கிசிமென்

உருசியாவிலுள்ள ஒரு எரிமலை

கிசிமென் (Kizimen, உருசியம்: Кизимен) என்பது உருசியாவின் தூரகிழக்குப் பகுதியான கம்சாத்கா பிரதேசத்தில் உள்ள ஒரு அடுக்கு எரிமலை ஆகும்.

கிசிமென்
Kizimen
Кизимен
கிசிமென் எரிமலை, சனவரி 6, 2011
உயர்ந்த புள்ளி
உயரம்2,376 m (7,795 அடி)
புடைப்பு1,530 m (5,020 அடி)
பட்டியல்கள்Ultra
ஆள்கூறு55°07′48″N 160°19′12″E / 55.130°N 160.32°E / 55.130; 160.32
புவியியல்
அமைவிடம்கம்சாத்கா, உருசியா
நிலவியல்
மலையின் வகைஅடுக்கு எரிமலை
கடைசி வெடிப்பு1928

கிசிமென் எரிமலை கம்சாத்காவின் முக்கிய நிருவாக நகரமான பெத்ரொபவ்லொவ்ஸ்கில் இருந்து 265 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கம்சாத்காவின் 60 விழுக்காடு மக்கள் பெத்ரொபாவ்லொவ்ஸ்க் நகரில் வாழ்கின்றனர்.

கிசிமென் எரிமலை 1928 ஆம் ஆண்டில் வெடித்தது. அதன் பின்னர் 2010 சூன் மாதத்தில் இருந்து விழிப்புடன் இருந்து, டிசம்பர் 2010 இல் இருந்து வெடிக்க ஆரம்பித்தது. சனவரி 20, 2011 இல் 6 கிமீ (3.72 மைல்) உயரத்துக்கு சீறியது. 24 மணி நேரத்தில் கிசிமென் எரிமலையின் சுற்றுவட்டத்தில் கிட்டத்தட்ட 200 அதிர்வுகள் பதியப்பட்டன[1].

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  1. Volcano in Russian Far East continues to spew ashy plume, ரியா நோவஸ்தி, சனவரி 20, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசிமென்&oldid=4120606" இலிருந்து மீள்விக்கப்பட்டது