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-85-348-0040-2.
வெளி இணைப்புகள்
தொகு- Bhasmajabala Upanishad in Sanskrit