கிறிசுடா ஆண்டர்சன்
கிறிசுடா ஆண்டர்சன் (Christa Anderson) உலக வனவிலங்கு அறக்கட்டளையின் ஓர் ஆராய்ச்சி உறுப்பினராவார். இவருடைய பணிகள் வன நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.
கல்வி
தொகுவரலாறு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு பாடங்களில் ஆண்டர்சன் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும், அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் மற்றும் இசுடான்போர்ட்டு பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். [1] அமேசான் மழைக்காடுகளின் ஒரு பகுதியான பெருவியன் அமேசானில் வன நிர்வாகத்திற்கான நில பயன்பாட்டுக் கொள்கையின் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் குறித்து ஆண்டர்சனின் முனைவர் பட்ட ஆராய்ச்சி பேசுகிறது. [2]
தொழில்
தொகுதனது முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பு பணிகளுக்கு இடையில், கிறிசுடா ஆண்டர்சன் கென்யாவில் உள்ள ஓர் இலாப நோக்கற்ற பாதுகாப்பு மாசாய் வனப்பகுதி பாதுகாப்பு அறக்கட்டளையில் நேரத்தை செலவிட்டார். உலக வங்கியின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் உள்ளூராட்சி பிரிவில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினார். [3]
வெளியீடுகள்
தொகு2019 ஆம் ஆண்டு கிறிசுடாவின் இயற்கை காலநிலைக்குரிய தீர்வுகள் போதாது என்ற ஆய்வுக்கட்டுரை வெளியானது. ஆண்டர்சன் காலநிலை கொள்கையை ஆதரிக்கிறார். மீள் காடு வளர்ப்பு போன்ற இயற்கை காலநிலை தீர்வுகள் மட்டுமல்லாமல் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அனைத்து எரிசக்தி துறைகளிலும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் முயற்சிகள் தேவை என்கிறார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Anderson, Christa Marie (2014-08-06). "Christa Marie Anderson". Stanford School of Earth, Energy & Environmental Sciences (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
- ↑ University, © Stanford; Stanford; Complaints, California 94305 Copyright. "E-IPER Dissertation Defense: Christa Anderson". Stanford School of Earth, Energy & Environmental Sciences (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Christa Anderson". World Bank Blogs (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
- ↑ Anderson, Christa M.; DeFries, Ruth S.; Litterman, Robert; Matson, Pamela A.; Nepstad, Daniel C.; Pacala, Stephen; Schlesinger, William H.; Shaw, M. Rebecca et al. (2019-03-01). "Natural climate solutions are not enough" (in en). Science 363 (6430): 933–934. doi:10.1126/science.aaw2741. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:30819953.