கிருஷ்ணா பூனியா
கிருஷ்ணா பூனியா (Krishna Poonia), இந்தியாவின் தேசிய பெண் வட்டு எரிச் சாதனையாளர் ஆவார். அக்டோபர் 11,2010 அன்று தில்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டுகளில் 61.51 மீ தொலைவிற்கு வட்டு எரிந்து தங்கப் பதக்கம் வென்றார். 2011ஆம் ஆண்டிலும் தனது வெற்றியை தக்கவைத்துக் கொள்ளுமாறு அமெரிக்காவின் போர்ட்லாண்ட் மாநிலத்தில் ஹாலோவீன் நகரில் நடந்த தட களப் போட்டியில் 62.25 மீ தொலைவிற்கு வட்டை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.[2] இவரே இந்தியாவிலிருந்து இலண்டனில் 2012ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க தகுதிபெற்ற முதல் விளையாட்டு வீராங்கனையாவார்.
XIX காமன்வெல்த் விளையாட்டு -2010 இந்தியாவின் டெல்லி கிருஷ்ணா பூனியா மகளிர் டிஸ்கஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் | ||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 5 மே 1977 அகுரோகா, அரியானா, இந்தியா | |||||||||||||||||||||||||
உயரம் | 1.86 m (6 அடி 1 அங்)[1] | |||||||||||||||||||||||||
எடை | 79 kg (174 lb; 12.4 st) (2013–present) | |||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | வட்டெறிதல் | |||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 64.76 மீ (வைலுக்கு 2012) | |||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இளமை வாழ்வு
தொகுகிருஷ்ணா இந்திய மாநிலம் அரியானாவின் இசார் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ரோகாவில் 1977ஆம் ஆண்டு பிறந்தார்.ஜெய்ப்பூர் கனோடியா பெண்கள் கல்லூரியில் சமூகவியல் படித்துள்ளார். 2000ஆம் ஆண்டு இவருக்கு இராசத்தானின் இச்சுரு மாவட்டத்தைச் சேர்ந்த ககர்வாசின் முன்னாள் தட கள வீரரான வீரேந்திர சிங் பூனியாவுடன் திருமணம் நடைபெற்றது. வீரேந்திர சிங்கும் கிருஷ்ணாவும் இந்திய இரயில்வேயில் ஜெய்ப்பூரில் பணி புரிகின்றனர்.
விளையாட்டு பணிவாழ்வு
தொகு2006 தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுகளில் 61.53 மீ தொலைவிற்கு வட்டு எரிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 46வது தேசிய விளையாட்டுக்களில் 60.10 மீ தொலைவிற்கு எரிந்து தங்கம் வென்றார். 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் தனது 58.23 மீ தொலைவு எரிதலுக்கு 10வது வந்து இறுதி சுற்றுக்கு தகதியடையவில்லை. 2010ஆம் ஆண்டு தில்லி பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கம் வென்ற முதல் பெண் விளையாட்டாளராகத் திகழ்ந்தார். பொதுநலவாய விளையாட்டுக்களில் தட கள விளையாட்டுப் பகுதியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் விளையாட்டாளராகவும் சாதனை படைத்தார்.
விருதுகள்
தொகு- 2010: அருச்சுனா விருது (இந்திய அரசு)
- மகாராணா பிரதாப் விருது (இராசத்தான் மாநில அரசு)
- பீம் விருது (அரியானா மாநில அரசு)
- 2011: பத்மஸ்ரீ
மேற்கோள்கள்
தொகு- ↑ "KRISHNA POONIA". g2014results.thecgf.com. பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு. Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ தினமணி செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]
- rajasthanpatrika பரணிடப்பட்டது 2011-09-30 at the வந்தவழி இயந்திரம்
- iaaf
- hinduonnet
- hinduonnet[தொடர்பிழந்த இணைப்பு]