கிறிஸ்தவர் குடி பெயர்வு

கிறிஸ்தவர்கள் பெரிய அளவில் இடம்பெயர்வதால் பல நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல முஸ்லீம் நாடுகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த கிறிஸ்தவ சிறுபான்மையினரிடையே அதிக அளவில் குடிபெயர்வு விகிதம் உள்ளது. இன்று, அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மத்திய கிழக்கு மக்கள் கிறிஸ்தவர்களாவர். அரபு உலகிற்கு வெளியே வாழும் அரேபியர்களில் பெரும்பாலோர் அரபு கிறிஸ்தவர்களாவர்.

சமய பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை கிறிஸ்தவர்களை குடிபெயறத் தூண்டும் காரணிகளாக உள்ளன. மேலும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை நாடுதல், மற்றும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் சென்று சேருவது ஆகியவையும் அடங்கும்.

மத்திய கிழக்கிலிருந்து கிறிஸ்தவர் இடப்பெயர்வு தொகு

அரபு உலகிற்கு வெளியே வாழும் அரேபியர்களில் பெரும்பான்மையானவர்கள் அரபு கிறிஸ்தவர்கள் ஆவர். நிறைய கிறிஸ்தவர்கள் மத்திய கிழக்கிலிருந்து குடிபெயர்ந்துள்ளனர், இதன் காரணங்களாக பொருளாதார காரணிகள், அரசியல் மற்றும் இராணுவ மோதல்கள் மற்றும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பின்மை அல்லது தனிமை உணர்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட நிகழ்வு ஆகும். மற்ற சமயக் குழுக்களுடன் ஒப்பிடும்போது, கிறிஸ்தவர்களிடையே அதிக குடி பெயர்வு விகிதம் இருப்பதற்கு காரணம் இவர்களுக்கு வெளிநாடுகளில் வலுவான ஆதரவு வலைபின்னல்கள் இருப்பதும் ஒரு காரணமாகும்.

எகிப்து தொகு

பெரும்பாலான புலம்பெயர் அரேபியர்களைப் போலவே, எகிப்திய புலம்பெயர்ந்தோரில் கணிசமானவர்களாக அரபு கிறிஸ்தவர்களாக உள்ளனர். கோப்துக்கள் எகிப்திலிருந்து தங்கள் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், தங்கள் தாயகத்தில் துன்புறுத்தல் மற்றும் பாரபட்சம் போன்றவற்றில் இருந்து தப்பிப்பதற்கும் குடிபெயர்கின்றனர்.

ஈரான் தொகு

கிறிஸ்தவர்களும் பிற சமய சிறுபான்மையினரும் ஈரானிய புலம்பெயர்ந்தோரின் விகிதாச்சாரத்தில் அதிக அளவைக் கொண்டுள்ளனர்.

ஈராக் தொகு

ஈராக் போரைத் தொடர்ந்து, ஈராக்கில் கிறிஸ்தவ மக்கள் தொகை சரிந்துள்ளது. ஏறக்குறைய பத்து லட்சம் அசிரோ-கல்தேய கிறிஸ்தவர்களில், பெரும்பாலானவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளில் குடியேறியுள்ளனர். மீதமுள்ளவர்களில் பெரும்பாலோர் ஈராக்கிய குர்திஸ்தானின் வடக்கு குர்திஷ் பகுதிக்குள் குவிந்துள்ளனர். ஈராக்கிய கிறிஸ்தவர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல் அல்லது தீவிர இஸ்லாமிய வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்.

2003 ல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்ததிலிருந்தும், அதன் விளைவாக அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததிலிருந்தும், பல சிரிய மொழி பேசும் அசீரியர்களும் பிற கிறிஸ்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறி, சிரியா, ஜோர்தான் மற்றும் பிற வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் மக்கள் தொகை சதவீதம் 1948 இல் 12% (4.8 மில்லியன் மக்கள் தொகை), 1987 இல் 7% (20 மில்லியன்) மற்றும் 2003 இல் 6% (27 மில்லியன்) ஆக குறைந்துள்ளது. ஈராக்கின் மக்கள்தொகையில் 3% மட்டுமே அசீரியர்கள் என இருந்தபோதிலும், 2005 அக்டோபரில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 2003 அக்டோபர் மற்றும் 2005 மார்ச்சுக்கு இடையில் சிரியாவில் தஞ்சம் புகுந்த 700,000 ஈராக்கியர்களைப் பற்றி அறிக்கை வெளியிட்டது. அதன்படி இந்த புலம் பெயர்ந்த மக்களில் 36% பேர் "ஈராக்கிய கிறிஸ்தவர்கள்" ஆவர்.

லெபனான் தொகு

லெபனான் கிறி்ஸ்தவர்கள் பல தலைமுறைகளாக பெரிய அளவில் இடம்பெயர்வை அனுபவித்திருக்கின்றனர். லெபனானைவிட்டு வெளியேறியவர்கள் (8.6 [1] -14 [2] மில்லியன்) மக்களாவர். புலம்பெயர் மக்களில் பெரும்பாலோர் லெபனான் கிறிஸ்தவர்கள் என்றாலும், இதில் முஸ்லிம், துருஸ், யூதர்களும் உள்ளனர். உதுமானிய சிரியாவில் 1860 லெபனான் மோதலைத் தொடர்ந்து நடைபெற்ற குடிபெயர்வில் தொடங்கி, கிறிஸ்தவ குடிபெயர்வின் பல அலைகளை அவை தோன்றிவித்தன .

தற்போதைய லெபனான் தேசிய சட்டத்தின்படி, புலம்பெயர்ந்த லெபனானியர் மீண்டும் லெபனானுக்கு திரும்புவதற்கான தன்னிச்சையான உரிமை இல்லை . புலம்பெயர்ந்த லெபனானினியர்களுக்கு பிற இனத்தவருடன் ஏற்படும் கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் அதிக அளவில் பிற இனத்தவருடனான திருமணங்கள் போன்றவை பெரும்பாலான புலம்பெயர்ந்த லெபனானியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரபு மொழியை கற்பிக்காததால், மொழி நகர்வுவுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் அவர்கள் இன்னும் லெபனான் இன அடையாளத்தை பராமரிக்கின்றனர்.

லெபனான் உள்நாட்டுப் போர் கிறிஸ்தவ குடிபெயர்வு விகிதத்தை மேலும் அதிகரித்துள்ளது. முஸ்லீம் பிறப்பு விகித அதிகரிப்பு, லெபனானில் பாலஸ்தீனியர்கள் மற்றும் சிரிய புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றோரின் வருகை போன்றவை லெபனான் மக்கள் தொகையில் கிறிஸ்தவல்களின் விகிதம் குறைவதற்கான காரணங்களாக உள்ளன. லெபனான் கிறிஸ்தவர்கள் இன்னும் கலாச்சார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் மக்கள் தொகையில் 35-40% என உள்ளனர்.[3]

பாலஸ்தீனிய ஆணையம் (மேற்குக் கரை மற்றும் காசா) தொகு

பாலஸ்தீனிய கிறிஸ்தவர்களின் இடப்பெயர்வு 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான உதுமானிய அரசின் பாகுபாட்டின் விளைவாக தொடங்கியது. 1948 மற்றும் 1967 ஆக்கிரமிப்புகள் மற்றும் போர்கள் பல கிறிஸ்தவர்களை தங்கள் இடங்களை விட்டு வெளியேறவோ அல்லது வீடுகளை இழக்கும் நிலைக்கோ ஆளாயினர். பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையில், கணிசமான குடிபெயர்வு ஏற்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் காசாவை ஹமாஸ் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான காசா கிறிஸ்தவர்கள் காசா பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மேற்குக் கரைக்கு இடம் பெயர்ந்தனர்.

சிரியா தொகு

சிரியாவிற்கு வெளியே (15 [4] மில்லியன்), (18 மில்லியனுக்கும் அதிகமான) சிரிய மக்கள் வாழ்கின்றனர். புலம்பெயர் மக்களில் பெரும்பாலோர் சிரிய கிறிஸ்தவர்கள் . உதுமானிய சிரியாவின் காலத்திலிருந்து வெளியேற்றம் தொடங்கி, கிறிஸ்தவ குடிபெயர்வு பல அலைகளாக தோன்றின.

தற்போதைய தேசிய சட்டத்தின்படி, புலம்பெயர் சிரியர்கள் தானே சிரியாவிற்கு திரும்புவதற்கான உரிமை இல்லை .[சான்று தேவை] புலம்பெயர்ந்த சிரியர்களுக்கு பிற இனத்தவருடன் ஏற்படும் கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் அதிக அளவில் பிற இனத்தவருடனான திருமணங்கள் போன்றவை பெரும்பாலான புலம்பெயர்ந்த சிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரபு மொழியை கற்றுத்தராததால், மொழி நகர்வுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் அவர்கள் இன்னும் சிரிய இன அடையாளத்தை பராமரிக்கின்றனர்.

2011 இல் சிரிய உள்நாட்டுப் போர் வெடித்தது, கிறிஸ்தவர்களை இஸ்லாமி தீவிரவாதிகள் குறிவைத்தனர். எனவே அவர்கள் சிரிய அகதிகளில் ஒரு முக்கிய பகுதியாகிவிட்டனர்.

2016 நிதியாண்டில், சிரியாவிலிருந்து அனுமதிக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கையை அமெரிக்கா வியத்தகு முறையில் அதிகரித்தபோது, சிரியாவிலிருந்து 12,587 அகதிகளை அமெரிக்கா அனுமதித்தது. அதில் 99% முஸ்லிம்கள் (சில ஷியா முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டனர்). இதில் 1% க்கும் குறைவானவர்கள் கிறிஸ்தவர்கள் என்று வெளியுறவுத்துறை அகதிகளின் தரவுகளின் பியூ ஆராய்ச்சி மைய பகுப்பாய்வு கூறுகிறது.[5]

2016 ஆம் ஆண்டில் சிரியாவின் 17.2 மில்லியன் மக்களின் சமய விகித்ததில் சுமார் 74% சுன்னி இஸ்லாமியர், 13% அலவி, இஸ்மாயிலி மற்றும் ஷியா இஸ்லாமியர், 10% கிறிஸ்தவர் மற்றும் 3% துரூஸ் ஆவர்.[6] உள்நாட்டுப் போரினால் சிரிய மக்கள் தொகை 6 மில்லியனுக்கும் அதிகமாக குறைந்துள்ளது.

துருக்கி தொகு

ஆரம்பத்தில் இருந்து, இப்போதுவரை துருக்கியில் இருந்து குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் கிரேக்க அகதிகள் உட்பட உதுமானிய பேரரசின் கிறிஸ்தவ குடிமக்கள் ஆவர். தற்போது, துருக்கியில் இருந்து குடிபெயர்வதில் முதன்மையாக முஸ்லிம்கள் உள்ளனர்.

ஆர்மீனிய இனப்படுகொலை, போன்றவை நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளாகும். இதன் காரணமாக துருக்கியில் உள்ள கிறிஸ்தவர்களின் சதவீதம் 1914 இல் 19% (உதுமானியர்களால் சரியாக எண்ணப்படாததின் காரணமாக உண்மையில் 24% வரை இருக்கலாம்) என இருந்து 1927 இல் 2.5% ஆக குறைந்தது.[7] 500,000 கிரேக்கர்கள் மற்றும் 375,000 அசிரிய கிறிஸ்தவர்கள் என கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான மக்கள்தொகை பரிமாற்றம் [8] மற்றும் கிறிஸ்தவர்கள் (லெவாண்டின்ஸ், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள் போன்றவர்) வெளிநாடுகளுக்கு (பெரும்பாலும் ஐரோப்பா, அமெரிக்கா, லெபனான் மற்றும் சிரியாவில் ) குடியேறியது போன்றவை உண்மையில் தொடங்கியது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ஆகும். குறிப்பாக முதலாம் உலகப் போரின்போதும், துருக்கிய சுதந்திரப் போருக்குப் பின்னரும் இது வேகம் பெற்றது.[9] உதுமானிய மக்கள் தொகை கணக்கெடுப்புகள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டுள்ளன, இது மக்கள் தொகையில் 24.5% ஐ ஒட்டியதாக இருந்தது. இன்று, வெவ்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த 160,000 க்கும் அதிகமான மக்கள் துருக்கியின் மக்கள்தொகையில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளனர்.[10] இன்று துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 0,3-0.4 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வெவ்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த 200,000-320,000 க்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.[11]

தெற்காசியாவிலிருந்து கிறிஸ்தவர் குடிபெயர்வு தொகு

இந்தியா தொகு

இந்தியாவிலிரு்தும் கிறிஸ்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் சொந்த காரணங்களுக்காகவும் குறைந்த அளவு இடம்பெயர்கின்றனர். தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் இந்தியா அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது. மேலும், அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா மக்களுக்கு மிகவும் பிடித்த சுற்றுலா தலமாக இந்தியா திகழ்கிறது.

பாகிஸ்தான் தொகு

இஸ்லாமிய அவமதிப்பு சட்டங்களைப் பயன்படுத்துவதன் எதிரொலியாக கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

கிழக்கு ஆசியாவிலிருந்து கிறிஸ்தவர் குடிபெயர்வு தொகு

சீனா தொகு

சீனாவிலிருந்தும் கிறிஸ்தவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர். குறிப்பாக சமயத் துன்புறுத்தல் அலைகளுக்கு எதிர்வினையாக சீனாவில் இருந்து குடிபெயர்ந்துவருகின்றனர் சீன அரசு ஒரு கம்யூனிச அரசு என்பதால், அது அறிவிக்கப்பட்ட இறை மறுப்பு அரசாக உள்ளது .

வட கொரியா தொகு

வட கொரியாவிலிருந்தும் கிறிஸ்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக சமயத் துன்புறுத்தல் அலைகளுக்கு எதிர்வினையாக சீனாவில் இருந்து குடிபெயர்ந்துவருகின்றனர் வட கொரிய அரசு ஒரு கம்யூனிச அரசு என்பதால், அது அறிவிக்கப்பட்ட இறை மறுப்பு அரசாக உள்ளது ..

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Bassil promises to ease citizenship for expatriates". Archived from the original on 2018-09-02. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
  2. "Country Profile: Lebanon". FCO. 3 April 2007. Archived from the original on 6 February 2008.
  3. "Archived copy". Archived from the original on 2006-04-27. பார்க்கப்பட்ட நாள் 2005-10-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. Singh, Shubha. "Like India, Syria has a large diaspora (With stories on Syrian president's visit)". Theindian News. Archived from the original on October 16, 2014. பார்க்கப்பட்ட நாள் March 15, 2014.
  5. "State Department refugee data". http://www.pewresearch.org/fact-tank/2016/10/05/u-s-admits-record-number-of-muslim-refugees-in-2016/. 
  6. "CIA Factbook" இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225073748/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sy.html. 
  7. Içduygu, Ahmet; Toktas, Şule; Ali Soner, B. (1 February 2008). "The politics of population in a nation-building process: emigration of non-Muslims from Turkey". Ethnic and Racial Studies 31 (2): 358–389. doi:10.1080/01419870701491937. 
  8. Chapter The refugees question in Greece (1821-1930) in "Θέματα Νεοελληνικής Ιστορίας", ΟΕΔΒ ("Topics from Modern Greek History"). 8th edition (PDF), Nikolaos Andriotis, 2008
  9. "'Editors' Introduction: Why a Special Issue?: Disappearing Christians of the Middle East" (PDF). Editors' Introduction. 2001. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  10. "Religions". Central Intelligence Agency. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. name="cia-rel"

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தவர்_குடி_பெயர்வு&oldid=3928931" இலிருந்து மீள்விக்கப்பட்டது