கிடாக்குழி

கிடாக்குழி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த வீரனேந்தல் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். இக்கிராமம் சிவகங்கைக்கு மேற்கே 24 கிமீ தொலைவிலும், திருப்புவனத்திற்கு கிழக்கே 15 கிமீ தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 41 கிமீ தொலைவிலும் உள்ளது.

இதன் அருகே திருப்பாச்சேத்தி மற்றும் இராஜகம்பீரம் ஊர்கள் உள்ளது. பழையனூர் கிளை அஞ்சலகத்தை சார்ந்த இக்கிராமத்தின் அஞ்சல் சுட்டு எண் 630610 ஆகும். கிடாக்குழி கிராமத்திற்கு அருகமைந்த தொடருந்து நிலையம் திருப்பாச்சேத்தியில் உள்ளது.

சிறப்பு தொகு

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தில், இக்கிராமத்தைச் சேர்ந்த கிராமியப் பாடகர் கிடாக்குழி மாரியம்மாள், கண்டா வரச்சொல்லுங்க எனும் பாடலை பாடியுள்ளார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. [ கிடாக்குழி மாரியம்மாள் - காணொலி
  2. Kidakkuzhi Mariyammal Interview
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடாக்குழி&oldid=3111896" இலிருந்து மீள்விக்கப்பட்டது