கிசிர் கான்

தில்லி சுல்தானகத்தின் 25வது சுல்தான் மற்றும் சையிது வம்சத்தின் முதல் சுல்தான்

கிசிர் கான் (Khizr Khan) (ஆட்சி 28 மே 1414 - 20 மே 1421) வட இந்தியாவில் தைமூர் படையெடுப்பு காரணமாக துக்ளக் வம்சம் வீழ்ச்சியைடைந்தது. பின்னர் வட இந்தியாவில் தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்த சையிது வம்சத்தின் நிறுவனர் ஆவார். [1] 1414 முதல் 1451 வரை 37 ஆண்டுகளுக்கு இந்த அரசமரபை சேர்ந்த நான்கு ஆட்சியாளர்கள் ஆண்டனர்.[2] இந்த அரசமரபின் முதல் ஆட்சியாளர் கிசிர் கான் ஆவார். இவர் தைமூரியர்களுக்கு திறை செலுத்தி வந்த, முல்தானை ஆண்ட ஆட்சியாளர் ஆவார். இவர் 1414இல் தில்லியை வென்றார். இதன் ஆட்சியாளர்கள் தங்களைத் தாமே முபாரக் ஷாவின் ஆட்சிக்கு கீழ் தில்லி சுல்தானகத்தின் சுல்தான்களாக அறிவித்துக் கொண்டனர்.[3][4] முல்தானின் ஆளுநராக இருந்த கிசர் கான், திறமையான நிர்வாகியாக அறியப்பட்டார். தைமூரின் படையெடுப்பு பயம் காரணமாக இவர் எந்த அரச பட்டத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை . இவரது ஆட்சியின் போது, முந்தைய துக்ளக் ஆட்சியாளர்களின் பெயரில் நாணயங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. [5] 20 மே 1421 இல் இவர் இறந்த பிறகு, இவரது மகன் முபாரக் கான், [6] முய்ஸ்-உத்-தின் முபாரக் ஷா என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தார்.

கிசிர் கான்
சுல்தான்
பிரூசு சா துக்ளக்கின் பெயரில் அச்சிடப்பட்ட கிசிர் கானின் நாணயம்
25வது தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்28 மே 1414 – 20 மே 1421
முடிசூட்டுதல்28 மே 1414
முன்னையவர்நசீர்-உத்-தின் மக்முது சா துக்ளக்
பின்னையவர்முபாரக் சா
அரசன்சாருக்
தைமூர் வம்சம் - முல்தானின் ஆளுநர்
தைமூர் வம்சம் - தில்லியின் ஆளுநர்
ஆட்சிக்காலம்31 டிசம்பர் 1398 - 18 பிப்ரவரி 1405
முடிசூட்டுதல்தைமூர்
அரசன்தைமூர்
இறப்பு20 மே 1421
புதைத்த இடம்
மரபுசையிது வம்சம்
மதம்இசுலாம்

பரம்பரை

தொகு

சம கால எழுத்தாளரான எகுயா சிர்கிந்தி தனது தரிக்-இ-முபாரக் சாகி நூலில் கிசிர் கானை இறை தூதர் முகம்மது நபியின் ஒரு வழித்தோன்றல் என்று குறிப்பிடுகிறார்.[7] இறை தூதர் முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழியாக தாங்கள் தோன்றியவர்கள் என்ற வாதத்தின் அடிப்படையில் சையிது என்ற தங்களது பட்டத்தை இந்த அரசமரபின் உறுப்பினர்கள் பெற்றனர் என்கிறார். எனினும் எகுயா சிர்கிந்தி தனது கருத்தை உறுதியற்ற சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிடுகிறார் என்று குறிப்பிடப்படுகிறது. முதலில், கிசிர் கானின் சையிது பாரம்பரியத்தை உச் சரீப்பின் பிரபல துறவி சையிது சலாலுத்தீன் புகாரியின் ஒரு தோராயமான அங்கீகரிப்பை முதன்மையாகக் கொண்டு இவர் குறிப்பிடுகிறார்.[8][9] இரண்டாவது, சுல்தானின் உயர்ந்த பண்புகளானவை ஓர் இறை தூதரின் வழித் தோன்றலுக்கான நன்னெறி தகுதிகளை கொண்டிருந்தவராக இவரை தனித்துவமாக காட்டியது என்பதன் அடிப்படையில் குறிப்பிடுகிறார்.[10] ஆபிரகாம் எராலி என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி தொடக்க கால துக்ளக் ஆட்சியின் போது முல்தான் பகுதியில் நெடுங்காலத்திற்கு முன்னர் குடியமர்ந்த ஓர் அரபு குடும்பத்தின் வழித்தோன்றல்களாக கிசிர் கானின் முன்னோர்கள் இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இவர்களது சையிது மரபை இவர் சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறார்.[11] ரிச்சர்டு எம். ஈட்டன் மற்றும் கிழக்கத்திய அறிஞர் சைமன் திக்பி ஆகியோரது கூற்றுப் படி கிசிர் கான் என்பவர் கோகர் இனத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாபிய தலைவர் ஆவார். தைமூரிடம் ஒரு தூதுவராக இவர் அனுப்பப்பட்டார். மிக அண்டைய பகுதியான பஞ்சாப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இவர் அனுப்பப்பட்டிருந்தார். தான் பெற்ற தொடர்புகள் காரணமாக இறுதியாக தில்லியில் அதிகாரப் பிடிப்பு கொண்டவராக கிசிர் கான் உருவானார்.[12][13] பிரான்செசுகா ஒர்சினி மற்றும் சமீரா சேக் ஆகியோர் தங்களது நூல்களில் இதே போன்ற ஒரு பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.[14]

ஆட்சி

தொகு

கிசிர் கான் அரியணையில் ஏறிய பிறகு, மாலிக்-உசு-சார்க் துக்பா என்பவரை தனது பிரதம அமைச்சராக நியமித்தார். அவர் 1421 வரை பதவியில் இருந்தார். முசாபர்நகர் மற்றும் சகாரன்பூர் ஆகிய பகுதிகள் சயீத் சலீம் என்பவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்துர் ரகுமான் முல்தான் மற்றும் பத்தேபூர் ஆகிய இடங்களைப் பெற்றார். 1414 இல், தாஜ்-உல்-முல்க் தலைமையில் ஒரு இராணுவம் ரோகில்கண்ட் அரசன் ஹர் சிங்கின் கிளர்ச்சியை ஒடுக்க அனுப்பப்பட்டது. ஹர் சிங் தப்பி ஓடினாலும் இறுதியில் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கப்பம் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். ஜூலை 1416 இல் தாஜ்-உல்-முல்க் தலைமையில் ஒரு இராணுவம் பயானா மற்றும் குவாலியருக்கு அனுப்பப்பட்டது. இராணுவம் விவசாயிகளைக் கொள்ளையடித்து இரு பகுதிகளையும் இணைத்தது. [15] 1417 ஆம் ஆண்டில், கிசிர் கான் தனது சொந்தப் பெயரையும் தைமூரின் மகன் சாருக்கின் பெயருடன் இணைத்துக்கொள்ள சாருக்கிடம் அனுமதி பெற்றார். [16] 1418 இல், ஹர் சிங் மீண்டும் கிளர்ச்சி செய்தார். ஆனால் தாஜ்-உல்-முல்க்கால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டார். 28 மே 1414 இல், கிசர் கான் தில்லியைக் கைப்பற்றி தௌலத் கான் லோதியை சிறையில் அடைத்தார். [15]

 
பிரூசு ஷா துக்ளக்கின் பெயரில் அச்சிடப்பட்ட கிசிர் கானின் நாணயம்.

1414இல் சையிதுகளின் ஆட்சியை இவர் தொடங்கினார். தைமூரின் பெயரிலேயே இவர் ஆட்சி செய்து வந்தார். எந்த விதத்திலும் சுதந்திரமான நிலையை இவரால் அடைய இயலவில்லை. கிசிர் கானின் பெயரில் அச்சிடப்பட்டதாக எந்த ஒரு நாணயமும் அறியப்படவில்லை.[17]

மேற்கோள்கள்

தொகு
  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 122–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  2. See:* M. Reza Pirbha, Reconsidering Islam in a South Asian Context, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004177581, Brill
  3. V. D. Mahajan (2007). History of Medieval India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121903646.
  4. Iqtidar Alam Khan (2008). Historical Dictionary of Medieval India. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810855038.
  5. Nelson, Wright [1974], The Coinage & Metrology of the Sultans of Dehli, New Delhi: Munshiram Manoharlal Publishers Pvt. Ltd., pp. 239.
  6. Mahajan, V. D. (2007) [1991], History of Medieval India, New Delhi: S. Chand, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0364-5, pp. 237–9.
  7. Porter, Yves; Degeorge, Gérard (2009). The Glory of the Sultans: Islamic Architecture in India (in ஆங்கிலம்). Though Timur had since withdrawn his forces , the Sayyid Khizr Khān , the scion of a venerable Arab family who had settled in Multān , continued to pay him tribute: Flammarion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-08-030110-9.
  8. The Cambridge History of India: Turks and Afghans, edited by W. Haig (in ஆங்கிலம்). S. Chand. 1958. The claim of Khizr Khān, who founded the dynasty known as the Sayyids, to descent from the prophet of Arabia was dubious, and rested chiefly on its causal recognition by the famous saint Sayyid Jalāl-ud-dīn of Bukhārā.
  9. Journal of Sikh Studies:Volume 20. Department of Guru Nanak Studies. 1996. p. 61.
  10. Ramesh Chandra Majumdar (1951). The History and Culture of the Indian People: The Delhi sultanate. Bharatiya Vidya Bhavan.
  11. Eraly, Abraham (2015-04-01). The Age of Wrath: A History of the Delhi Sultanate (in ஆங்கிலம்). Penguin UK. p. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-658-8. The first of these two dynasties was founded by Khizr Khan, who bore the appellation 'Sayyid', which identified him as a descendant of prophet Muhammad, so the dynasty he founded came to be known as the Sayyid dynasty. The veracity of Khizr Khan's claimed lineage is uncertain, but it is likely that his forebears were Arabs, who had migrated to India in the early Tughluq period and settled in Multan. The family prospered in India, gaining wealth and power. This advancement culminated in Malik Suleiman, Khizr Khan's father, becoming the governor of Multan under the Tughluqs. When Suleiman died, Khizr Khan succeeded him to the post, but lost it during the political turmoil following the death of Firuz Tughluq.
  12. Easton, Richard M. (2019). India in the Persianate Age: 1000–1765 (in ஆங்கிலம்). p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520325128. The career of Khizr Khan, a Punjabi chieftain belonging to the Khokar clan...
  13. Digby, Simon (2014-10-13), After Timur Left: North India in the Fifteenth Century, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், pp. 47–59, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780199450664.003.0002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-945066-4, பார்க்கப்பட்ட நாள் 2023-01-25, And we find that a Khokhar chieftain, Khizr Khan who was sent to Timur as an ambassador and negotiator from the most adjacent area, the Punjab, ultimately became the power holder in Delhi, thanks to the contacts he had aquired [sic]
  14. Orsini, Francesca; Sheikh, Samira (2014). After Timur Left: Culture and Circulation in Fifteenth-century North India (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-945066-4.
  15. 15.0 15.1 Mahajan, V. D. (2007) [1991], History of Medieval India, New Delhi: S. Chand, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0364-5ISBN 81-219-0364-5, pp. 237–9.
  16. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp. 125–8
  17. Nizami, K.A. (1970, reprint 2006) A Comprehensive History of India, Vol-V, Part-1, People Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7007-158-5, p.631
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசிர்_கான்&oldid=3833963" இலிருந்து மீள்விக்கப்பட்டது