காவாறனை (transfer RNA அல்லது tRNA) என்பது, ஆறனையால் ஆன, புரதத்தொகுப்பில் (en:Protein Biosynthesis) ஒரு படிநிலையான மொழிபெயர்ப்பில் உதவும் ஒரு கட்டமைப்பு ஆகும்[1]. முன்பு கரையாறனை (sRNA, soluble RNA) என்றழைக்கப்பட்ட இது,[2] 76 முதல் 90 நியூக்கிளியோட்டைடுக்களால் ஆனது[3]. மரபுக்குறியீட்டில் இருந்து குறியீட்டு வரைசையைப் பெற்று, செய்தியைக் காவிவரும் தூதாறனையில் உள்ள குறியீட்டு வரிசைக்கேற்ப, அமினோவமிலங்களை குறிப்பிட்ட வரிசையில் இணைப்பதற்கான தொடர்பாடல் நபராகக் காணப்படும் காவாறனை, இரைபோசோமுக்கு அமினோவமிலங்களை காவிச் செல்வதன் மூலம் பெப்டைட்டுச் சங்கிலியைத் தோற்றுவிக்கின்றது[1]. எனவே, உயிரியல் மொழிபெயர்ப்பில், காவாறனையானது இன்றியமையாத பங்கு வகிக்கின்றது எனலாம்.

காவாறனையின் மூமைக் கட்டமைப்பு CCA வால் செம்மஞ்சளிலும், ஏல் தண்டு ஊதாவிலும், D - கரம் சிவப்பிலும், எதிர்முக்குறிய கரம் நீலத்துடன் எதிர்முக்குறியம் கருப்பிலும், T கரம் பச்சையிலும் காட்டப்படுகின்றன.

அமைப்பு தொகு

காவாறனையானது, அதன் முதன்மை, ஈர்மை, மூமை ([primary, secondary and tertiary structures) ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றது.[4] அதன் ஈர்மை அமைப்பு, கராம்பு இலை போலிருப்பதால், ""கராம்பிலைக் கட்டமைப்பு" என்றே அது அழைக்கப்படுகின்றது. இரைபோசோமின் P புறம் மற்றும் A புறங்களில் இணைந்து கொள்ளக்கூடிய "ட" வடிவான முப்பரிமாணக் கட்டமைப்பு இந்த மூவகைக் காவாறனைகளிலும் உண்டு.

பொதுவாகக் காவாறனையில், பின்வரும் பாகங்கள் உண்டு:

  1. 5' அந்த பொசுபேற்றுக் கூட்டம்.
  2. ஏல் தண்டு - இணையும் அமினோவமிலத்தை ஏற்கின்ற, 7 முதல் 9 தாங்கி இணைகளைக் கொண்ட தண்டு போன்ற அமைப்பு.
  3. CCA வால் - சைட்டோசின் - சைற்றோசின் - அடினின் தொடராலான வால் போன்ற அமைப்பு.
  4. D கரம் - இருநீரேற்றப்பட்ட யுரிடினைக் கொண்ட தாங்கியிணைப் பாகம்.[4]
  5. எதிர்-முக்குறியக் கரம் - அமினோவமிலக் காவுகையில் உதவும் எதிர்முக்குறியம் காணப்படும் இடம். காவாறனையின் முதன்மைக் கட்டமைப்பில், (தூதாறனை எதிர்மறையாகப் புரிந்து கொள்ள வசதியாக) இது தலைகீழ் ஒழுங்கிலேயே காணப்படும்.
  6. T கரம் - போலி யுரிடினைக் கொண்ட கரம். TΨC என்ற தொடர் வடிவில், இப்போலி யுரிடின் Ψ என்ற குறியீடாகக் குறிக்கப்படுகின்றது.

எதிர்-முக்குறியம் தொகு

 
புரதத் தொகுப்பின் போது, காவாறனையும் தூதாறனையும் இடைத்தாக்கமுறல்

எதிர்-முக்குறியம்[5] என்பது, தூதாறனையில் உள்ள முக்குறியங்களுக்கு எதிர்நிரப்பு அலகுகளான மும்மூன்று நியூக்கிளியோட்டைடுக்களாலான அலகுகளைக் குறிக்கும்[1]. ஒரு குறித்த அமினோவமிலத்துக்குப் பொறுப்பான மூன்று நியூக்கிளியோட்டைடுக்களை, தூதாறனையில் வாசித்தறியும் தொழிலை, இம்எதிர்-முக்குறியங்கள் செய்கின்றன. சில எதிர்-முக்குறியங்களால், ஒன்றுக்கு மேற்பட்ட முக்குறியங்களுடன் இணைய முடியும்[6]:29.3.9. ஒரே அமினோவமிலத்தை, வெவ்வேறு முக்குறியங்கள் அடையாளப்படுத்த முடியும். உதாரணமாக கிளைசின் எனும் அமினோவமிலத்தை எடுத்துக் கொண்டால், அதை GGU, GGC, GGA, GGG என்று நான்குவகையான முக்குறியங்கள் குறியீடு செய்யும். தூதாறனையின் எந்தக் முக்குறியம், எந்த அமினோவமிலத்தைக் குறிக்கின்றது என்று உய்த்துணர்ந்து, அதைக் காவி வந்து, இரைபோசோமில் சேர்த்து விடுவதே, காவாறனையின் முக்கியமான பணி ஆகும்[7]. காவாறனையின் ஒவ்வொரு வகையும், ஒவ்வொரு வகை அமினோவமிலத்துடனே இணைந்துகொள்ள முடியும். எனவே ஒவ்வொரு அங்கியிலும் எண்ணிலடங்கா காவாறனை வகைகள் காணப்படும்.

இரைபோசோமுடன் இணைதல் தொகு

காவாறனை மூலக்கூறுகள் இணையக்கூடிய மூன்று பிணைப்புறங்கள் (binding sites) இரைபோசோமில் உண்டு. A-புறம் (அமினோ-ஏசைல் புறம்)[8] P-புறம் (பெப்டிடைல்) மற்றும் E- புறம் (வெளியேறல்). மொழிமாற்றம் ஆரம்பமானதும், முதலாவது அமைனோ - ஏசைல் கூட்டம் ஏற்றப்பட்ட காவாறனை, P புறத்துடன் வந்திணைகின்றது.

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 "Translation of mRNA". U.S National Library of Medicine. NCBI. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Plescia, O J; Palczuk, N C; Cora-Figueroa, E; Mukherjee, A; Braun, W (October 1965). "Production of antibodies to soluble RNA (sRNA)". Proc. Natl. Acad. Sci. USA 54 (4): 1281–1285. doi:10.1073/pnas.54.4.1281. பப்மெட்:5219832. 
  3. Sharp, Stephen J; Schaack, Jerome; Cooley, Lynn; Burke, Deborah J; Soll, Dieter (1985). "Structure and Transcription of Eukaryotic tRNA Genes". CRC Critical Reviews in Biochemistry 19 (2): 107–144. doi:10.3109/10409238509082541. பப்மெட்:3905254. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/3905254. பார்த்த நாள்: 23 November 2014. 
  4. 4.0 4.1 Itoh, Yuzuru; Sekine, Shun-ichi Sekine; Suetsugu, Shiro; Yokoyama, Shigeyuki (6 May 2013). "Tertiary structure of bacterial selenocysteine tRNA". Nucleic Acids Research 41 (13): 6729–6738. doi:10.1093/nar/gkt321. http://nar.oxfordjournals.org/content/41/13/6729.abstract. பார்த்த நாள்: 23 November 2014. 
  5. Felsenfeld G, Cantoni G; Cantoni (1964). "Use of thermal denaturation studies to investigate the base sequence of yeast serine sRNA". Proc Natl Acad Sci USA 51 (5): 818–26. doi:10.1073/pnas.51.5.818. பப்மெட்:14172997. Bibcode: 1964PNAS...51..818F. 
  6. Stryer L, Berg JM, Tymoczko JL (2002). Biochemistry (5th ). San Francisco: W.H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7167-4955-6. http://www.ncbi.nlm.nih.gov/books/NBK21154/. 
  7. Crick F (1968). "The origin of the genetic code". J Mol Biol 38 (3): 367–379. doi:10.1016/0022-2836(68)90392-6. பப்மெட்:4887876. 
  8. Konevega, AL; Soboleva, NG; Makhno, VI; Semenkov, YP; Wintermeyer, W; Rodnina, MV; Katunin, VI (Jan 2004). "Purine bases at position 37 of tRNA stabilize codon-anticodon interaction in the ribosomal A site by stacking and Mg2+-dependent interactions". RNA 10 (1): 90–101. doi:10.1261/rna.5142404. பப்மெட்:14681588. 

எதிர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவாறனை&oldid=2747484" இலிருந்து மீள்விக்கப்பட்டது