கால்சியம் சல்பைடு
கால்சியம் சல்பைடு ( Calcium sulfide) என்பது CaS. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் கனசதுர வடிவ பாறை உப்பாக படிகமாகிறது. வெப்பக் காற்றில் கந்தகம் நீக்கும் செயல் முறையின் விளைபொருளான கிப்சத்தின் மறுசுழற்சியின் பகுதிப்பொருளாக கால்சியம் சல்பைடு ஆராயப்படுகிறது. சல்பைடு அயனிகளைக் கொண்டிருக்கும் மற்ற உப்புகள் போலவே கால்சியம் சல்பைடும் ஐதரசன் சல்பைடு வாயுவின் நெடியைக் கொண்டிருக்கிறது. கால்சியம் சல்பைடு நீராற்பகுப்பு அடைவதால் சிறிதளவு ஐதரசன் சல்பைடு வாயு உருவாவது இதற்குக் காரணமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் சல்பைடு
| |
வேறு பெயர்கள்
கால்சியம் ஒருசல்பைடு,
எபர் கால்சீசு, கந்தக்மேற்ற சுண்ணாம்பு ஓல்டாமைட்டு | |
இனங்காட்டிகள் | |
20548-54-3 | |
ChemSpider | 8373113 |
EC number | 243-873-5 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C17392 |
பப்கெம் | 10197613 |
| |
UNII | 1MBW07J51Q |
பண்புகள் | |
CaS | |
வாய்ப்பாட்டு எடை | 72.143 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நிற படிகங்கள் நீர் உறிஞ்சும் |
அடர்த்தி | 2.59 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,525 °C (4,577 °F; 2,798 K) |
சிறிதளவு கரையும் | |
கரைதிறன் | ஆல்ககாலில் கரையும் அமிலமுடன் வினைபுரியும். |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.137 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஆலைட்டு (கனசதுரம்), cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் (Ca2+); எண்முகம் (S2−) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | H2S source |
ஈயூ வகைப்பாடு | எரிச்சலூட்டும் (Xi) சுற்றுச் சூழலுக்கு அபாயமானது (N) |
R-சொற்றொடர்கள் | R31, R36/37/38, R50 |
S-சொற்றொடர்கள் | (S2), S28, S61 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் சல்பைடு இசுட்ரோன்சியம் சல்பைடு பேரியம் சல்பைடு |
சல்பைடுகள் தொடர்புடையவை |
சோடியம் சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அணு அமைப்பின் அடிப்படையில் சோடியம் குளோரைடின் நோக்குருவில் கால்சியம் சல்பைடும் படிகமாகிறது. இப்படிகத்தில் உள்ள பிணைப்புகள் யாவும் அயனிப்பிணைப்பில் காணப்படுகின்றன. அதிகமான உருகுநிலையும் இதனுடைய அயனிப்பிணைப்பை உறுதி செய்கிறது. படிகத்தில் ஒவ்வொரு S2− அயனியும் ஆறு Ca2+ அயனி எண்முகங்களால் சூழப்பட்டுள்ளன. இதற்கு எதிராக ஒவ்வொரு Ca2+ அயனியும் ஆறு S2− அயனிகளால் சூழப்பட்டுள்ளன.
தயாரிப்பு
தொகுகால்சியம் சல்பேட்டின் மீவெப்பக் கார்பனொடுக்க வினையின் மூலமாக கால்சியம் சல்பைடு தயாரிக்கப்படுகிறது. கார்பனை, கார்பன் டை ஆக்சைடாக மாற்றுவதன் மூலமாக கால்சியம் சல்பைடு உருவாகிறது.
- CaSO4 + 2 C → CaS + 2 CO2
எஞ்சியுள்ள CaSO4 வினையை மேலும் தொடர்கிறது.
- 3 CaSO4 + CaS → 4 CaO + 4 SO2
இரண்டாவது வினையில் +6 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சல்பேட்டு -2 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சல்பைடை +4 ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கும் கந்தக ஈராக்சைடாக ஆக்சிசனேற்றம் செய்கிறது. அதே வேளையில் +6 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சல்பேட்டு தானும் +4 ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கும் கந்தக ஈராக்சைடாக மாறுகிறது. லெப்லாங்கு செயல்முறையில் கால்சியம் சல்பைடு ஓர் உடன் விளைபொருளாகவும் விளைகிறது.
வினைகள் மற்றும் பயன்கள்
தொகுநீருடன் தொடர்பு ஏற்படுகையில், அது காற்றில் உள்ள ஈரப்பதமாக இருந்தாலும் சரி கால்சியம் சல்பைடு சிதைவடைந்து Ca(SH)2, Ca(OH)2, மற்றும் Ca(SH)(OH) கலவையைக் கொடுக்கிறது.
- CaS + H2O → Ca(SH)(OH)
- Ca(SH)(OH) + H2O → Ca(OH)2 + H2S
சுண்ணாம்புப் பால், Ca(OH)2, தனிமநிலை கந்தகத்துடன் வினைபுரிந்து கந்தகச்சுண்ணாம்பைத் தருகிறது. இது ஒரு பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. இப்பூச்சிக் கொல்லியில் உள்ள செயல் திறன்மிக்க பகுதிப்பொருள் பல்சல்பைடு ஆகும். இச்சல்பைடு கால்சியம் சல்பைடு அல்ல என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.[1]
கால்சியம் சல்பைடு ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து நச்சு மிகுந்த ஐதரசன் சல்பைடு வாயுவை வெளியிடுகிறது.
- CaS + 2 HCl → CaCl2 + H2S
இயற்கைத் தோற்றம்
தொகுஒல்டாமைட்டு என்ற கனிமமே கால்சியம் சல்பைடின் கனிமவடிவமாகும். சில எரிகற்களின் அரிய பகுதிப்பொருளாகவும் கால்சியம் சல்பைடு காணப்படுகிறது. சூரிய விண்முகில் ஆராய்ச்சியில் கால்சியம் சல்பைடு மிகுந்த அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த சேர்மமாக விளங்குகிறது. தேவையற்ற கரிக்குவியலை எரிக்கும் போதும் இச்சேர்மம் உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.