கியாம்பாட்டிஸ்டா விக்கோ

கியாம்பாட்டிஸ்டா விக்கோ (Giambattista Vico) (23 ஜூன் 1668 - 23 ஜனவரி 1744) பதினெட்டாம் நூற்றாண்டின் தொடங்கிய இத்தாலிய அறிவொளி இயக்கத்தின் போது செயல்பட்ட ஒரு இத்தாலிய தத்துவஞானியும், சொல்லாட்சியாளரும், வரலாற்றாசிரியரும், நீதிபதியும் ஆவார். நவீன பகுத்தறிவுவாதத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை இவர் விமர்சித்தார். தனது 17 வது வயதில் இஸ்சியா பேராயரின் உறவினர்களுக்கு ஒன்பதாண்டுகள் ( 1685 - 1694 ) ஆசிரியராக இருந்தார். கற்பித்துக் கொண்டே சட்டவியல், மொழியியல், தத்துவம், வரலாறு கற்றார். பிளேட்டோ, எபிக்யூரஸ், லூகிரீசியஸ், தாஸிடஸ், மாக்கியவல்லி, பிரான்சிஸ் பேக்கன், டெஸ்கார்டெஸ், குரேசியஸ் ஆகியோரின் படைப்புக்களைக் கருத்தூன்றிப் படித்தார். நோபிள்ஸ் பல்கலைக்கழகத்தில் சொற்கோப்புக் கலைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1735-ல் நான்காம் சார்லசால் அரசரவை வரலாற்றாளராக நியமிக்கப்பட்டார்.

கியாம்பாட்டிஸ்டா விக்கோ
Portrait
பிறப்பு(1668-06-23)23 சூன் 1668
நேப்பிள்ஸ்
இறப்பு23 சனவரி 1744(1744-01-23) (அகவை 75)
நேப்பிள்ஸ்
தேசியம்இத்தாலியர்
படித்த கல்வி நிறுவனங்கள்நோப்பிள்ஸ் பல்கலைக்கழகம்
(சட்டம், 1694)
காலம்18 ஆம் நூற்றாண்டு
பகுதிமேற்கத்திய தத்துவம்
பள்ளிவரலாற்றுவாதம்
கல்விக்கழகங்கள்நோபிள்ஸ் பல்கலைக்கழகம்
முக்கிய ஆர்வங்கள்
சட்டவியல், மொழியியல், தத்துவம், வரலாறு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
வெரம் எசே இப்சம் பேக்டம்

விக்கோவால் உருவாக்கப்பட்ட லத்தீன் பழமொழியான Verum esse ipsum factum ("உண்மை என்பது தானே உருவாக்கப்பட்ட ஒன்று") ஆக்கபூர்வமான அறிவியலின் ஆரம்ப நிகழ்வாகும்.[1][2] வரலாற்றின் தத்துவத்தின் நவீன துறையை இவர் துவக்கி வைத்தார். மேலும் வரலாற்றின் தத்துவம் என்ற சொல் இவரது எழுத்துக்களில் இல்லை என்றாலும், விக்கோ "தத்துவத்தின் வரலாறு தத்துவ ரீதியாக விவரிக்கப்பட்டது" என்று பேசினார்.[3] இவர் ஒரு வரலாற்றாசிரியராக இல்லாவிட்டாலும், விக்கோ மீதான சமகால ஆர்வம் பொதுவாக ஒரு தத்துவவாதியும், கருத்துகளின் வரலாற்றாசிரியருமான ஐசாயா பெர்லின்[4] , ஒரு இலக்கிய விமர்சகர் எட்வர்டு செயித் , ஒரு வரலாற்று அறிஞர் எய்டன் வைட் [5][6] போன்ற வரலாற்றாசிரியர்களால் தூண்டப்பட்டது.

படைப்புகள் தொகு

  • சம காலத்தை பற்றிய ஆய்வு
  • இத்தாலியர்களை பற்றிய பண்டைக்கால அறிவு
  • புதிய அறிவியல்
  • சுய வரலாறு
  • பிரபஞ்ச சட்டம்

இவை அல்லாமல் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் படைப்புகளில் புதிய அறிவியல் என்னும் நூல் வரலாற்று கருத்து பொக்கிஷமாக கருதப்படுகிறது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Ernst von Glasersfeld, An Introduction to Radical Constructivism.
  2. Bizzell and Herzberg, The Rhetorical Tradition, p. 800.
  3. The contemporary interpretation of Vico is by Verene, Donald Philip. See: "Giambattista Vico" (2002), A Companion to Early Modern Philosophy, Steven M. Nadler, ed. London:Blackwell Publishing, ISBN 0-631-21800-9, p. 570.
  4. Vico and Herder: Two Studies in the History of Ideas
  5. Giambattista Vico (1976), "The Topics of History: The Deep Structure of the New Science", in Giorgio Tagliacozzo and Donald Philip Verene, eds, Science of Humanity, Baltimore and London: 1976.
  6. Giambattista Vico: An International Symposium. Giorgio Tagliacozzo and Hayden V. White, eds. Johns Hopkins University Press: 1969. Attempts to inaugurate a non-historicist interpretation of Vico are in Interpretation: A Journal of Political Philosophy [1], Spring 2009, Vol. 36.2, and Spring 2010 37.3; and in Historia Philosophica, Vol. 11, 2013 [2].
  7. க. வெங்கடேசன். வரலாற்று வரைவியல். வி.சி.பதிப்பகம். 

மேலும் படிக்க தொகு

  • Andreacchio, Marco. "Epistemology's Political-Theological Import in Giambattista Vico" in Telos. Vol. 185 (2019); pp. 105–27.
  • Bedani, Gino. Vico Revisited: Orthodoxy, Naturalism and Science in the Scienza Nuova. Oxford: Berg Publishers, 1989.
  • Berlin, Isaiah. Vico and Herder. Two Studies in the History of Ideas. London, 1976.
  • Berlin, Isaiah. Three Critics of the Enlightenment: Vico, Hamann, Herder. London and Princeton, 2000.
  • Bizzell, Patricia, and Bruce Herzberg. The Rhetorical Tradition: Readings from Classical Times to the Present. 2nd ed. Basingstoke: Macmillan; Boston, Ma: Bedford Books of St Martin's Press, 2001. Pp. Xv, 1673. (First Ed. 1990). 2001.
  • Colilli, Paul. Vico and the Archives of Hermetic Reason. Welland, Ont.: Editions Soleil, 2004.
  • Croce, Benedetto. The Philosophy of Giambattista Vico. Trans. R.G. Collingwood. London: Howard Latimer, 1913.
  • Danesi, Marcel. Vico, Metaphor, and the Origin of Language. Bloomington: Indiana UP, 1993
  • Fabiani, Paolo, "The Philosophy of the Imagination in Vico and Malebranche". F.U.P. (Florence UP), Italian edition 2002, English edition 2009.
  • Fisch, Max, and Thomas G. Bergin, trans. Vita di Giambattista Vico (The Autobiography of Giambattista Vico). 1735–41. Ithaca: Cornell UP, 1963.
  • Giannantonio, Valeria. Oltre Vico – L'identità del passato a Napoli e Milano tra '700 e '800, Carabba Editore, Lanciano, 2009.
  • Gould, Rebecca Ruth. “Democracy and the Vernacular Imagination in Vico’s Plebian Philology,” History of Humanities 3.2 (2018): 247–277.
  • Grassi, Ernesto. Vico and Humanism: Essays on Vico, Heidegger, and Rhetoric. New York: Peter Lang, 1990.
  • Hösle, Vittorio. "Vico und die Idee der Kulturwissenschaft" in Prinzipien einer neuen Wissenschaft über die gemeinsame Natur der Völker, Ed. V. Hösle and C. Jermann, Hamburg : F. Meiner, 1990, pp. XXXI-CCXCIII
  • Levine, Joseph. Giambattista Vico and the Quarrel between the Ancients and the Moderns. Journal of the History of Ideas 52.1(1991): 55-79.
  • Lilla, Mark. G. B. Vico: The Making of an Anti-Modern. Cambridge, MA: Harvard University Press, 1993.
  • Mazzotta, Giuseppe. The New Map of the World: The Poetic Philosophy of Giambattista Vico. Princeton: Princeton University Press, 1999.
  • Miner, Robert. Vico, Genealogist of Modernity. Notre Dame: University of Notre Dame Press, 2002.
  • Schaeffer, John. Sensus Communis: Vico, Rhetoric, and the Limits of Relativism. Durham: Duke UP, 1990.
  • Verene, Donald. Vico's Science of Imagination. Ithaca: Cornell UP, 1981.
  • Verene, Molly Black "Vico: A Bibliography of Works in English from 1884 to 1994." Philosophy Documentation Center, 1994.
  • Alain Pons, Vie et mort des Nations. Lecture de la Science nouvelle de Giambattista Vico, L'Esprit de la Cité, Gallimard, 2015

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Giambattista Vico
என்பதில் ஊடகங்கள் உள்ளன.