கிரண் பிஷ்னோய்

கிரண் பிஷ்னோய் (கிரண் கோடாரா என்றும் அழைக்கப்படுகிறார்) இந்தியாவிலுள்ள அரியானா மாநிலத்தை சேர்ந்த இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை ஆவார்.[1] இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுநலவாய விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் 72 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கங்களை வென்றார்.

கிரண் பிஷ்னோய்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புராவத் கேரா, இசார், அரியானா
விளையாட்டு
விளையாட்டுமல்யுத்தம்
பதக்கத் தகவல்கள்

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி தொகு

கிரண் கோதாரா என்றும் அழைக்கப்படும் கிரண் பிஷ்னோய், அரியானா மாநிலம் இசார் மாவட்டத்தில் உள்ள ராவத் கேரா கிராமத்தில் குல்தீப் கோதாரா மற்றும் சுனிதா கோதாரா ஆகியோருக்குப் மகளாக பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தை இசார் மாவட்டத்தின் கலிராவன் கிராமத்தில் உள்ள தனது தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் கழித்தார். இவரது தாய்வழி தாத்தா ராம்ஸ்வரூப் கிச்சத் கலிரவ்னா ஒரு மல்யுத்த வீரர், மேலும் இசார் வர் மல்யுத்த பயிற்சிக்காக இவரை தன்னுடன் அழைத்துச் செல்வார். இது மல்யுத்த விளையாட்டில் இவரது ஆர்வத்தை வளர்க்க வழிவகுத்தது. 2010 இல் இவரது தாத்தா இறந்த பிறகு, இவர் இசாரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினார், மேலும் இவரது பயிற்சியாளர் விசுணுவின் வழிகாட்டுதலின் கீழ் மகாபீர் மைதானத்தில் மல்யுத்தப் பயிற்சியைத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் சோதனைகளை இவர் கால் முட்டி காயம் காரணமாகத் தவறவிட்டார். இவர் இறுதியில் காயத்தில் இருந்து மீண்ட பிறகு, 2015 இல் தேசிய சாம்பியனானார். இவர் 2015 இல் பாரத் கேசரி தங்கல் நிகழ்வின் இறுதிப் போட்டியாளரானார். மேலும் 2016 இல் பட்டத்தை வென்றார்.[2][3][4]

ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2017 பொதுநலவாய மல்யுத்த சாம்பியன் போட்டியில் பிஷ்னோய் தங்கப் பதக்கம் வென்றார்.[5] 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், 76 கிலோ பிரிவில் நைஜீரியாவின் பிளெசிங் ஒன்யெபுச்சியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்த பின்னர், பிஷ்னோய் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

2021 ஆம் ஆண்டில், நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன் போட்டிகளில் பெண்களுக்கான 76 கிலோ பிரிவில் வெண்கலப் பதகத்திற்கான போட்டியில் தோல்வி அடைந்தார்.[6][7] 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 72 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றார்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Sharma, Nitin (12 Apr 2018). "CWG 2018: My grandfather would have been proud, says Kiran Bishnoi after winning historic bronze". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 6 Oct 2023.
  2. Chander, Subash (12 April 2018). "नाना के साथ पहलवानी कर रेसलर बनी किरण, एक अॉपरेशन ने बचाया था कैरियर" (in Hindi). Dainik Bhaskar இம் மூலத்தில் இருந்து 18 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180818194711/https://www.bhaskar.com/harayana/panipat/news/commonwealth-games-2018-bronze-medalist-wrestler-kiran-story-5850441.html. பார்த்த நாள்: 18 August 2018. 
  3. "ऑस्ट्रेलिया में चमकी हिसार की किरण, कॉमनवेल्थ में कुश्ती में जीता कांस्य पदक" (in Hindi). Dainik Jagran. 13 April 2018 இம் மூலத்தில் இருந்து 18 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818191013/https://www.jagran.com/haryana/hisar-kiran-godara-won-the-brounze-medal-in-commanwelth-in-austrelia-17816477.html. பார்த்த நாள்: 18 August 2018. 
  4. "नाना की पहलवानी के किस्से सुन किरण ने सीखे दांव, अब बनी भारत केसरी" (in Hindi). Dainik Bhaskar. 28 November 2016 இம் மூலத்தில் இருந்து 28 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180728060300/https://www.bhaskar.com/harayana/hisar/news/HAR-HIS-OMC-kiran-win-bharat-kesari-title-news-hindi-5469228-NOR.html. பார்த்த நாள்: 18 August 2018. 
  5. "CWG: Wrestler Babita Kumari takes silver, Kiran bags bronze". தி எகனாமிக் டைம்ஸ். 12 April 2018 இம் மூலத்தில் இருந்து 18 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180818192127/https://economictimes.indiatimes.com/news/sports/cwg-wrestler-babita-kumari-takes-silver-kiran-bags-bronze/articleshow/63727892.cms. பார்த்த நாள்: 18 August 2018. 
  6. "Adelaine Maria Gray wins sixth title at Wrestling World Championships". InsideTheGames.biz. 6 October 2021. https://www.insidethegames.biz/articles/1113900/uww-world-championships-day-five. பார்த்த நாள்: 6 October 2021. 
  7. "2021 World Wrestling Championships Results Book" (PDF). United World Wrestling. Archived from the original (PDF) on 16 October 2021. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
  8. "Asian Games: Kiran Bishnoi, Aman Sehrawat clinch bronze; Bajrang misses out on medal in wrestling". Daijiworld.com. 6 Oct 2023. பார்க்கப்பட்ட நாள் 6 Oct 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_பிஷ்னோய்&oldid=3940297" இலிருந்து மீள்விக்கப்பட்டது